சமூக வலைத்தள ஜாம்பவான்களில் ஒன்று ஃபேஸ்புக். நம்மில் பலர் முதன்முதலாக நுழைந்த சமூக வலைத்தளம் பேஸ்புக்காகத் தான் இருக்கும். நீண்ட கட்டுரைகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஷார்ட்ஸ் என பல பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருக்கிறது பேஸ்புக். ஆனால் இப்போது பேஸ்புக் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ட்விட்டரின் முன்னாள் இந்தியத் தலைவரான மனிஷ் மகேஸ்வரி ஃபேஸ்புக் எப்போது மூடப்பட்டாலும் எனக்கு ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார்.
ட்விட்டரின் முன்னாள் இந்திய சி.இ.ஓ-வான மகேஸ்வரி ஃபினான்ஸியல் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு பேசினார்.
ட்விட்டர், அமேசான் வரிசையில் மெட்டா நிறுவனமும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. சமூக வலைத்தளங்கள் தங்களது தொழில் முறையில் மாற்றம் ஏற்படுத்துவதே இந்த பணி நீக்கத்துக்கு காரணம் என்கிறார் மகேஸ்வரி.
தொடர்ந்து, "பேஸ்புக் நிறுவனம் இழுத்து மூடப்பட்டாலும் அதில் எனக்கு எந்த வித அதிர்ச்சியும் இருக்காது. இன்ஸ்டாகிராம் அதன் ரீல்ஸ் வசதி மற்றும் வீடியோக்களால் வளர்ச்சியடைந்து வருகிறது. நிறுவனம் அதில் கவனம் செலுத்துகிறது. வாட்ஸ்அப் அதிக பயனர்களைக் கொண்டிருந்தாலும் அதனை எப்படி பணமாக்குவது என்று இதுவரை நிறுவனம் திட்டமிடவில்லை." என்றுப் பேசினார்.
அதனுடன், "மெட்டாவெர்ஸ் எதிர்காலத்துக்காக அதன் ரியாலிட்டி ஆய்வகங்களுடன் தயாராகி வருகிறது. இப்போதைக்கு எக்ஸிக்யூடிவ் திட்டங்கள் இல்லை. இதனால் ஒட்டுமொத்தமாக மெட்டா நிறுவனத்துக்கு அதிக ஊழியர்கள் தேவையில்லை" எனவும் கூறினார்.
மேலும், "லாக்டவுன் நேரத்தில் சமூக வலைத்தளங்கள் அதிக நுகர்வோரைப் பெற்றன. இதனால் தொற்று நோய் இறுதிக்கட்டத்தில் நிறுவனங்கள் அதிக ஊழியர்களை வேலைக்கு எடுத்ததாகவும் அதன் பிறகு மீண்டும் அலுவலகங்கள் செயல்படத் தொடங்கியதால் நிலைமை சாதாரணமானது" என்றும் மகேஸ்வரி தெரிவித்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust