Lizard Choker
Lizard ChokerTwitter

Zara அறிமுகப்படுத்திய பல்லி வடிவ சோக்கர்கள் - அலங்காரமா? அருவருப்பா?

இந்தியாவின் மிகப் பெரிய ஃபேஷன் அப்பேரல் கம்பனியான ஜாரா அறிமுகப்படுத்தியுள்ள பல்லி வடிவ சோக்கர்கள் மற்றும் மோதிரங்கள், இணைய வாசிகளின் மத்தியில் மிக்ஸட் ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது.
Published on

இந்தியாவின் வித விதமான ஆடை, ஆபரணங்கள் வடிவமைப்புகளுக்குப் பெயர்பெற்றது ஃபேஷன் அப்பேரல் நிறுவனமான ஜாரா. தன் தனித்துவமான டிசைன்களால் வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடத்தில் இருக்கும் ஜாராவின் புதிய டிசைன், ஆச்சரியப்பட வைக்கிறது எனவும் அருவருப்பாக உள்ளது எனவும் கலவையான கருத்துக்களைப் பெற்று வருகிறது.

குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த ஃபேஷன் இன்ஃப்ளுயன்ஸர் கோபாலி திவாரி, ஜாராவின் ஒரு அவுட்லெட்டில் பல்லி வடிவத்தில் சோக்கர்கள், மோதிரங்கள் கண்டு அதிசயித்ததாக தெரிவித்தார். இதன் விலை இரண்டாயிரம் ரூபாயாம். இந்த விசித்திர டிசைனை கண்ட கோபாலி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிட்டு, இணையத்தின் கவனத்தை ஈர்த்தார்.

Internet's take
Internet's takeTwitter
Lizard Choker
Summer Health Tips: வெயிலினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் - பாதுகாப்பது எப்படி?

"இவ்வாறான ஆபரணங்களை யார் அணிவார்? இந்த டிசைனை அணியும் பெண்களை இதில் தயவு செய்து டேக் செய்யவும்", எனவும் குறிப்பிட்டிருந்தார் கோபாலி.

ஃபேஷனில் வரைமுறையோ, எல்லைகளோ கிடையாது. மிருக வடிவ ஜுவல்லரிகள் புதியவை அல்ல. என்றபோதிலும், பார்ப்பதற்கு அரிய, கேட்டதற்கு அரிய வடிவங்களில் உடைகளும், ஆபரணங்களும் ஃபேஷன் மார்கெட்டில் அவ்வப்போது வந்துபோகும் நேரங்களில், அதை ட்ரோல் செய்யவோ பாராட்டவோ தவறுவதில்லை இந்த இன்டெர்னெட் தலைமுறை.

Lizard Choker
Aliens : 100 ஆண்டுகளாய் வேற்றுகிரகவாசிகளுடன் பேச முயலும் மனித குலம் - முழுமையான வரலாறு

இரண்டு விதத்திலும் விஷயம் பலரை சென்றடைந்து விடுகிறது. இப்போது ட்ரோல் விஷயமாக இருக்கும் இந்த லிஸார்ட்-இன்ஸ்பயர்டு டிசைன்கள், நாளை ட்ரெண்டாகவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் ஃபேஷன் பிரியர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.


Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.


Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:


Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

logo
Newssense
newssense.vikatan.com