Influencer ஆகும் திட்டத்தில் 2K Kids - புதிய ஆய்வு சொல்வதென்ன?

இப்போது பலரும் முதன்முதலாக புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போதே இன்ஃப்ளூயன்சராக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட தொடங்கிவிட்டனர்.
Influencer
InfluencerTwitter

உங்கள் நட்பு வட்டாரம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதில் ஒருவருக்கு சமூக வலைத்தளத்தில் இன்ஃப்ளூயன்சராக மாற ஆசை இருக்கும். அதற்கான மூலதனம் என்பது மிகக் குறைவு தான்.

மிகச் சாதாரணமாக புகைப்படங்கள் வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்பவர்கள் கூட திடீரென இன்ஃப்ளூயன்சராக மாறிவிட்ட பல கதைகளை கேட்டிருப்போம்.

இப்போது நம் செல்போன் திரையில் தினசரி வந்து செல்லும் பலர் அப்படி திடீரென பிரபலமானவர்கள் தான்.

ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது பலரும் முதன்முதலாக புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போதே இன்ஃப்ளூயன்சராக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட தொடங்கிவிட்டனர்.

இது நம் ஊரை விட அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் அதிகம் இருக்கிறது.

இன்ஃப்ளூயன்சர்களை பின் தொடரும் சமூகம்

ஃபேஷன், பயணம், தொழில்நுட்பம், கலை மற்றும் இசை என அனைத்தையுமே நாம் இன்ஃப்ளூயன்சர்களை பின் தொடர்ந்து தான் செய்கிறோம். எல்லாவற்றுக்குமே இன்ஃப்ளூயன்சர்கள் இருக்கின்றனர்.

இன்ஃப்ளூயன்சர் என்பது ஒரு மிகப் பெரிய தொழிலாக மாறிவிட்டது. இது தளர்வடையை வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பிடித்திருக்கிறது இந்த இன்ஃப்ளூயன்சர் மோகம்.

பெற்றவர்களின் முகங்களைப் பார்க்கத் தொடங்கும் முன்னே செல்போனைப் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர் இன்றைய குழந்தைகள். அவர்களுக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா சோசியல் மீடியா ஆர்வம்?

Ryan Kaji என்ற 10 வயது சிறுவன் யூடியூப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் இன்ஃப்ளூயன்சர்களில் ஒருவராக திகழ்கிறார். அமலா சாஜி முதல் ஜனனிமா வரை பல குட்டி குட்டி இன்ஃப்ளூயன்சர்கள் நம்ம ஊர் இன்ஸ்டாவை ஆள்கின்றனர்.

Ryan Kaji
Ryan Kaji
Influencer
Jananima Official : மழலை மொழி பொழியும் மகாராணி யார் தெரியுமா?

இன்ஃப்ளூயன்சராக விரும்பும் இளைஞர்கள்

16 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் பெரும்பாலும் இன்ஃப்ளூயன்சராக மாற வேண்டும் என்று நினைக்கின்றனர். Gen Z தலைமுறையினரில் நான்கில் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனை அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

விளம்பரங்கள், ஸ்பான்சர்ஷிப் மற்றும் உள்ளடக்கம் ஆகிய வழிகளில் பல லட்சங்கள் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பல இளைஞர்களிடம் இருக்கிறது என்பதை அந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

Influencer
Search Engine -ஆக பயன்படுத்தப்படும் Insta, Tiktok - 2K கிட்ஸிடம் தோற்று போகிறதா Google?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com