பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த குரங்குகள் - வைரல் வீடியோ

மெக்சிகோவில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் ஒரு பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த குரங்குகள், நீண்ட நேரமாக அவரை விடாமல் இருந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Spider Monkey
Spider MonkeyPexels
Published on

கூண்டில் அடைப்பட்டிருந்த குரங்குகளிடம் ஒரு பெண் சென்று தொடர்ந்து வம்புக்கு இழுக்க, ஆத்திரத்தில் குரங்குகள் அந்த பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்த சம்பவம் மெக்சிகோவில் நிகழ்ந்துள்ளது

பொதுவாக மனிதர்களை விலங்கியல் பூங்காக்களில் உள்ளே அனுமதிக்கும் போது விலங்குகளிடமிருந்து விலகி இருக்க எச்சரிக்கை கொடுப்பார்கள். காரணம் மனிதர்களுக்கு அவ்விலங்குகளினால் எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது தான். இன்னொரு புறம், மனிதர்களும் விலங்குகளை அவதிக்கு உள்ளாக்கக் கூடாது என்பது அவர்களது நோக்கம்.

Woman captured by monkey
Woman captured by monkey youtube

விலங்குகளுக்கு இடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற நாம் அதற்கு பயிற்சியளிப்போம். அதற்கேற்றவாறு விலங்குகளும் நடந்துக்கொள்ளும். ஆனால் மனிதர்கள் அப்படியில்லை. வாய் வார்த்தையாக சொன்னாலும் சரி, எழுதி வைத்திருந்தாலும் சரி சிலவற்றைப் பின்பற்ற மாட்டார்கள்.

அதிலும் வாயில்லா ஜீவன்களை தொந்தரவு செய்யக்கூடாது என்ற அடிப்படை விஷயம் தெரிந்திருந்தாலும், அவர்களது சந்தோஷத்திற்காக விலங்குகளை துன்புறுத்துவது நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது கேட்கும் விஷயங்களே.

அப்படித் தான் ஒரு பெண் இங்கு குரங்குகளிடம் வம்பிழுத்துள்ளார். ஆத்திரத்தில் அந்த குரங்குகளும் அப்பெண்ணை பழிவாங்கியுள்ளது. அதன் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது

Spider Monkey
இளைஞரை இழுத்துப் பிடித்த குரங்கு - இணையத்தில் வைரலான கிளாமர் அப்பீல் சம்பவம்

மெக்சிகோவில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவிற்கு சென்ற பெண் ஒருவர், ஸ்பைடர் மங்கி வகை குரங்குகள் அடைபட்டிருக்கும் கூண்டிற்கு அருகில் செல்கிறார். சென்ற சிறிது நேரத்திலேயே அந்த கூண்டுகளை அடித்து குரங்குகளிடம் சேட்டை செய்துள்ளார். குரங்குகள் சட்டென்று அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்துக்கொண்டன.

எவ்வளவோ முயற்சித்தும், அந்த பெண் குரங்குகளிடமிருந்து தப்ப முடியவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து அரும்பாடு பட்டு அந்த பெண்ணை குரங்கின் பிடியிலிருந்து விடுவித்தனர்.

தப்பித்த அந்த பெண், அங்கிருந்து செல்வதற்காக மீண்டும் கூண்டின் வழியாகவே நடந்து செல்ல, மீண்டும் குரங்குகள் அவரின் தலையை பிடித்துக்கொண்டன. இந்த முறை அவரே தப்பித்து ஓடிவிட்டார். இதில் அவருக்கு எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை.

பலரும் அந்த பெண் மீது தான் தவறு, அந்த குரங்குகள் குற்றமற்றது என்று சொல்லிவ்வருகின்றனர். இந்த வீடியோ டிக் டாக்கில் பகிரப்பட, இணையத்தில் வைரலாகி வருகிறது

Spider Monkey
ஜமைக்கா: சிங்கத்திடம் கடி வாங்கிய காப்பாளர் - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com