Beer Sneakers : இணையத்தை கலக்கும் பீர் நிரப்பிய ஷூ - என்ன ஸ்பெஷல்?

ஹைனெகென் நிறுவனத்தின் ஹைனெகென் சில்வர் பீர் மிகவும் பிரபலம். அதனை வைத்து தான் இந்த பீர் நிரம்பிய ஸ்னீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
Heineken Silver Sneaker
Heineken Silver SneakerTwitter
Published on

பிரபல பீர் தயாரிக்கும் நிறுவனமான ஹைனெகென் புதிய வகை பீர் ஸ்னீக்கர்களை தயாரித்துள்ளது

ஃபேஷனை பொருத்தவரை வரையறைகள் இல்லை. ஆடைகளானாலும், அணிகலன்களானாலும், மற்ற அக்ஸசரீஸ் ஆனாலும் சந்தையில் வித்தியாசமான வடிவங்கள் கொண்ட எதுவும் மக்கள் கவனத்தை ஈர்த்துவிடும். அந்த வகையில் பீர் ஸ்னீக்கர்கள் தான் தற்போது டிரெண்டில் இருக்கும் ஃபேஷன்.

பிரபல பீர் தயாரிப்பு நிறுவனமான ஹைனெகென் (Heineken), தி ஷூ சர்ஜன் என்ற ஷூ நிறுவனத்துடன் புதிய வகை ஷூ ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த புதிய வகை ஸ்னீக்கர்களில் பீர் நிரப்பப்பட்டிருக்கும்.

அதே போல அதை திறப்பதற்கு ஒரு ஓபனரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஷூவின் அடி பாகத்தில், (sole) பீர் நிரப்பப்பட்டுள்ளது. இந்த ஸ்னீக்கர்களை வடிவமைத்தவர் டாமினிக் சியம்ப்ரோன. இந்த ஸ்னீக்கரில் மேல் பாகத்திலும் ஒரு டியூபில் ஹைனெகென் சில்வர் பீரை நிரப்பியுள்ளனர்.

Heineken Silver Sneaker
சிறுநீரிலிருந்து தயாரிக்கப்படும் ‘பீர்' - எங்கு தெரியுமா?

ஹைனெகென் நிறுவனத்தின் ஹைனெகென் சில்வர் பீர் மிகவும் பிரபலம். அதனைக் கொண்டு தான் இந்த பீர் நிரம்பிய ஸ்னீக்கர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த ஸ்னீக்கர்களில் நிரப்பப்பட்டிருப்பது ஹைனெகென் சில்வர் பீர் தான்.

இதன் பெயர் ஹைனெகிக்ஸ். பச்சை, சில்வர், சிகப்பு ஆகிய நிறங்கள் இந்த ஸ்னீக்கர்களில் முதன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்னீக்கர்களிலிருந்து பீர் சிந்தாமல் இருக்க, சர்ஜிகல் இன்ஜெக்ஷன் முறையில் பானத்தை உள் செலுத்தியுள்ள நிறுவனம், அவை வெளியேறாதவாறு அமைத்துள்ளனர்.

Heineken Silver Sneaker
பீர் மேகி to குலாப் ஜாமுன் பீட்சா - 2022 ஒரு உணவாக இருந்தால்?

இந்த ஸ்னீக்கர்களை பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்கிறது நிறுவனம். காரணம், உள்ளே நிரப்பப்பட்டுள்ள பீர் நாம் நடக்க நடக்க மேலும் கீழும் அலையாடுவதால் கனமும் அதற்கேற்றவாறு ஏரி இறங்கும். இந்த பீரை நாம் அருந்த முடியாது என்றாலும், அதன் மீது நடக்கும் அனுபவம் எல்லா நேரத்திலும் கிடைக்காது என விளமபரப்படுத்தி வருகிறது நிறுவனம்.

இந்த புதிய வகை ஷூக்கள் லிமிடட் எடிஷன் என அறிவித்துள்ளது நிறுவனம். இப்போதுவரை 32 மாதிரிகளை தயாரித்துள்ள நிறுவனம், ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இவை சந்தைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்னீக்கர் குறித்த அறிவிப்பு வந்தவுடன் நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு இந்த ஸ்னீக்கர் வேண்டும் என ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் இதற்குள் இருக்கும் பீரை ஒரு முறை வெளியேற்றிவிட்டால் மீண்டும் நிரப்பிக்கொள்ளலாமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

Heineken Silver Sneaker
பாகிஸ்தான் நாட்டில் பட்டையை கிளப்பும் சீன தேசத்து பீர் - இதுதான் அந்த அடிபொலி காரணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com