10 weird and wonderful facts about Mongolia
10 weird and wonderful facts about MongoliaTwitter

மங்கோலியா : எப்போதும் சூடான தேநீருடன் காத்திருக்கும் நாடோடிகள்- யாருக்காக? அடடே தகவல்கள்

மங்கோலியா உங்கள் ட்ராவல் பக்கெட் லிஸ்டில் இருக்கத் தகுதியான அல்லது புதிரான இடமாக இருப்பதற்கான பத்து காரணங்கள் இங்கே உள்ளன
Published on

உலகின் இரண்டாவது பெரிய நிலஞ்சூழ் நாடாக அறியப்படும் மங்கோலியா, ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது.

இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

மங்கோலியா உங்கள் பக்கெட் லிஸ்டில் இருக்கத் தகுதியான அல்லது புதிரான இடமாக இருப்பதற்கான பத்து காரணங்கள் இங்கே உள்ளன. அவற்றை இங்கே காணலாம்.

1. அழியும் அபாயத்தில் இருக்கும் ஹம்ப்ட் பாக்டிரியன் ஒட்டகம் மங்கோலியாவை பூர்வீகமாகக் கொண்டது

இரண்டு கூம்புகள் கொண்ட பாக்டிரியன் ஒட்டகம் மங்கோலியாவைச் சேர்ந்தது. கடந்த பன்னிரெண்டு வருடங்களாக தொடர்ந்து குறைந்து வரும் பாக்டிரியன் ஒட்டகங்களின் எண்ணிக்கையை பாதுகாக்க அரசு சாரா நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஆயிரம் ஒட்டக திருவிழா நடத்தப்படுகிறது.

திருவிழாவில் நீங்கள் ஒட்டகங்களுடன் பழகுவதற்கும் ஒட்டக மேய்ப்பவர்களின் நாடோடி வாழ்க்கை முறையைப் பற்றி நேரடியாக அறிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பைப் பெறுவீர்கள்.

2. விருந்தினர்களை வரவேற்கும் மங்கோலியர்கள்

இந்த தொலைதூர நாட்டில், தொடர்பு கடினமாக இருக்கலாம், ஆனால் சமூக உணர்வைப் பேணுவது முக்கியமானதாக உள்ளது. மங்கோலிய கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் எப்போதும் பார்வையாளர்களுக்காக ஒரு கிண்ணத்தில் சூடான பால், தேநீர் தயாராக வைத்திருப்பார்கள்.

3.ஐஸ்கிரீம் ஒரு பிடித்தமான குளிர்கால விருந்து

குளிர்காலத்தில் சிறு வியாபாரிகள் காகித பெட்டிகளில் இருந்து தெருவில் ஐஸ்கிரீம் விற்கிறார்கள். என்னதான் அங்கு வெப்பநிலை -30 டிகிரி செல்சியஸில் இருந்தாலும் ஃப்ரிட்ஜே தேவையில்லை என்றாலும் அதனை விரும்பி வாங்கி சுவைப்பார்களாம்.

10 weird and wonderful facts about Mongolia
மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!

கழுகு வேட்டைக்கு திருவிழா

பழமையான கசாக் மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்களுக்கு கோல்டன் ஈகிள் திருவிழா நடத்தப்படுகிறது. குதிரையில் கழுகு வேட்டையாடுபவர்களின் அணிவகுப்புடன் இது தொடங்குகிறது.

மங்கோலியாவின் ஸ்தாபக தந்தை செங்கிஸ் கான்

மங்கோலியாவின் ஸ்தாபக தந்தையாக செங்கிஸ் கான் கருதப்படுகிறார். வடகிழக்கு ஆசியாவின் பல நாடோடி பழங்குடியினரை ஒன்றிணைத்து, 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் மட்டுமே மிஞ்சும் உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவுவதன் மூலம் அவர் ஆட்சிக்கு வந்தார்.

வெறும் 25 ஆண்டுகளில், செங்கிஸ் கானின் குதிரை வீரர்கள் நான்கு நூற்றாண்டுகளில் ரோமானியர்கள் செய்ததை விட அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியை கைப்பற்றினர்.

10 weird and wonderful facts about Mongolia
செங்கிஸ்கான் கல்லறை : ரகசியம் காக்க காரணம் இதுதானா?

உலகின் மிக உயரமான குதிரை சிலை

செங்கிஸ் கானின் 40-மீட்டர் (131-அடி) சிலை உளான்பாத்தருக்கு வெளியே அமைந்துள்ளது. இது உலகின் மிக உயரமான குதிரை சிலை ஆகும்.

மங்கோலியா பெரிய நாடு

நெதர்லாந்து போன்று முப்பத்தேழு மடங்கு இந்த மங்கோலியா பெரியது என்று கூறப்படுகிறது. இது உலகின் 18வது பெரிய நாடு எனவும் அறியப்படுகிறது.

பனிச்சிறுத்தைகளின் தாயகமாகும்

பனிச்சிறுத்தைகள் மங்கோலியாவை பூர்வீகமாகக் கொண்டவை. வேடிக்கையான உண்மை என்வென்றால் பனிச்சிறுத்தையால் கர்ஜிக்கவோ அல்லது துரத்தவோ முடியாது.

டைனோசர்
டைனோசர்NewsSense

டைனோசர்கள் நடமாடிய பூமியா?

1920 களில், மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் டைனோசர் முட்டைகளுடன் அதன் புதைபடிவ எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

10 weird and wonderful facts about Mongolia
பழமையான மீனின் இதயம் முதல் டைனோசர் முட்டை வரை : 2022-ன் விநோதமான கண்டுபிடிப்புகள்

நாடோடிகளாக வாழ்கின்றனர்

மங்கோலியாவில் மூன்று மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 25 முதல் 40 சதவீதம் பேர் நாடோடிகளாக வாழ்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com