ரஷ்யாவிலிருந்து வெளியேறும் 15,000 கோடீஸ்வரர்கள் : இதுதான் காரணம் - விரிவான தகவல்கள்

உக்ரைனுடன் போர் புரிந்துகொண்டு அதை வைத்து ரஷ்ய அரசு ஒரு பக்கம் மார்தட்டிக் கொண்டிருக்கும் நிலையில், புதினின் ஆட்சி மீது அதிருப்தி அடைந்து 15 ஆயிரம் பெரும் செல்வந்தர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
Putin
PutinTwitter

ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 820 ஆயிரம் பிரிட்டன் பவுண்டு சொத்து வைத்திருக்கும் ரஷ்யர்களில், 15 சதவீதம் பேர் இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறப் போகிறார்கள் என்கிறது அந்த தகவல்.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஹென்லே அண்ட் பாட்னர்ஸ் எனும் இடப்பெயர்வுப் புள்ளிவிவர நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் பணக்கார நாடுகள், குடியுரிமையை விற்கும் நாடுகளுக்கு இடையிலான செயல்பாடுகளில் முன்னணியாக இருந்துவரும் இந்த நிறுவனத்தின் அறிக்கையால், ரஷ்ய அதிபர் புதினின் பெருமிதக் கதையில் ஓட்டை விழுந்திருக்கிறது எனக் கருதப்படுகிறது.

Russia-Ukraine War
Russia-Ukraine WarTwitter

ஹென்லே நிறுவனத்துக்காக இந்தப் புள்ளிவிவர அறிக்கையைத் தொகுத்து அளித்தவர், நியூ வேல்டு வெல்த் (New World Wealth)நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் ஆண்ட்ரூ அமாய்ல்ஸ். ரஷ்யா தொடர்ந்து தன்னுடைய பெரும் செல்வந்தர்களை இழந்துகொண்டே போகிறது என்கிறார், இவர்.

“அபரிமிதமான சொத்துகளை வைத்திருக்கும் தனி நபர்கள் கடந்த பத்தாண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் ரஷ்யாவிலிருந்து வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர். நாடு இப்போது எதிர்கொண்டு இருக்கும் பிரச்னைகளுக்கு இது முன்னெச்சரிக்கை அறிகுறி. வரலாற்று ரீதியாகப் பார்த்தாலும், எந்த ஒரு நாடும் சீர்குலையும்போது அங்கிருக்கும் பெரும் செல்வந்தர்கள் முன்கூட்டியே நாட்டைவிட்டு வெளியேறுவதும் அது தொடர்ச்சியாக அதிகரிப்பதும் நடக்கும். அப்போதே அதைப் புரிந்துகொள்ள முடியும்.” என்கிறார் ஆண்ட்ரூ.

US Dollars
US DollarsPexels

இப்படியான அதிசொத்து மதிப்பைக் கொண்ட தனிநபர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதால், உக்ரைன் மிக அதிகமாக பாதிக்கப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நாட்டின் அதிசொத்து படைத்த நபர்களில் 2, 800 பேர் (அதாவது அதிசொத்து படைத்தோரில் 42%), நடப்பு ஆண்டின் கடைசிக்குள் நாட்டைவிட்டு வெளியேறுவார்கள் என்கிறது, ஹென்லே அறிக்கை.

நீண்ட காலமாகவே உலக அளவிலான பெரும் செல்வந்தர்கள் தங்கள் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தைக் கழிக்க விரும்பும் நாடாக பிரிட்டன் இருந்துவந்தது. பிறகு அமெரிக்கா அந்த இடத்துக்கு வந்தது. ஹென்லே அறிக்கையின்படி, இப்போது ஐக்கிய அமீரகம் அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பெரும் செல்வந்தர்கள் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தைக் கழிக்க விரும்பும் முதல் நாடாக அமீரகம் உருவெடுத்துள்ளது.

Britain
BritainPexels

“ஐக்கிய இராச்சியம் எனப்படும் பிரிட்டன் அந்த கிரீடத்தை இழந்துவிட்டது; உலகத்தின் செல்வ வளம் மிக்க இடமாகப் பெயர்பெற்ற அமெரிக்காவின் காந்தத் தன்மை மங்கிவருகிறது; ஐக்கிய அரபு அமீரகத்திலோ பெருமளவிலான செல்வந்தர்கள் செட்டிலாக விரும்பி குவிந்து வருகின்றனர். இதில் அமெரிக்கா, பிரித்தானியா இரண்டையும் இந்த ஆண்டுக்குள் அமீரகம் மிஞ்சிவிடும்.” என்கிறது, ஹென்லே.

உலக அளவில் செல்வந்தர்களும் அவர்களின் செல்வமும் எப்படி நாடுமாறுகிறது என்பதை கவனித்து, முறைப்படியாகத் தொகுக்கப்பட்டு இருக்கிறது, இந்த அறிக்கை.

UAE
UAEPexels

நடப்பு ஆண்டின் கடைசிக்குள் 4 ஆயிரம் அதிசொத்து படைத்த தனி நபர்கள் தங்கள் நாட்டைவிட்டு அமீரகத்துக்குக் குடிபெயர்வார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே, ஆஸ்திரேலியாவில் 3,500 பேரும், சிங்கப்பூரில் 2,800 பேரும், இஸ்ரேலில் 2,500 பெரும் செல்வந்தர்கள் புதிதாகக் குடிபுகுவார்கள் என்பது ஹென்லே அறிக்கையின் கணக்கு.

பொதுவாக, பெரும் எண்ணிக்கையிலான அதிசொத்து படைத்த தனிநபர்கள் உலக அளவில் மூன்று ‘எம்’களுக்கு தங்கள் சொத்துகளை நகர்த்த ஆர்வம் காட்டுகிறார்கள். மால்ட்டா, மொரிசியஸ், மொனாக்கோ ஆகிய நாடுகளே அந்த ‘எம்’கள்.

“ கடந்த பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பெரிய வெற்றிக் கதைகளில் ஒன்று, மால்டாவினுடையது. பெரும் செல்வந்தர்கள் அங்குக் குடி புகுவது மட்டும் அல்ல, அவர்களின் சொத்துகளும் அங்கு மாற்றப்படுகின்றன.” என்கிறார், ஆண்ட்ரூ அமாய்ல்ஸ்.

Malta
MaltaPexels

“ இப்போதைய நிலவரப்படி, உலக அளவில் அதிவேகமாக வளர்ச்சி அடைந்துவரும் சந்தைகளில், மால்டாவின் சந்தையும் ஒன்று. 2011 - 2021 காலகட்டத்தில் அதன் சொத்து மதிப்பு 87% வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்துவருபவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் முறையின் மூலம், மால்டா அரசாங்கமானது ஏராளமான சொத்துகளை தங்கள் நாட்டுக்குள் ஈர்த்திருக்கிறது.

நிதிச் சேவைகள், தகவல் நுட்பம், வீட்டு மனை வர்த்தகம் முதலிய பல்வேறு துறைகளில் மால்டாவின் வளர்ச்சிக்கு இதன் பங்களிப்பு முக்கியமானது. 2022ஆம் ஆண்டின் கடைசிக்குள் மால்டாவில் குடிபுகக்கூடிய பெரும் செல்வந்தர்களின் எண்ணிக்கை 300 ஆக இருக்கும்.” என்று ஹென்லே அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

Malta
Malta Pexels
Putin
ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் குறித்த தகவல்களுக்கு 1 கோடி டாலர்கள் - அமெரிக்கா அறிவிப்பு

கடந்த ஆண்டு தி கார்டியன் ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றில், ஏராளமானவர்கள் மால்டாவுக்கான (அதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும்) தங்க பாஸ்போர்ட்டுகளை வாங்கிவருகின்றனர்; அதன் மூலம் அந்த நாட்டில் அடிக்கடி சிறிது காலம் தங்கிச்செல்வதே அவர்களின் திட்டம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது, இதே ஹென்லே வெளியிட்ட அறிக்கையில், மால்டாவுக்கும் அதன் குடிமக்களுக்கும் வழங்கப்பட்ட சேவைக்கான கௌரவம் என்று தெரிவித்தது, குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பெருங்கடல் பகுதியின் தீவு நாடான மொரிசியஸ், ’சொத்துகளின் காந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. காரணம், சொத்துகளுக்கான குறிப்பிட்ட வரிப் பிடித்தங்களே இல்லாமல், அந்த நாட்டில் சொத்துகளை வாங்கிப் பதிவுசெய்து கொள்ள முடியும் என்பதே! மொரிசியசில் முதலீட்டுக்கான இலாப வரி, பரம்பரைச் சொத்து வரி ஆகியவை இல்லை. உலக அளவிலான நிறுவனங்களுக்கு அதிகபட்ச வரியே 3 % தான் என்பது போன்றவை சாதக அம்சங்கள்.

Mauritius
MauritiusPexels

மொரிசியசில் இப்போது 4,800 அதிசொத்து படைத்த தனி நபர்கள் இருக்கின்றனர் என்கிறது ஆப்பிரிக்க சொத்து மதிப்பு 2022 புள்ளிவிவர அறிக்கை. பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 2,700 பேர் எனும் அளவிலிருந்தது. நடப்பு ஆண்டில் மொரிசியசுக்கு 150 பெரும் செல்வந்தர்கள் குடிபுகுவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முதன்மையாக, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவிலிருந்தே புதிய குடிபுகுவோர் வரக்கூடும் என்பது ஹென்லேவின் கணிப்பு.

மொனாக்கோ நாடானது நீண்ட காலமாகவே உலகின் அதிசொத்து படைத்தோரை ஈர்க்கும் இடமாக இருந்துவருகிறது. ஏனென்றால், அங்கு வருமான வரியோ, முதலீட்டு இலாப வரியோ சொத்து வரியோ விதிக்கப்படுவதில்லை. அந்த நாட்டில் வசிப்பவர்களில் பத்தில் ஏழு பேர் அதிசொத்து படைத்த செல்வந்தர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

US Dollars
US DollarsPexels

ஐக்கிய இராச்சியம் எனப்படும் பிரிட்டனில் அதிசொத்து படைத்த நபர்களின் எண்ணிக்கையில் இந்த ஆண்டு மேலும் 1,500 குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மில்லியன்(10 இலட்சம்) அமெரிக்க டாலர் சொத்து கொண்டவர்களின் எண்ணிக்கை 7,38,000 ஆகக் குறைந்துவிடும்.


உலகளவில் இப்படியான அதிசொத்து படைத்த தனி நபர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?


ரொம்ப அதிகமில்லை, சும்மா 1. 5 கோடிக்கும் மேல்தான்!

Putin
நீங்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறீர்களா? - இதனை நீங்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com