ஆபரேஷன் பாலைவனப் புயல் : குவைத் - இராக் யுத்தம் - தகர்ந்த சதாம் நம்பிக்கை | பகுதி 1

உண்மையில் ஈராக் நாட்டின் தரையில் நடந்த போர் பல காரணங்களுக்காக 100 மணி நேரப்போர் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
2003 ஈராக் போர்
2003 ஈராக் போர்டிவிட்டர்
Published on

ஈராக் என்றாலே போரால் சிதைந்த, அடிக்கடி குண்டு வெடிக்கும் நாடாக நாம் அறிந்திருக்கிறோம். ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை ஈராக் நாடு ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் உலகையே அச்சுறுத்திய பயங்கரவாத அமைப்பின் தாயகமாக இருந்தது. இத்தகைய ஈராக் ஒரு போர்க்களமாக மாறியது சமீபத்திய ஆண்டுகளில் இல்லை. ஈராக்கில் மிகப்பெரிய போர் என்பது 30 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய ஒன்றாகும். அதில் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளின் ராணுவம் ஈராக்குடன் சண்டையிட்டது.

1990 இல் ஈராக் அதிபர் சதாம் உசேன் உத்தரவின் பேரில் அந்நாட்டு இராணுவம் அண்டை நாடான குவைத்தை ஆக்கிரமித்தது. குவைத்தை விட்டு ஈராக் இராணுவம் பின்வாங்க வேண்டும் என அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகள் எச்சரித்தன. ஆனால் ஈராக் படைகள் பின்வாங்க மறுத்ததை அடுத்து ஜனவரி 17, 1991 இல் ஆபரேஷன் பாலைவனப் புயல் போரை அமெரிக்கா தொடுத்தது. இதை வளைகுடா போர் என்றும் அழைக்கிறார்கள். இந்தப் போரைப் பற்றிய முக்கியமான சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

பாலைவனப் புயல் போர் மொத்தம் 43 நாட்கள் மட்டுமே நீடித்தது. அதாவது ஜனவரி 17 முதல் பிப்ரவரி 28, 1991 வரை போர் நடந்தது. உண்மையில் ஈராக் நாட்டின் தரையில் நடந்த போர் பல காரணங்களுக்காக 100 மணி நேரப்போர் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

ஈராக் மீதான போருக்கு காரணம்

1980களில் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் போர் நடந்த பிறகு ஈராக் நாடு பெரும் கடனிலிருந்தது. அதன் அண்டை நாடுகளான குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளும் ஈராக்கிற்கு பெரும் நிதியைக் கடனாக கொடுத்திருந்தன. ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் இரு நாடுகளும் அந்தக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏனெனில் ஈரானுக்கு எதிராக அந்த இருநாடுகளையும் ஈராக் பாதுகாத்தது என்று அவர் வாதிட்டார்.

அதற்காக இந்த இரு நாடுகளும் ஈராக்கிற்கு கடமைப் பட்டிருக்கின்றன என்று சதாம் கூறினார். ஆனால் குவைத்தும், அமீரகமும் கடனை ரத்து செய்ய மறுத்து விட்டன. ஈராக்கின் தெற்கு எல்லையில் இருக்கும் குவைத் எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்தாலும் இராணுவ ரீதியான பலவீனமான நாடாக இருந்தது. இது சதாம் ஹுசேனுக்கு சாதகமாக இருந்தது. மேலும் குவைத்தோடு ஈராக்கிற்கு பல ஆண்டுகளாக எல்லைத் தகராறும் இருந்தது.ஜூலை 1990 இல் அதிபர் சதாம், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இருநாடுகளும் கச்சா எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்வதன் மூலம் அதன் விலையை குறைப்பதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும் இதனால் ஈராக்கின் கச்சா எண்ணெய் வருவாய் குறைவதாகவும் கூறினார். இதுபோக ஈராக் - குவைத் எல்லையில் உள்ள எண்ணெய் வயலில் உள்ள எண்ணையை குவைத் நாடு திருடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் எண்ணெய் விலையை குறைக்குமாறு குவைத்தை தூண்டி விடுவதாகவும் அவர் அடுக்கடுக்காய் குற்றம் சாட்டினார்.

இப்படியாக குவைத் மற்றும் ஈராக் நாட்டின் உறவுகள் மோசமடைந்தன. இறுதியில் ஆகஸ்டு 1990 இல் குவைத் மீது படையெடுத்த சதாம் அந்த நாட்டை ஈராக்குடன் இணைத்துக் கொண்டார்.

இதையடுத்து ஐ.நா.சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஈராக் மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல தடைகளை விதித்தது. சதாம் ஹூசைன் தனது படைகளை குவைத்திலிருந்து விலக்கிக் கொள்ளுமாறும் தீர்மானம் போட்டது. இதை சதாம் ஏற்க மறுத்து விட்டதால் பாலைவனப் புயல் போர் துவங்கியது.

அமெரிக்க தலைமையில் 40 நாடுகள் கூட்டணி

ஈராக் மீதான படையெடுப்பிற்கு முன்புதான் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்தது. அதனால் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இருந்த கெடுபிடிப் போர் அப்போது இல்லை. இதனால் அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகளை உள்ளிட்டு 40 நாடுகள் கூட்டணி சேருவதற்கு உதவியாக இருந்தது. அந்தக் கூட்டணியில் அரபு நாடுகளும் ரஷ்யாவும் கூட இருந்தன. இப்படியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டு நாடுகளும் உலக அளவில் ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதில் வெற்றி கண்டன.

2003 ஈராக் போர்
சீனா நெருக்கடி: அச்சத்தில் உலக நாடுகள், சூழப் போகும் ஆபத்து - என்ன நடக்கிறது?

முதன் முறையாக, அமெரிக்க தளபதி, இராணுவ ஜெனரல் "ஸ்டோர்மின்" நார்மன் ஸ்வார்ஸ்காப், வளைகுடாவில் அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் சுல்தானுடன் இணைந்து கூட்டுப் படைகளுக்கு இணைத் தளபதியாக பணியாற்றினார். போருக்கு முன்பு அமெரிக்க படைகள் சவுதி அரேபியாவில் தரையிறங்கின.

இப்படியாக அரபுலக அமெரிக்க கூட்டணி ஈராக் மீதான இந்த ஆபரேஷன் பாலைவன புயல் போருக்கு உதவியாக இருந்தது.


"ரகசிய அணில்" விமானத் தாக்குதல்

ஆபரேஷன் பாலைவனப் புயல் போர் முதலில் அதிரடியான விமானத் தாக்குதல் மூலம் துவங்கியது. அதைத்தான் ரகசிய அணில் என்று அழைக்கின்றனர்.

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பி 52 ஜி எனப்படும் பெரும் குண்டு வீச்சு விமானங்கள் சுமார் 14,000 மைல்கள் பறந்து ஈராக்கில் உள்ள 35 முக்கியமான இலக்குகளில் ஏவுகணைகளை வீசின. இதுதான் அக்காலத்தில் அதிக தூரத்திலிருந்து பறந்து வந்து குண்டு வீசிய விமானத் தாக்குதல்.

கூட்டணி நாடுகளை பிளவு படுத்த முயன்ற ஈராக்கின் ஸ்கட் ஏவுகணைகள் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகளை இராணுவ ரீதியாக வெல்ல முடியாது என்பதை சதாம் ஹுசைன் உணர்ந்தார். எனவே அந்தக் கூட்டணியை பிளவு படுத்துவதன் மூலம் அதைப் பலவீனப்படுத்தலாம் என அவர் நினைத்தார். அமெரிக்காவின் ரகசிய அணில் விமானத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக் இராணுவம் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா மீது ஸ்கட் ஏவுகணைகளை ஏவியது.

2003 ஈராக் போர்
சீனா : 20 லட்சம் கோடிகளை சின்ன குழப்பத்தால் இழந்த அலிபாபா ஜாக் மா - நடந்தது என்ன?

இதன் மூலம் இஸ்ரேல் திருப்பித் தாக்கும் என சதாம் எதிர்பார்த்தார். இஸ்ரேல் அப்படி போரில் இறங்கினால் அது விரைவில் அரபுலக – இஸ்ரேலிய போராக மாறும் என அவர் நினைத்தார். ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உத்தரவாதம் அளித்ததன் பேரில் இஸ்ரேல் போரில் இறங்கவில்லை. இப்படியாக கூட்டணி பாதுகாக்கப் பட்டது.

ஈராக் ஏவிய ஸ்கட் ஏவுகணைகளை வழிமறித்து அவற்றை வெடிக்கச் செய்யும் பேட்ரியாட் ஏவுகணைகள் இப்போரின் போது வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டது. தாக்க வரும் ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கும் இந்த ஏவுகணைத் திட்டம் 1960 முதல் இருந்தாலும் பாலைவனப் புயல் போரின் போதுதான் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது.

போரின் முதல் நாளில் சவுதி அரேபியாவின் தஹ்ரான் மீது ஈராக் ஏவிய ஸ்கட் ஏவுகணை ஒன்றை பாட்ரியாட் ஏவுகணை இடைமறித்து தாக்கியது. இதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு வழங்கியது.

இது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு பயன்பட்டது. இப்படியாகக் கூட்டணி நாடுகளை பிரிக்கத் திட்டம் போட்ட சதாம் ஹூசைனின் கனவு பலிக்கவில்லை. தற்போது இந்தப் பாலைவனப் புயல் போர் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை என்றாலும் அதன் முக்கியத்துவம் குறையவில்லை. இந்தப் போரில் 6,97,000 அமெரிக்க துருப்புகள் பங்கேற்றன.

அவர்களில் 299 பேர் உயிரிழந்தனர்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்கா அணிதிரட்டிய முதல் சர்வதேசக் கூட்டணிப்படை இப்போரில்தான் செயல்பட்டது. அதன்பிறகு அக்கூட்டணி செர்பியா, ஆப்கானிஸ்தான், மீண்டும் ஈராக் என பல போர்களுக்குப் பயன்பட்டது. இன்று அக்கூட்டணியில் சில நாடுகள் இல்லை என்றாலும் சர்வதேச பிரச்சினைகளுக்கு அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி இன்றும் வலுவாகவே இருக்கிறது.

2003 ஈராக் போர்
இலங்கை - சீன உளவுக் கப்பல்: இந்தியாவுக்கு மிரட்டலா? சீனாவின் திட்டம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com