நவீன வாழ்க்கை முறையின் தேவைக்காகவும் பலரும் கிரெடிட் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகள், வணிகச் சுற்றுப்பயணங்கள் காரணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கும், வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா பயணம் மேற்கொள்பவர்களுக்கும் பேருதவியாக இருக்கிறது.
விமான கட்டணம், ஹோட்டல்களின் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகள் உங்களுக்கு கைக்கொடுக்கும். இந்தெந்த கிரெடிட் கார்டு இருந்தால், நீங்கள் பெறக்கூடிய தள்ளுபடிகள், சலுகைகள் என்னென்ன என்பதை உங்களுக்குச் சொல்லபோகிறோம்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வெல்த் கிரெடிட் கார்டு சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு 1.5% அந்நிய செலாவணி கட்டணத்தை வசூலிக்கிறது. இந்த கார்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் 4 விமான நிலைய ஓய்வறைகளைப் பயன்படுத்தலாம்.
900க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களுக்கு வங்கி பிரீமியம் சலுகைகளை வழங்குகிறது. இது 1,500க்கும் மேற்பட்ட உணவகங்களில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த அட்டையின் வருடாந்திர கட்டணம் பூஜ்ஜியமாகும்.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு EaseMyTrip கிரெடிட் கார்டு, ஹோட்டல் மற்றும் விமான முன்பதிவுகளில் 20% தள்ளுபடியை வழங்குகிறது. கார்டுதாரருக்கு பஸ் டிக்கெட் முன்பதிவில் 125 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இந்த அட்டைக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.350.
இந்த கிரெடிட் கார்டு மூலம் முதல் 30 நாட்களில் ரூ.6,000 செலவழித்தால் 8,000 வரை போனஸ் வழங்குகிறது.
இது ரூ.750 மதிப்புள்ள விமான தள்ளுபடி வவுச்சர்களையும், ரூ.2,000 மதிப்புள்ள ஹோட்டல் தள்ளுபடி வவுச்சர்களையும் வழங்குகிறது. கார்டுதாரர்கள் InterMiles இணையதளம் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த அட்டைக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.2,500.
எஸ்பிஐ எலைட் கிரெடிட் கார்டு மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு 1.99% அந்நிய செலாவணி மார்க்அப் கட்டணம் உள்ளது. அந்நிய செலாவணி மார்க்அப் கட்டணம் என்பது வங்கிகள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்யும் போது விதிக்கப்படும் கட்டணங்கள் ஆகும்.
இந்த அட்டை மூலம், சர்வதேச விமான நிலைய ஓய்வறையை வருடத்திற்கு 6 முறை அணுகலாம். இந்த அட்டையின் ஆண்டுக் கட்டணம் ரூ.4,999.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust