அரசு அலுவலகத்தில் உறுப்பினராக 'குதிரை’ இருந்ததா? வரலாறு சொல்லும் 4 சுவாரஸ்சியங்கள்

பண்டைய கலாச்சாரங்கள் முதல் உரிமை போர் வரை வரலாறு சொல்வது தான் நமக்கு ஆதாரமாக உள்ளது. இதில் சில விஷயங்கள் ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருக்கும். அப்படி சில விசித்திரமான வரலாற்று உண்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
4  weird History Facts You Won't Believe Actually Happened
4 weird History Facts You Won't Believe Actually Happened Twitter
Published on

உலகில் பலரும் அறிந்திராத சில சுவாரஸ்யமான மற்றும் விசித்திரமான உண்மைகள் பல உள்ளன. அவற்றில் சில நம்ப முடியாத வகையில் இருந்தாலும் உண்மையில் அப்படி ஒரு வரலாறு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண்டைய கலாச்சாரங்கள் முதல் உரிமை போர் வரை வரலாறு சொல்வது தான் நமக்கு ஆதாரமாக உள்ளது. இதில் சில விஷயங்கள் ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருக்கும்.

அப்படி சில விசித்திரமான வரலாற்று உண்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

உணவுப் பைகளின் ஆடைகள்

அன்றாட பொருட்களைப் பயன்படுத்தி இன்று தான் ஆடைகளில் ஃபேஷன் வருகிறது என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு

அமெரிக்கர்கள் அன்றாட பொருட்களை மெட்டிரியலாக மாற்றினர். மாவு மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல ஹெஸ்ஸியன் சாக்குகள் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டன.

உணவு உற்பத்தியாளர்கள் அந்த சாக்கு பைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற கடுமையாக உழைத்தனர். அந்த சாக்கு பையில் சூரிய ஒளி மற்றும் பூக்கள் போன்ற டிசைன்களை செய்து ஃபேஷன் ட்ரெஸாக மாற்றினர்.

பையில் இருந்து லோகோவை அகற்ற பன்றிக்கொழுப்பு அல்லது மண்ணெண்ணெயில் ஒரு இரவு முழுவதும் ஊறவைப்பார்களாம்.

பொது அலுவலகத்தின் உறுப்பினராக குதிரை

கலிகுலா ரோமானியப் பேரரசின் முதல் ஆளும் குடும்பத்தில் பிறந்தார். கலிகுலா என்றும் அழைக்கப்படும் ரோமானியப் பேரரசர் கயஸ், கிபி 37 முதல் கிபி 41 இல் அவர் படுகொலை செய்யப்படும் வரை ரோமானியப் பேரரசராக இருந்தார் .

அவரது குதிரை அவருக்கு நம்பகமான துணையாக இருந்தது. இதனால் கலிகுலா, குதிரையை கௌரவிக்க ஏதாவது செய்ய விரும்பினார்

கலிகுலா தனது குதிரையை தூதராகவும், ரோமானிய குடியரசில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக உயர்ந்த அரசாங்க அதிகாரியாகவும் மாற்ற திட்டமிட்டார். அதற்கு முன்னதாகவே அரசர் இறந்துவிட்டார்.

கடவுளின் வாகனமாக வான்கோழி

வான்கோழி அமெரிக்காவின் விருப்பமான உணவாக தற்போது இருந்தாலும், இந்த பெரிய பறவைகள் மாயன் மக்களால் கிமு 300 இல் கடவுளின் வாகனங்களாக அறிவிக்கப்பட்டன.

வான்கோழிகள் மாயன் கலாச்சாரத்தின் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. வான்கோழிகள் அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதத்தில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

4  weird History Facts You Won't Believe Actually Happened
இந்த ஏழு தீவுகள் தான் இன்றைய மும்பை நகரமா? எப்படி உருவானது? விறுவிறு வரலாறு

போலியான பாரிஸ் நகரம்

ஜெர்மானிய விமானம் ஒரு முறை முதலாம் உலகப்போரின் போது பாரிஸை தாக்கியது. குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான போது, பொறியாளரான ஃபெர்னாண்ட் ஜக்கோபோசி என்பவர் அரசின் உதவியுடன் 1917ல் ஒரு போலியான பாரிஸ் நகரை உருவாக்கினார்.

முக்கிய அடையாளங்களான ஈஃபிள் டவர், பாலங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன. இந்த நகரம் பாரிஸுக்கு வெளியே கட்டப்பட்டது

இந்த போலி பாரிஸை எதிரி நாட்டவர்கள் தாக்க இலக்காக மாற்றினர். இந்த அரசியல் ரகசியத்தை 1920ல் தான் பிரிட்டிஷ் பத்திரிகை கண்டறிந்து உலகுக்கு சொன்னது.

4  weird History Facts You Won't Believe Actually Happened
பெரம்பலூர்: சோழர்கள் முதல் சிவாஜி வரை போரிட்ட ரஞ்சன்குடி கோட்டை - திகைக்க வைக்கும் வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com