காட்டில் தனியாக சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்? கட்டுக்கதைகளும் விளக்கமும்

காடு மலைகளுக்கு செல்லும் போது நாம் எதனையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு நாம் ஏற்கெனவே மூளையில் ஏற்றி வைத்துள்ள சில கட்டுக்கதைகளை உடைப்பது அவசியம்.
காட்டில் தனியாக சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் - கட்டுக்கதைகளும் விளக்கமும்!
காட்டில் தனியாக சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் - கட்டுக்கதைகளும் விளக்கமும்!Twitter
Published on

காட்டில் தனியாக மாட்டிக்கொண்டால் என்ன செய்து தப்பிப்பீர்கள்? நீங்கள் பார்த்த படங்கள், செய்திகள், நிகழ்ச்சிகள் படித்த புத்தகங்காள் எல்லாவற்றிலும் பார்த்த விஷயங்களை வைத்து எதையாவது செய்து தப்பித்துவிடலாம் என நினைக்காதீர்கள்.

ஏனென்றால் நாம் கேள்விப்பட்ட பல விசயங்கள் நமக்கு உதவாது. நாம் நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பாலான உயிர்பிழைத்திருப்பதற்கான வழிகள் காடுக்கதைகள் தான்.

உண்மையில் காட்டில் எதுவும் எடுபடாது. காடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் போது நாம் தொலைந்து போவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

ஒருவேளை நாம் தொலைந்துவிட்டால் உயிருடன் திரும்ப வேண்டுமல்லவா? 2007 முதல் 2018 ஆண்டுகாளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் அமெரிக்க தேசிய பூங்காக்களை சுற்றிப்பார்க்க சென்ற 2727 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

பலரும் காடுகாளில் காணாமல் போய் திரும்ப கிடைத்துள்ளனர். காட்டில் சிக்கும் பலர் இறக்க விபத்துகளும் நீரில் ஆழம் தெரியாமல் மூழ்குவதும் தான் காரணமாக இருந்திருக்கிறது.

சிலர் விஷம் அல்லது விலங்குகள் தாக்குதலினால் மரணித்துள்ளனர். காடு மலைகளுக்கு செல்லும் போது நாம் எதனையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு நாம் ஏற்கெனவே மூளையில் ஏற்றி வைத்துள்ள சில கட்டுக்கதைகளை உடைப்பது அவசியம். 

பாம்பின் விஷத்தை உறிஞ்சி எடுக்க முடியும்

பாம்போ அல்லது பிற விஷ பூச்சிகளோ கடிக்கும் போது அவை நேரடியாக நம் இரத்த ஓட்டத்தில் விஷத்தை செலுத்துகின்றன. இதில் வாய் வைக்கும் போது விஷம் வாயில் பரவ வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் பாம்பு கடித்த காயமும் இன்னும் பெரியதாகலாம். 

உங்களையோ அல்லது உங்கள் நண்பரையோ பாம்பு கடித்துவிட்டால் உடனடியாக இறுக்கமான கயிற்றைக் கட்டக் கூடாது. இறுக்கமாக கட்டினால் விஷம் அந்த இடத்திலேயே தங்கி அந்த பகுதி அழுகிவிடும்.

 முக்கியமாக கத்தியை வைத்து வெட்டி காயத்தைப் பெரியதாக்க கூடாது. 

பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும். இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

கரடியிடம் இறந்துவிட்டதைப் போல நடியுங்கள்

சிறியவயதில் பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் வித்தை இந்த இறந்துவிட்டதைப் போல நடிப்பது. அரிதாக சில கரடிகளிடம் இந்த தந்திரம் வேலை செய்யலாம்.

பெரும்பாலான் கரடிகளை திசை திருப்பி தப்பிப்பது தான் நல்ல முயற்ச்சியாக இருக்கும். தப்பிக்க வழி இல்லாவிட்டால் கரடியுடன் சண்டையிட வேண்டியது தான். கரடியின் முகத்தில் குறிவைத்து அடிப்பது பலனளிக்கலாம்.

காட்டில் தனியாக சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் - கட்டுக்கதைகளும் விளக்கமும்!
அமெரிக்கா : தலையில்லாமல் 18 மாதம் வாழ்ந்த கோழி : அறிவியலை மிஞ்சும் அதிசய கதை!

பியர் ஸ்ப்ரே இருந்தால் அதுவும் பயன்படும்.

திடீரென கரடி உங்களைப் பிடித்துவிட்டால் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு மண்டியிட்டு கீழே குனிந்துகொள்ளுங்கள். அது விலகும் வரைக் காத்திருங்கள். கரடி தொடர்ந்து தாக்கினால் கையில் இருப்பதை வைத்து தாக்குங்கள்.

காட்டில் தொலைந்துவிட்டால் உனடியாக உணவைத் தேடுங்கள்

ஒரு ஆரோக்கியமான மனிதனால் 6 வாரம் வரை உணவில்லாமல் உயிர் வாழ முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால் காடு மாதிரியான பாதுகாப்பும் தண்ணீரும் இல்லாத இடத்தில் 2 நாட்காள் தாக்குபிடிப்பதே கடினம்.

காட்டில் தொலைந்துவிட்டால் உடனடியாக உணவைத் தேடாதீர்கள். மாறாக தண்ணீரையும் தங்குமிடத்தையும் தேடுவதில் கவனம் செலுத்துங்கள்.

காட்டில் தனியாக சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் - கட்டுக்கதைகளும் விளக்கமும்!
'இரவில் ஒளிரும் காடு' - மேற்கு தொடர்ச்சி மலையின் அதிசயக் காடு - அறிவியல் சொல்வது என்ன?

பாசி மரத்தின் வடக்கு பகுதியில் தான் வளரும்

மரத்தின் ஈரமான மற்றும் குளிர்ச்சியான பரப்பு எந்த பக்கம் இருக்கிறதோ அங்கு தான் பாசி வளரும். 

மரங்களின் வடக்கு பகுதி பொதுவாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் சூரியனின் வெயிலில் படாது. இதனால் இங்கு பாசி வளரும்.

காட்டில் தனியாக சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் - கட்டுக்கதைகளும் விளக்கமும்!
வியட்நாம் : மனித காலடி தடமே பதியாத உலகின் மிக பெரிய குகை - உள்ளே இருக்கும் தனி ஒரு உலகம்!

ஆனால் காட்டில் எந்த பக்கத்திலிருந்தும் பிற மரங்களின் நிழல் படலாம் என்பதனால் எந்த பக்கத்திலும் பாசி வளரும். இதனால் காடுகளில் பாசி நமக்கு வழிகாட்டும் என நம்பாதீர்கள். 

இந்த விஷயத்தில் நம்மால் செய்ய முடியக் கூடிய சிறந்த செயல் முன் கூட்டியே வரைபடம் மற்றும் திசைக்காட்டியை எடுத்துவருவது தான். இல்லை என்றால் சூரியனையும் நட்சத்திரங்களையும் பயன்படுத்தி நகரலாம். 

கடலில் ஒரு சுறா தாக்கினால் அதன்  மூக்கில் குத்துங்கள்

நீருக்கடியில் ஒருவரை குத்துவது மிகவும் கடினமானது. நிச்சயமாக இது ஒரு மோசமான ஐடியா.

சுறாக்காள் கீழிருந்து மேலாக தாக்கும். சுறா உங்களை நெருங்கினால் மொத்த கவனத்தையும் அதன் மீது குவிக்க வேண்டும். அது நெருங்கி வருகையில் கண் மற்றும் செவுளில் கையை வீசலாம், நகத்தைப் பயன்படுத்தி அதற்கு வலிக்கும் படி செய்யலாம்.

காட்டில் தனியாக சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் - கட்டுக்கதைகளும் விளக்கமும்!
Hoia Baciu : உலகிலேயே பயங்கரமான காடு - ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com