Hoia Baciu : உலகிலேயே பயங்கரமான காடு - ஏன் தெரியுமா?

ஹோயா பாசு காடுகள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலம்...
Hoia Baciu : உலகிலேயே பயங்கரமான காடு - ஏன் தெரியுமா?
Hoia Baciu : உலகிலேயே பயங்கரமான காடு - ஏன் தெரியுமா?Twitter
Published on

ஹோயா பாசு ரோமானியா நாட்டில் உள்ள ட்ராசில்வானியா என்ற இடத்தில் உள்ளது.

இது 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ள அடர்த்தியான காடாகும். இங்கு நிகழ்ந்ததாக கூறப்படும் வினோதமான நிகழ்வுகளுக்காக இது அறியப்படுகிறது.

இதனை ட்ரான்சில்வானியாவின் பெர்முடா முக்கோணம் என்றே அழைக்கின்றனர். அப்படி என்ன இருக்கிறது இந்த காட்டில்?

இந்த காடு பயங்கரமான காடாக அறியப்பட பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு முறை 200 ஆடுகளுடன் இந்த காட்டுக்கு வந்த ஆடு மேய்ப்பவரும் அவரது ஆடுகளும் இருந்த இடம் இல்லாமல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதை விட, எமில் பர்னியா என்ற இராணுவ தொழில்நுட்ப வல்லுநர் ஒரு புகைப்படத்தை இங்கு எடுத்தார். அவர் இந்த காட்டில் ஒரு குறிப்பிட்ட பாதையில் பறக்கும் தட்டுகள் சுற்றுவதாகக் கூறினார். 

இதன் பிறகு உலகம் முழுவதும் இருந்து மக்கள் இந்த காடு குறித்து தெரிந்துகொள்ள முன்வந்தனர். இந்த காட்டில் கிளியரிங் என்ற மர்ம பகுதி உள்ளது. 

இந்த கிளியரிங் என்ற பகுதியில் எந்த செடியும் வளருவதில்லை. ஓவல் வடிவில் இருக்கும் இந்த பகுதி மர்மமானதாக பார்க்கப்பட்டது.

இந்த ஹோயா பாசு காடுகள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம், 

Hoia Baciu : உலகிலேயே பயங்கரமான காடு - ஏன் தெரியுமா?
Snake Island: 4 லட்சம் பாம்புகள் இருக்கும் தீவின் பின்னணி என்ன? ஒரு திக் திக் பயணம்

UFO : எமில் பர்னியா மட்டுமல்லாமல் பலர் இந்த பகுதியில் பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். இங்கு சுற்றுலாப்பயணம் வந்த சிலரோ வானத்தில் விசித்திரமான பொருட்களையும் வெளிச்சத்தையும் பார்த்ததாக கூறியுள்ளனர்.

பேய் நடமாட்டம்? : இந்த காட்டில் இறந்த நபர்களின் குறிப்பாக இங்கு நடந்த போர்களில் இறந்த  இராணுவ வீரர்களின் பேய்களால் இந்த காடு பயங்கரமானதாக மாறிவிட்டதாகக் கூறுகின்றனர். 

Hoia Baciu : உலகிலேயே பயங்கரமான காடு - ஏன் தெரியுமா?
'இரவில் ஒளிரும் காடு' - மேற்கு தொடர்ச்சி மலையின் அதிசயக் காடு - அறிவியல் சொல்வது என்ன?

அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த இடங்களில் தொடர்ந்து நடைபெறுகின்றன. குறிப்பாக காந்தப்புலங்கள் மற்றும் மின்காந்த நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். 

இந்த காட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சிலருக்கு தலைசுற்றல், குமட்டல் ஏற்படுகிறதாம். சிலர் இந்த காட்டின் மீது மூட நம்பிக்கைகள் தான் கட்டப்பட்டிருக்கின்றன என்கின்றனர். 

Hoia Baciu : உலகிலேயே பயங்கரமான காடு - ஏன் தெரியுமா?
பூமிக்கு 1000 அடி ஆழத்தில் ஒரு புதிய காடு கண்டுபிடிப்பு - பிரபஞ்ச ரகசியத்தின் திறவுகோலா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com