அமெரிக்கா : தலையில்லாமல் 18 மாதம் வாழ்ந்த கோழி : அறிவியலை மிஞ்சும் அதிசய கதை!

இரவு உணவுக்காக வெட்டப்பட்ட கோழி வெட்டிய பின்னும் தரையில் நின்று சாதாரணமாக நடந்துகொண்டிருந்தது. இரைத் தேட முயற்சிப்பது போன்ற கோழியின் நடவடிக்கையைப் பார்த்த லோய்டி அதிர்ந்து போனார்.
அமெரிக்கா : தலையில்லாமல் 18 மாதம் வாழ்ந்த கோழி : அறிவியலை மிஞ்சும் அதிசய கதை!
அமெரிக்கா : தலையில்லாமல் 18 மாதம் வாழ்ந்த கோழி : அறிவியலை மிஞ்சும் அதிசய கதை!Twitter

அமெரிக்காவில் உள்ள கொலொரடோ என்ற பகுதியில் தான் இந்த அதிசயமான நிகழ்வு நடந்திருக்கிறது.

சாதாரணமாக வெட்டப்பட்ட ஒரு கோழி மரணிக்க மறுத்து 18 மாதங்கள் வாழ்ந்தது.

கேட்கும் போதே வியப்பாக இருக்கிறதல்லவா? மைக் என்ற அந்த கோழிக்கு என்ன நடந்தது? அதன் கதையைக் காணலாம்.

1945 லோய்டி ஓல்சென் என்ற விவசாயி தனது இரவு உணவுக்காக ஒரு கோழியை சமைக்க முடிவு செய்தார்.

அதற்காக வெட்டிய கோழி தான் மைக். வெட்டிய பின்னும் அது தரையில் நின்று சாதாரணமாக நடந்துகொண்டிருந்தது.

இரைத் தேட முயற்சிப்பது போன்ற கோழியின் நடவடிக்கையைப் பார்த்த லோய்டி அதிர்ந்து போனார்.

தலையில்லாமலும் உயிரோடு இருந்ததால் அதனை அப்படியே வளர்க்க முடிவு செய்தார்.

லோய்டி அந்த 5 மாத கோழியை கோடாரி கொண்டு வெட்டும் போது கழுத்து நரம்பு சரியாக அறுக்கப்படவில்லை.

மேலும் மூளையின் பெரும்பகுதியும் சேதமடையாமல் இருந்துள்ளது.

தண்ணீர் மற்றும் பால் கலந்து மைக்குக்கு உணவாக தொண்டையில் ஊட்டியுள்ளனர்.

தலையில்லாமல் இருக்கும் கோழி பற்றிய செய்தி ஊரெல்லாம் பரவ பத்திரிகைகள் அதனைப் புகைப்படம் எடுக்க குவிந்தன.

அமெரிக்கா : தலையில்லாமல் 18 மாதம் வாழ்ந்த கோழி : அறிவியலை மிஞ்சும் அதிசய கதை!
பிசோனியா: பறவைகளைக் கொல்லும் அதிசய மரம் - திகிலூட்டும் காரணம் தெரியுமா?
அமெரிக்கா : தலையில்லாமல் 18 மாதம் வாழ்ந்த கோழி : அறிவியலை மிஞ்சும் அதிசய கதை!
ஒரே மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தையும் சிம்பான்சியும்; நடந்தது என்ன? சோகத்தில் முடிந்த ஆய்வு

டைம், லைஃப் போன்ற பிரபலமான பத்திரிகைகளில் தோன்றியதால் மைக் அமெரிக்கா முழுவதுமே புகழ்பெற்றது.

மைக்கைப் பார்க்க மக்கள் குவிந்தனர். அவர்களிடம் 25 செண்ட் விதம் வசூலிக்கப்பட்டது.

அந்த கோழி அதன் வாழ்நாளில் 47,500 டாலர்கள் சம்பாதித்தது.

ஊர் ஊராக அதனைத் தூக்கிச் சென்று மக்களிடம் காட்டி பணம் சம்பாதித்தனர்.

அப்படி ஒரு சுற்றுப் பயணத்தில் இருந்து வரும் போது மூச்சுத் திணறி இறுதியாக உயிரிழந்தது மைக்.

இப்போது இந்த கோழியின் பெயரில் ஒரு நிறுவனமே உருவாகியிருக்கிறது. அங்கு ஆண்டுதோறும் தலையில்லாத கோழி தினம் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கா : தலையில்லாமல் 18 மாதம் வாழ்ந்த கோழி : அறிவியலை மிஞ்சும் அதிசய கதை!
ஓநாய், குரங்கு, கோழியால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்: மிருகங்களாகவே மாறிய மனிதர்களின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com