பயண பிரியர்கள் இப்போது எல்லாம் எழில் கொஞ்சும் இடங்களை விட மர்மமான அட்வென்சர்கள் நிறைந்த இடங்களை தேடி தேடி சென்று பார்த்து வருகின்றனர்.
இடங்கள் மட்டுமில்லாமல் ஸ்கை டைவிங் போன்ற சவாலான விஷயங்களை விரும்பி செய்து வருகின்றனர்.
சிலர் சவாலான சாலைகளில் வாகனம் ஓட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அது மிகவும் ஆபத்தான zone ஆக இருக்கும் அப்படி உலகின் மிகவும் ஆபத்தான சாலைகள் குறித்து தான் இங்கு பார்க்க் போகிறோம்.
ஐரோப்பாவின் மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்று இந்த அட்லாண்டிக் சாலை.
நார்வே நகரங்களான கிறிஸ்டியான்சுண்ட் மற்றும் மோல்டே இடையே சுமார் 8 கிமீ தொலைவில் இந்த " அட்லாண்டிக் சாலை" இருக்கிறது.
இந்த சாலையில் வாகனம் ஓட்டுவது என்பது கடலின் விளிம்பில் தத்தளிப்பது போன்றது. காரணம் நார்வே கடலின் அலைகள், காலநிலை மாற்றத்தின் போது அடிக்கடி சாலைக்கு வருகிறது.
எனவே நீங்கள் அனைத்திற்கும் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உறுதிசெய்துக்கொண்டு ரெடி டூ ரெய்டு. இது நிச்சயமாக ஒரு ரோலர் கோஸ்டர் போன்றிருக்கும்.!
இந்த பாஸ் லடாக்கிற்கும் காஷ்மீருக்கும் இடையே உள்ள ஒரு முக்கிய இணைப்பாகும். இந்த ரோடு பருவகால மாற்றத்தின் போது மூடப்படுகிறது.
செங்குத்தான சாலைகள், குறுகலாக வழி என மிகவும் ஆபத்தானதாக இருக்கும் இங்கு அடிக்கடி பேருந்துகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும்.
இந்த உயரமான பாஸ், கடுமையான பனிப்பொழிவு முதல் அதிக காற்று வரை அனைத்தையும் அனுபவிக்க வைக்கும்.
இந்த செப்பனிடப்படாத ரஷ்ய நெடுஞ்சாலை நேராக சைபீரியா வழியாக செல்கிறது. குளிர்காலம் இங்கு பத்து மாதங்கள் வரை நீடிக்கும். உங்களால் கண்ணாடி கூட அணிந்துக் கொள்ள முடியாது, முகம் முழுக்க பனி உறைந்துவிடும்.
இந்த சாலை மலைகள், காடுகள், பாலைவனங்கள் என பலவற்றைக் கடக்கிறது.
கோடை காலத்தில், பனி படர்ந்த சாலை சேறும் சகதியுமாக மாறுகிறது. அப்போது வாகனம் ஓட்டும் நிலைமை இன்னும் மோசமாகிறது. யாகுட்ஸ்க் நகருக்கு வருவதற்கு இதுவே ஒரே வழி, எனவே வாகன ஓட்டிகளுக்கு வேறு வழியில்லை.
இந்த சாலை மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, எனவே நீங்கள் சிக்கிக்கொண்டால் உயிர்வாழும் பொருட்களை எடுத்துச் செல்வது முக்கியமானது.
பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள இந்த கண்கவர் மற்றும் ஆபத்தான மலைப்பாதை 16.2 கிமீ நீளம் கொண்டது.
இது ஒரு அழகிய இடமாக இருந்தாலும், தடுப்புகள் இல்லாததால், குன்றின் மீது வாகனம் விழுவதைத் தடுக்க முடியாது. இந்த சாலை நிச்சயம் சவலாக இருக்கும்
இந்திய மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த சாலை, ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் செங்குத்தான சாலைகளில் ஒன்றாகும். மிகவும் ஆபத்தான சாலையாக கருதப்படுகிறது.
பரந்து விரிந்திருக்கும் மலைகளின் அற்புதமான காட்சிகளை நீங்கள் கண்டு ரசிக்க முடியும்.
காற்று மற்றும் மழை போன்ற வானிலை மாற்றத்தின் போது சாலை சேறும் சகதியுமாக மாறும். மேலும் நான்கு சக்கர வாகனம் கூட கடந்து செல்வது சவாலாக இருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust