பேய் நகரங்கள் முதல் லவ்வர்ஸ் Spot வரை உக்ரைனைப் பற்றி அறியாத 7 சுவாரஸ்ய தகவல்கள்

உக்ரைனைப் பற்றி உங்களுக்குத் தெரியாத விஷயங்களை இங்கே காணலாம்.
7 Less Known Facts You Didn't Know About Ukraine
7 Less Known Facts You Didn't Know About UkraineTwitter
Published on

போர் புரியும் நாடாக தான் உக்ரைனை நமக்கு தெரியும், ஆனால் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு, உலகின் அழமான மெட்ரோ நிலையம் கொண்ட நாடு என பல விஷயங்களை கொண்டிருக்கும் உக்ரைனைப் பற்றி உங்களுக்குத் தெரியாத தகவல்களை இங்கே காணலாம்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு

ஐரோப்பாவின் பரப்பளவில் உக்ரைன் மிகப்பெரிய நாடு. உக்ரைனின் மொத்த பரப்பளவு 603.55 சதுர கி.மீ. என்று கூறப்படுகிறது.

ஐரோப்பாவின் பரப்பளவில் உக்ரைன் மிகப்பெரிய நாடாக இருந்தாலும், மக்கள்தொகை அடிப்படையில் அது பெரியதாக இல்லை. சுமார் 43 மில்லியன் மக்கள்தொகையுடன், இது ஜெர்மனி மற்றும் பிரான்சின் மக்கள்தொகையை விட சிறியதாக உள்ளது.

உக்ரைனில் ஏழு உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்த ஏழு தளங்களை உக்ரைன் கொண்டுள்ளது. அவை உக்ரைனில் பார்க்க சிறந்த இடங்களாகும்.

கிவின் செயிண்ட்- சோபியா கதீட்ரல் மற்றும் எல்விவின் வரலாற்று மையம், கார்பதியன்களில் உள்ள தனித்துவமான மர தேவாலயங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள காடுகள் ஆகியவை இதில் அடங்கும்.

உக்ரைனின் தேசிய உடை வைஷிவாங்கா

வைஷிவாங்கா என்பது உக்ரைனின் தேசிய உடையின் பெயர். உக்ரேனிய டிசைனைக் கொண்டிருக்கும் அதன் எம்பிராய்டரி வேலை காரணமாக இது முற்றிலும் வேறுபட்டதாக காட்சியளிக்கிறது.

Vyshyvanka என்பது கைத்தறியால் செய்யப்பட்ட ஒரு வெள்ளை சட்டை மற்றும் மலர் போன்ற எம்பிராய்டரி மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடையின் சிறப்பு என்னவென்றால், ஆண் பெண் இருபாலரும் அணிவதுதான்.

பல பேய் நகரங்கள்

செர்னோபில் பேரழிவு, உக்ரைனில் நிகழ்ந்தது.

இந்த பேரழிவு நடந்த தளம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் வடக்கு உக்ரைனில் அமைந்துள்ளன. இது 1986 இல் விபத்து நடந்தவுடன் சோவியத் ஒன்றியத்தால் நிறுவப்பட்டது. அவற்றில் சில கைவிடப்பட்ட நகரங்களாக உள்ளன. அவை இன்று பேய் நகரங்களாக காட்சியளிக்கிறது.

7 Less Known Facts You Didn't Know About Ukraine
தனுஷ்கோடி முதல் உனகோடி வரை - பேய் நகரமாக கருதப்படும் இந்திய நகரங்களின் கதை!

லவ்வர்ஸ் ஸ்பாட்

டன்னல் ஆஃப் லவ் என்பது வடமேற்கு உக்ரைனில் உள்ள கிளேவனில் உள்ள கைவிடப்பட்ட ரயில் பாதையாகும்.

இது காதல் நிறைந்த இடமாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ரயில் பாதையின் இருபுறமும் பச்சை பசேலென்று மரங்களால் சூழப்பட்டுள்ளது.

அந்த வசிகரமான இடம் பல ஜோடிகளை அந்த இடத்திற்கு ஈர்க்கிறது. உள்ளூர் புராணங்களின்படி, இந்த இடத்திற்கு வருகை தரும் தம்பதிகளின் ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறுமாம்.

7 Less Known Facts You Didn't Know About Ukraine
Travel: சிங்கபூர் முதல் பாலி வரை - சீனியர் சிட்டிசன்களுக்கான டிராவல் டெஸ்டினேஷன்ஸ்

உலகின் அழமான மெட்ரோ நிலையம்

உக்ரைனின் தலைநகரான கிவ்வில் 105.5 மீட்டர் (346 அடி) ஆழத்தில் அமைந்துள்ள அர்செனால்னா நிலையம் உலகின் மிக ஆழமான மெட்ரோ நிலையமாக கருதப்படுகிறது.

இந்த சுரங்கப்பாதை நிலையம் 1960 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி சோவியத் யூனியனால் கட்டப்பட்டு, கீவ் மெட்ரோவின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக திறக்கப்பட்டது.

சூரியகாந்தி விதை உற்பத்தி

சூரியகாந்தி விதைகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ரஷ்யா உள்ளது. சூரியகாந்தி விதைகளில் உலகின் 10வது பெரிய உற்பத்தியாளராக அமெரிக்கா உள்ளது. பெரும்பாலானவை தெற்கு டகோட்டா மற்றும் வடக்கு டகோட்டாவில் வளர்க்கப்படுகின்றன.

7 Less Known Facts You Didn't Know About Ukraine
உக்ரைன்: ரயிலில் 10 மணி நேரம், செல்போன் இல்லை - ஜோ பைடன் ரகசிய பயணம் ரஷ்யாவுக்கு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com