மெக்சிகோ: மனிதர்கள் முதல் விலங்குகள் வரை - பார்வையில்லை இருளில் மூழ்கிய கிராமம்!

டில்டெபெக் என்ற இந்த கிராமத்தில் ஜாபோடெக் இனத்தைச் சேர்ந்த 300 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஒரு குழந்தை பிறக்கும் போது அது எவ்வித குறைபாடும் இல்லாமல் பிறக்கிறது.
மெக்சிகோ: மனிதர்கள் முதல் விலங்குகள் வரை - பார்வையில்லை இருளில் மூழ்கிய கிராமம்!
மெக்சிகோ: மனிதர்கள் முதல் விலங்குகள் வரை - பார்வையில்லை இருளில் மூழ்கிய கிராமம்!Twitter
Published on

பொதுவாக வயது ஆக ஆக நமக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுவது வழக்கம் தான். இது பலருக்கு குறைபாடாகவும், சிலருக்கு பார்வையே போகும் அளவுக்கும் காணப்படக்கூடும்.

அந்த வகையில், வயதானவர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுவது இயல்பானது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், ஒரு ஊரில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பார்வைக் குறைபாடு, அதாவது பார்வையே இல்லை என்றால் நம்ப முடிகிறதா?

மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு நகரமே பார்வை இல்லாமல் இருளில் மூழ்கி இருக்கிறதாம். இந்த கிராமத்தில் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை யாருக்கும் பார்வை இல்லை.

டில்டெபெக் என்ற இந்த கிராமத்தில் ஜாபோடெக் இனத்தைச் சேர்ந்த 300 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஒரு குழந்தை பிறக்கும் போது அது எவ்வித குறைபாடும் இல்லாமல் பிறக்கிறது.

மெக்சிகோ: மனிதர்கள் முதல் விலங்குகள் வரை - பார்வையில்லை இருளில் மூழ்கிய கிராமம்!
பாலைவனத்தில் கூட மழை பெய்யும் இங்கு பெய்யாது! - விசித்திர கிராமத்தின் பின்னணி என்ன?

ஆனால், காலப்போக்கில் அந்த குழந்தைக்கு பார்வை பறிபோய்விடுவதாக சொல்லப்படுகிறது.

இதற்கான காரணம் குறித்து பழங்குடியின மக்கள் கூறுகையில், டில்டெபெக் கிராமத்தில் லாவ்ஸுவேலா என்ற மரம் இருக்கிறது. இந்த மரத்தைப் பார்க்கும் மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என அனைத்தும் பார்வையை இழந்துவிடுவதாக ஒரு நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால், விஷத்தன்மையுள்ள பூச்சி கடிப்பதன் மூலமாகத் தான் அவர்கள் பார்வையை இழப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மெக்சிகோ: மனிதர்கள் முதல் விலங்குகள் வரை - பார்வையில்லை இருளில் மூழ்கிய கிராமம்!
வீட்டில் தனி இடம்! பாம்புகளோடு ஒன்றாக வாழும் இந்திய கிராமம் - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com