140 ஆண்டுகள் கிழியாத ஜீன்ஸ் - 72 லட்சத்திற்கு ஏலம் எடுத்த இருவர்!

லெவி ஸ்ட்ராஸ் என்பவரால 1853ம் ஆண்டு உருவாக்கப்பட்டது லெவிஸ் ஜீன்ஸ் நிறுவனம். இப்போது இவற்றின் ஜீன்ஸ் பேன்ட்கள் மிக அதிக விலையில் விற்கப்பட்டாலும் ஆரம்பத்தில் ஜீன்ஸ் ஆடை என்பது சுரங்கத் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது தான்.
140 ஆண்டுகள் கிழியாத ஜீன்ஸ் - 72 லட்சத்திற்கு ஏலம் எடுத்த இருவர்!
140 ஆண்டுகள் கிழியாத ஜீன்ஸ் - 72 லட்சத்திற்கு ஏலம் எடுத்த இருவர்!Instagram

உலக அளவில் முன்னணி ஜீன்ஸ் நிறுவனமாக விளங்கும் லெவிஸ் நிறுவனத்தில் ஜீன்ஸ் ஒன்று 72 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் சென்றுள்ளது.

லெவி ஸ்ட்ராஸ் என்பவரால 1853ம் ஆண்டு உருவாக்கப்பட்டது லெவிஸ் ஜீன்ஸ் நிறுவனம். இப்போது இவற்றின் ஜீன்ஸ் பேன்ட்கள் மிக அதிக விலையில் விற்கப்பட்டாலும் ஆரம்பத்தில் ஜீன்ஸ் ஆடை என்பது சுரங்கத் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது தான். அமெரிக்காவில் கௌபாய்களும் இதனை பயன்படுத்தினர்.

எளிதில் கிழியாது, அடிக்கடி துவைக்க தேவையில்லை என்ற இரண்டு காரணங்களால் ஜீன்ஸ் உலகம் முழுவதும் பரவியது.

140 ஆண்டுகள் கிழியாத ஜீன்ஸ் - 72 லட்சத்திற்கு ஏலம் எடுத்த இருவர்!
ஜீன்ஸ் வரலாறு: எளிய தொழிலாளர்களின் ஆடை பணக்காரர்களின் உடை ஆனது எப்படி?

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் 1880களில் பயன்படுத்தப்பட்ட ஜீன்ஸ் பேன்ட்கள் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட 140 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அந்த பேன்ட்கள் கிழிந்து தொங்காமல் நல்ல நிலையிலேயே இருந்தன.

பழமையான பொருட்கள் மீது ஆர்வமுள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமான ஒன்று. இதனை ஏலத்தில் விட்டபோது 87 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விலை போனது. இது இந்திய மதிப்பில் 72 லட்சம் ரூபாய்.

இதனை பழைய ஆடைகளை சேகரிக்கும் ஆர்வலர்களான கைல் ஹாபெர்ட்(Kyle Haupert) மற்றும் சிப் ஸ்டீவன்சன்(Zip Stevenson) ஆகியோர் ஏலத்தில் வாங்கியுள்ளனர்.

140 ஆண்டுகள் கிழியாத ஜீன்ஸ் - 72 லட்சத்திற்கு ஏலம் எடுத்த இருவர்!
ஜீன்ஸ் பேன்ட் : அந்த சிறிய பாக்கெட் எதற்கு?

140 ஆண்டுகளாகியும் சேதமடையாமல் இருக்கும் இந்த ஜீன்ஸ் பேன்ட் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. லிவீஸ் நிறுவனம் இந்த ஏலத்தின் மூலம் எங்கள் தரம் நிரூபனம் ஆகியுள்ளது எனக் கூறியுள்ளது.

உண்மையில் இந்த ஜீன்ஸ் பேன்டை உருவாக்கிய லெவி ஸ்ட்ராஸ் ஒரு ஜீனியஸ் என்று ஏற்றுக்கொள்ளலாம்.

140 ஆண்டுகள் கிழியாத ஜீன்ஸ் - 72 லட்சத்திற்கு ஏலம் எடுத்த இருவர்!
"ஜீன்ஸ் அணியக் கூடாது": கட்டுப்பாடு விதித்த கணவனைக் கொலை செய்த மனைவி - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com