ஆசியாவின் மிகப் பெரிய இறுதி சடங்கு தலம் - எங்கே இருக்கிறது?

இதன் பெயர், நெக்ரோபோலிஸ். இது கிரேக்க வார்த்தைகளான நெக்ரோ மற்றும் போலிஸ் ஆகியவற்றை இணைத்து சூட்டப்பட்டது. கிரேக்க மொழியில், நெக்ரோ என்றால் இறந்தவர் என்றும், போலிஸ் என்றால் நகரம் என்றும் பொருள்படுகிறது.
ஆசியாவின் மிகப் பெரிய இறுதி சடங்கு தலம் - எங்கே இருக்கிறது? என்ன சிறப்பு?
ஆசியாவின் மிகப் பெரிய இறுதி சடங்கு தலம் - எங்கே இருக்கிறது? என்ன சிறப்பு?ட்விட்டர்

பாகிஸ்தானில் அமைந்திருக்கும் மக்லி நெக்ரோபோலிஸ் தான் ஆசியாவின் மிகப் பெரிய இறுதி சடங்கு தலம். இது உலகின் மிகப் பெரிய இறுதி சடங்கு தலங்களில் ஒன்று.

சுற்றுலா செல்லும்போது அட்வென்சர் ட்ரிப் செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்களை தேடித் தேடி செல்வது வழக்கம்.

நாம் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கு பின்னும் ஒரு கதை இருக்கும். சிலவை வரலாற்று சிறப்பு பெற்றிருக்கும். இரண்டாவது வகையை சேர்ந்தது தான் இந்த பாகிஸ்தானின் மக்லி நெக்ரோபோலிஸ் என்கிற இடம்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்கப்பட்ட இவ்விடத்தின் சிறப்புகள் என்ன? இந்த இடத்தினை, land of the dead என்று ஏன் அழைக்கின்றனர்?

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தட்டா என்கிற நகரத்தில் இருக்கிறது Makli Necropolis. இது இறுதி சடங்கு தலம்.

அதென்ன இறுதி சடங்கு தலம்?

அதாவது இதனை ஒரு பெரிய சைஸ் கல்லறை எனலாம். அல்லது சுடுகாடு என்றும் சொல்லலாம். இங்கு இறந்தவர்களுக்கு கல்லறைகள், நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டிருக்கும்.

இதன் பெயர், நெக்ரோபோலிஸ். இது கிரேக்க வார்த்தைகளான நெக்ரோ மற்றும் போலிஸ் ஆகியவற்றை இணைத்து சூட்டப்பட்டது. கிரேக்க மொழியில், நெக்ரோ என்றால் இறந்தவர் என்றும், போலிஸ் என்றால் நகரம் என்றும் பொருள்படுகிறது.

இதனால் இந்த இடத்தை இறந்தவர்களின் நகரம், Land of the Dead என்று அழைக்கின்றனர்

ஆசியாவின் மிகப் பெரிய இறுதி சடங்கு தலம் - எங்கே இருக்கிறது? என்ன சிறப்பு?
கண்ணாடி மண்டபம், ரகசிய வழிப்பாதை - ஜெய்ப்பூர் மலைக்கோட்டையின் வரலாறு என்ன?

கிரேக்க கலாச்சாரத்தில், நெக்ரோபோலிஸ் என்ற இடத்தில் பண்டைய நாகரிகத்தில் வாழ்ந்தவர்கள், அரசர்கள், சமூகத்தில் முக்கிய புள்ளிகளாக இருக்கும் தலைவர்கள் இறந்தால், அவர்களை அங்கு புதைத்தனர்.

இதனால் இவ்விடம் வரலாறு, கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

இதனால் இங்குள்ள கல்லறைகளில் மிகவும் நுணுக்கமான வேலைப்படுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை 14 ஆம் நூற்றண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

ஆசியாவின் மிகப் பெரிய இறுதி சடங்கு தலம் - எங்கே இருக்கிறது? என்ன சிறப்பு?
ஈராக் முதல் பாகிஸ்தான் வரை: இந்த நாடுகளின் பாஸ்போர்ட் ஏன் செல்வாக்கற்றவை?

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாகவும் நெக்ரோபோலிஸை அங்கீகரித்துள்ளனர். பாகிஸ்தானின் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கலாச்சார தலமாகவும் உள்ளது நெக்ரோபோலிஸ்

சுமார் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தலத்தில், 50,000த்துக்கும் மேற்பட்ட கல்லறைகள், நினைவுச்சின்னங்கள் உள்ளன.

இஸ்லாம், பெர்சியா மற்றும் உள்ளூர் கட்டிடக்கலைகளின் கலவையாக அமைக்கப்பட்டுள்ள இவ்விடத்தில் சில பிரதானமான சூஃபி கலைஞர்களும் புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தை விசிட் செய்ய தயாரா?

ஆசியாவின் மிகப் பெரிய இறுதி சடங்கு தலம் - எங்கே இருக்கிறது? என்ன சிறப்பு?
மகாபலிபுரம்: நூற்றாண்டுகள் பழமையான கடற்கரை கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? Wow Facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com