குரங்குக்கு பாலூட்ட கற்றுக்கொடுக்கும் பெண் - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

"என்னுடைய அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், இந்த செயல்முறையை முதன்முதலக முயற்சி செய்வதற்கும் என்னிடம் உதவ கேட்டப்போது பெருமையாக உணர்ந்தேன். இந்த செயல் விளக்கத்தால் ஜோயி தனது குட்டிக்கு தாய்ப்பால் கொடுத்ததைக் கேள்விப்பட்டபோது நான் மிகவும் உற்சாகமடைந்தேன்" என்று விட்லீ நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
A zookeeper and new mom taught this orangutan how to nurse by breastfeeding her own baby
A zookeeper and new mom taught this orangutan how to nurse by breastfeeding her own babyTwitter
Published on

அமெரிக்காவின் வெர்ஜினியா மகாணத்தில் உள்ள மெட்ரோ ரிச்மன்ட் மிருகக்காட்சி சாலையின் பணியாளர் ஒருவர், ஒராங்குட்டான் குரங்குக்கு தாய்பாலூட்ட கற்றுக் கொடுத்துள்ளார்.

மனிதர்கள் தொடங்கி பாலுட்டி விலங்குகள் வரை, தாய்ப்பாலூட்டுவது என்பது வழக்கமாக தெரிந்த ஒன்றாக இருந்திருக்கும்.

ஆனால் இங்கு ஒரு குரங்குக்கு தனது குட்டிக்கு பால் எப்படி கொடுப்பது என்று தெரியவில்லை. அந்த குரங்கு தவித்துக் கொண்டிருந்த வேளையில் zoo-வில் பணியாற்றும் விட்லீ என்ற பெண் அதற்கு கற்றுக் கொடுக்க முயன்றுள்ளார்.

கேட்பது சற்று வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும் பலரும் வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

பெரிய குரங்கின் முன் தனது சொந்தக் குழந்தைக்குப் பாலூட்டி, அதே நடத்தையை மாதிரியாகக் கொண்டு பாலூட்டுவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்து வருகிறார் விட்லீ.

சமீபத்தில் 'ஜோயி' என்ற ஒராங்குட்டான் குரங்கு குட்டி ஈன்றது. அதற்கு உதவும் வகையில், தன் குழந்தையை அழைத்து வர விட்லீ ஒப்புக் கொண்டார்.

A zookeeper and new mom taught this orangutan how to nurse by breastfeeding her own baby
ஜப்பான் : ஆண் துணை இல்லாமல் குட்டி போட்ட குரங்கு - மர்மத்தை விலக்கிய பூங்கா ஊழியர்கள்!

சில தாய்மார்கள் அசௌகரியமாக உணர்ந்தாலும், விட்லீ உடனடியாக உதவ ஒப்புக்கொண்டார்.

9 மாதத்திலேயே தாயிடம் இருந்து பிரிந்ததால், குட்டிக்கு எப்படி பாலூட்டுவது என்று அந்த ஒராங்குட்டான் குரங்கு அறிந்திருக்கவில்லை.

விட்லீ தினமும் காலையில் வந்து அந்த குரங்கு முன் அமர்ந்து தனது குழந்தைக்கு பாலூட்டி செயல்விளக்கம் கொடுத்தார். இதன் பிறகு விரைவிலேயே தனது குட்டிக்கு பாலூட்ட கற்றுக் கொண்டது ஜோயி.

"என்னுடைய அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், இந்த நடத்தையை மாதிரியாக்குவதற்கும் என்னிடம் உதவ கேட்டப்போது பெருமையாக உணர்ந்தேன். இந்த செயல் விளக்கத்தால் ஜோயி தனது குட்டிக்கு தாய்ப்பால் கொடுத்ததைக் கேள்விப்பட்டபோது நான் மிகவும் உற்சாகமடைந்தேன்" என்று விட்லீ நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

பாலுட்ட மட்டுமின்றி குட்டி எப்படி சுமப்பது என அந்த குரங்குக்கு கற்றுக் கொடுத்தது மிருகக்காட்சி சாலை.

ஒராங்குட்டான் பொம்மையை வைத்து குட்டியை எப்படி சுமக்க வேண்டும், எப்படி பாராமரிக்க வேண்டும் என பல வழிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

A zookeeper and new mom taught this orangutan how to nurse by breastfeeding her own baby
வெந்நீரில் குளிக்கும் விசித்திர குரங்குகள் - குளிருக்காக அல்ல வேறு என்ன காரணத்திற்காக?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com