வெந்நீரில் குளிக்கும் விசித்திர குரங்குகள் - குளிருக்காக அல்ல வேறு என்ன காரணத்திற்காக?

இயல்பாக இந்தக் குரங்குகள் வெந்நீரில் இறங்கும் வழக்கம் கொண்டவை இல்லை, வேறு எதோ காரணம் இருக்க வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் `கியோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது.
Japanese Macaque Monkeys Get Stress Relief in Hot water
Japanese Macaque Monkeys Get Stress Relief in Hot waterTwitter
Published on

ஜப்பானின் நாகானோ மாகாணத்தில் அமைந்துள்ள குரங்கு பூங்காவில் இருக்கும் குரங்குகள் அங்கு செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும் வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் அது குளிருக்காக மட்டும்அவ்வாறு வெந்நீரில் குளிக்கவில்லை என்றும் வேறு ஒரு காரணத்திற்காக என ஆராய்ச்சியில் கண்டுபிடுக்கப்படுள்ளது.

அது என்ன காரணம் வாருங்கள் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

ஜப்பானின் வடக்கில் ஜப்பானிய மக்காவு (Japanese Macaque) எனும் குரங்கினம் அதிகமாக காணப்படுகிறது.

இவை பனி மலைகளில் வாழும் குரங்குகள் ஆகும். இந்தக் குரங்குகளைப் பாதுகாக்க `ஜிகோகுடானி குரங்குகள் பூங்கா' (Jigokudani Monkey Park) அமைக்கப்பட்டிருக்கிறது. ஜிகோகுடானி குரங்கு பூங்கா நாகானோ மாகாணத்தின் மலைப்பகுதியில் 1964 இல் நிறுவப்பட்டது.

உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் பிரபலமான இடமாக இது மாறியுள்ளது.

வெந்நீர் ஊற்று

அந்தப் பனிமலைகளில் குரங்குகள் அங்குமிங்கும் குதித்து ஓடுவதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் அவர்களுக்காக அங்கு "கொரொகன்" என்னும் விடுதி ஒன்று கட்டப்பட்டது.

1963-ல் கொரொகன் விடுதி, வெந்நீர் ஊற்றுகளிலிருந்து வரும் தண்ணீரைக் கொண்டு ஒரு செயற்கை வெந்நீர் குளத்தை அமைத்தது.

அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக என 104 டிகிரி வெப்ப நிலையில் அந்தக் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. பல சுற்றுலாப் பயணிகளும் அதில் குளித்து குதூகமடைந்தனர்.

வெந்நீரில் குளிக்கும் குரங்குகள்

ஒரு நாள், ஒரு பெண் குரங்கு அந்த வெந்நீர் குளத்தில் இறங்கியுள்ளது. அடுத்த சில நாள்களில் பல குரங்குகளும் அதில் இறங்கத் தொடங்கிவிட்டன.

பின்னர், `ஜிகோகுடானி குரங்குகள் பூங்கா' நிர்வாகம் குரங்குகளுக்கு என பிரத்யேக வெந்நீர் குளத்தை அமைத்தது. இதில் பல ஆண்டுகளாக குரங்குகள் குளித்து வருகின்றன. உலகிலேயே குரங்குகள் வெந்நீரில் குளிப்பது இங்கு மட்டும் தான். இதனை காண உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கினர்.

குளிருக்கு இதமாக இருப்பதால் இந்த வெந்நீர் குளத்தில் குரங்குகள் குளிக்கின்றன என்பதே பொதுவான கருத்தாக இருந்து வந்தது.

Japanese Macaque Monkeys Get Stress Relief in Hot water
ஓநாய், குரங்கு, கோழியால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்: மிருகங்களாகவே மாறிய மனிதர்களின் கதை!

ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

இயல்பாக இந்தக் குரங்குகள் வெந்நீரில் இறங்கும் வழக்கம் கொண்டவை இல்லை, வேறு எதோ காரணம் இருக்க வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் `கியோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழு ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது.

அந்தக் குரங்குகளின் மலத்தை எடுத்து சில ஆய்வுகளை மேற்கொண்டது அந்தக் குழு. இந்த ஆராய்ச்சியில், குளிருக்காக மட்டுமே குரங்குகள் வெந்நீரில் இறங்குவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

Japanese Macaque Monkeys Get Stress Relief in Hot water
ஜப்பான் : ஆண் துணை இல்லாமல் குட்டி போட்ட குரங்கு - மர்மத்தை விலக்கிய பூங்கா ஊழியர்கள்!

மன அழுத்ததை குறைக்கும் வெந்நீர்

இந்தக் குரங்குகளில் "க்ளூகோகார்டிகாய்ட்ஸ்" (Glucocorticoids) எனும் ஹார்மோன் மனஅழுத்தத்துக்கு முக்கியக் காரணியாக இருக்கிறது.

இந்த வெந்நீரில் இறங்கும்போது, அந்தக் குரங்குகளில் க்ளூகோகார்டிகாய்ட்ஸ் அளவு குறைகிறது. அதன் மூலம், இவை மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெந்நீரில் இறங்கும் குரங்குகளில் அதிக எண்ணிக்கையில் பெண் குரங்குகளே இருக்கின்றன. அதுவும், மாதவிடாய் காலங்களில் அதன் மன அழுத்தம் அதிகரிக்கும் சூழலில், இந்த வெந்நீர் குளியல் அவற்றுக்குப் பெரும் ஆறுதலாக இருப்பதாக கூறப்படுகிறது.

Japanese Macaque Monkeys Get Stress Relief in Hot water
தெர்மல் கேமராவில் பிடிப்பட்ட பிரமாண்டமான 'மனித குரங்கு' - வெளிச்சத்துக்கு வரும் மர்மம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com