பெண்களை கண்டாலே பயந்து தெறித்து ஓடுகிறார் 77 வயதுடைய இந்த நபர். இதனால், சுமார் 55 ஆண்டுகளாக தன்னை தானே வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
நாய், பூனை, தண்ணீர், நெருப்பு என ஒரு ஒருவருக்கும் ஒரு ஒரு பொருளின் மீது பயம் இருக்கும். இந்த பயத்தினை நாம் ஃபோபியா என்று அறிவியல் ரீதியாக குறிப்பிடுகிறோம்.
அப்படி, ஒரு அரிய வகை ஃபோபியாவோடு வாழ்ந்து வருகிறார் கேலிடிக்சே ஜாம்விடா (Callitxe Nzamwita) என்ற ருவாண்டா நாட்டைச் சேர்ந்த மனிதர்.
இவர் பெண்களை பார்க்கமாட்டார், பேசமாட்டார், யாரேனும் பெண்களை பார்த்தால், குழந்தைகள் அம்மாவின் முந்தானைக்கு பின் ஒளிந்துகொள்வது போல, வீட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்வார்.
இவரது இந்த ஃபோபியாவை கைனோஃபோபியா என்று அழைக்கின்றனர். இதற்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் இல்லை என்ராலும், பயங்களின் பட்டியலில் இது இருக்கிறது என்பதை சில மருத்துவர்கள் ஆதரிக்கின்றனர்.
இவருக்கு 16 வயது இருக்கும்போதில் இருந்து இப்படி தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டைச் சுற்றி 15 அடிக்கு தடுப்பு வேலி போட்டிருக்கிறார்.
எதிர்பாலினத்தவர்களை பார்த்தால் பயமாக இருப்பதாக தெரிவிக்கிறார் கேலிடிக்சே ஜாம்விடா
இவருக்கு பெண்களை கண்டால் தான் பயம். ஆனால், அக்கம்பக்கத்தினர், குறிப்பாக பெண்கள் இவருக்கு உதவிகளை செய்து தான் வருகின்றனர். இவருக்கு தேவையான பொருட்கள், மளிகை சாமான்களை வீட்டுக்கு வெளியில் வைத்துவிட்டு வந்துவிடுகின்றனர்.
பெண்கள் அந்த இடத்தில் இருந்து சென்ற பிறகே இவர் வெளியில் வந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்று மறைந்துவிடுவார்.
பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூறுகையில், “மிகவும் அரிதாகவே இவரை வெளியில் நாங்கள் பார்த்திருக்கிறோம்" என்கின்றனர்.
கைனோஃபோபியா உள்ளவர்களுக்கு அதிகமாக பெண்கள் மீது பயம் இருக்குமாம். அவர்களைப் பற்றி நினைப்பது கூட அடிக்கடி பயம் கலந்த கவலையான உணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த அறிகுறிகள் Panic Attack, அதிக வியர்வை, இதயத் துடிப்பு வேகம் அதிகரித்தால் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust