China: கட்டடம் இடிந்ததில் சிக்கிய பெண் மீட்பு; 6 நாட்கள் தொடர்ந்த உயிர் வாழும் போராட்டம்

அதிர்ஷ்டம், தற்செயல் என என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால், அவர் இப்போது உயிருடன் இருப்பது அவரின் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியினாலே என அந்த பெண்ணை சீனர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
Rescue
RescueTwitter
Published on

சீனாவில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 நாட்கள் கழித்து பெண் ஒருவர் மீட்கப்பட்டது வியப்பையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

சீனாவின் மத்திய நகரமான சாங்சா நகரில் மிகப் பெரிய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 53 பேர் பலியாகியிருக்கின்றனர். இது வரை 10 பேர் உயிர்பிழைத்திருக்கின்றனர். என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், கெஸ்ட் ஹௌஸ்கள் அந்த கட்டடத்திலிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த வியாழன் நள்ளிரவில் அந்த கட்டிட இடிபாடுகளுக்கு இடையிலிருந்து ஒரு பெண் காப்பாற்றப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 132 மணிநேரமாக அந்த இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருந்துள்ளார். எனினும் அவர் காப்பாற்றப்படும் போது மயக்க நிலையில் இல்லாமல் சுய நினைவுடனெ இருந்திருக்கிறார்.

அவரை காப்பற்ற வந்த அதிகாரிகளிடம் எந்தப் பக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாகச் சீன ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.

அதிர்ஷ்டம், தற்செயல் என என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால், அவர் இப்போது உயிருடன் இருப்பது அவரின் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியினாலே என அந்த பெண்ணை சீனர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Collapsed Building
Collapsed BuildingTwitter

அதே போல மூன்று நாட்களுக்கு முன் அதே இடிபாடுகளில் 88 மணி நேரம் உயிர் தப்பியிருந்த பெண் மீட்கப்பட்டார். 21 வயதான அந்த பெண்ணின் மீது சுவர்கள் முக்கோண வடிவில் விழுந்து சிறை போல மூடிக்கொண்டிருக்கிறது.

அதனுள் தன் உயிரைக் காத்துக்கொண்டு மீட்புப் படையினருக்காக 4 நாட்கள் காத்திருந்திருக்கிறார் அந்தப் பெண். அவர் சிக்கியிருந்த இடத்தில் அரை பனையளவு தண்ணீர் இருந்துள்ளது. அத்துடன் தன் உடலை வெதுவெதுப்பாகவும் வைத்துக்கொண்டு மீண்டுள்ளார் அந்த பெண்.

அவர் ஒரு நேரத்தில் ஒரு மிடறு மட்டும் தண்ணீர் பருகி இருந்த சிறிதளவு நீரை நான்கு நாட்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். அவரது செல்போனில் சார்ஜ் இருந்தாலும் சிக்னல் இல்லாததால் அவரால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை. ஆனால் அந்த செல்போனை அணையவிடாமல் பார்த்துக்கொண்ட அவர் அதனைக் கொண்டு நேரம் பார்த்திருக்கிறார்.

Rescue
151 பேர் கொல்லப்பட்ட விமான விபத்திலிருந்து தப்பிய இளம் பெண் - என்ன நடந்தது தெரியுமா?

மேலிருந்து சுவரை ஒரு கடினமான பொருளின் மூலம் தட்டி சத்தத்தை எழுப்பி மீட்புப் படையினரை அழைக்க முயன்ற அந்தப் பெண் அது குறித்து கூறும் போது, “வெளியில் இரைச்சல் இருந்தால் நான் தட்ட மாட்டேன், மீட்புப் படையினர் அருகில் இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது வெளியில் மிக அமைதியாக இருப்பதாக உணர்ந்தாலோ மட்டும் சத்தம் எழுப்புவேன்” எனக் கூறினார்.

Rescue
ஒரு பெண், ஒரு ஆணின் நிர்வாணப் படத்தை விண்வெளிக்கு அனுப்பத் திட்டம்! எதற்கு? யார் படம்?

மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு உயிர் பிழைத்த இருவரும் தான் இப்போது சீனாவில் பேச்சு பொருளாகியிருக்கின்றனர்.

கட்டட இடிபாடு குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் சீன அதிபர் ஜின் ஜின்பிங். இது வரை 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Rescue
சாவித்ரி தேவி: ஹிட்லரின் பாசிசத்தை ஆதரித்த மர்மப் பெண்

சட்டத்துக்குப் புறம்பாக அதிக மாடிகளைக் கட்டியது, தவறான ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற்றது/அளித்தது, ஊழல் செய்தது, தரமற்ற வகையில் கட்டடத்தைக் கட்டியது ஆகிய குற்றங்களைப் புரிந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கச் சீன அரசு உத்தரவிட்டிருக்கிறது.

Rescue
டிஜிட்டல் மீடியா : மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறதா? - உண்மை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com