கலிபோர்னியா: அமெரிக்காவில் போடப்பட்ட சாதி எதிர்ப்பு சட்டம் - ஆதரவுகளும் எதிர்ப்பும் என்ன?

இந்த சட்டம் பல தரப்பில் இருந்து ஆதரவை பெற்றாலும் வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி, "இந்த நாள் கலிபோர்னியா வரலாற்றில் கருப்பு தினம்" எனக் கூறியுள்ளனர்.
கலிபோர்னியா: அமெரிக்காவில் போடப்பட்ட சாதி எதிர்ப்பு சட்டம் - ஆதரவுகளும் எதிர்ப்பும் என்ன?
கலிபோர்னியா: அமெரிக்காவில் போடப்பட்ட சாதி எதிர்ப்பு சட்டம் - ஆதரவுகளும் எதிர்ப்பும் என்ன?Twitter
Published on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் SB 43 என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது மாகாணம் முழுவதும் சாதிய பாகுபாடுக்கு எதிரானதாக கொண்டுவரப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் கவர்னரின் ஒப்புதலைப் பெற்றால் அமெரிக்காவில் பாகுபாடு எதிர்ப்பு சட்டங்களில் சாதியை சேர்த்த முதல் மாகாணமாக கலிபோர்னியா திகழும்.

மாகாணத்தின் செனட்டராக இருந்த ஆயிஷா வஹாப் இதனை முதன்முதலாக அறிமுகம் செய்துள்ளார். நாடு முழுவதும் சாதி சமத்துவ சிவில் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் இதற்கு துணையாக இருந்துள்ளனர்.

சாதிய பாகுப்பாட்டை நீக்குவதன் மூலம் கலிபோர்னியாவுக்கு புலம் பெயர்ந்து வரும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறியுள்ளனர்.

இந்த சட்டம் பல தரப்பில் இருந்து ஆதரவை பெற்றாலும் வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி, "இந்த நாள் கலிபோர்னியா வரலாற்றில் கருப்பு தினம்" எனக் கூறியுள்ளனர்.

இந்து அமெரிக்கன் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் சுஹாக் சுக்லா, "இது ஒரு சோகமான நிகழ்வு. கலிபோர்னியா தெற்காசியர்கள் மற்றும் இந்துக்களை குறி வைத்து இனவாத கடந்த காலத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. கலிபோர்னிய சட்டமன்ற உறுப்பினர்கள் இந்துக்களுக்கு விரோதமான இந்து வெறுப்பின் பக்கம் சாய்ந்துள்ளனர். இது இனவாதமானது மட்டுமல்லாமல் அரசியலமைப்புக்கு எதிரானது. இந்துக்களின் உரிமையை பாதுகாக்க எங்களால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

கலிபோர்னியா: அமெரிக்காவில் போடப்பட்ட சாதி எதிர்ப்பு சட்டம் - ஆதரவுகளும் எதிர்ப்பும் என்ன?
சாதி மறுப்பு திருமணம் : சட்டரீதியாக பாதுகாத்துக் கொள்வது எப்படி?

வட அமெரிக்காவின் அம்பேத்கர் சங்கம் இந்த சட்டத்தைப் புகழ்ந்துள்ளனர். "கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்பது இதுதான்" எனக் கூறியுள்ளனர்.



கலிபோர்னியாவில் தேசிய தோற்றம்(National Origin), இனம், மதம் மற்றும் பாலியல் நோக்குநிலை (Sexual Orientation) போன்ற காரணிகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை அரசு தற்போது தடை செய்கிறது. அந்த வகையில் சாதிய பாகுப்பாட்டையும் தடை செய்துள்ளது.

கலிபோர்னியா: அமெரிக்காவில் போடப்பட்ட சாதி எதிர்ப்பு சட்டம் - ஆதரவுகளும் எதிர்ப்பும் என்ன?
நாங்குநேரி: "அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதி..." பா.ரஞ்சித் கூறியதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com