அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்ததன் விளைவாக நாம் விண்ணுக்கு பயணம் செய்கிறோம். அங்கு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மனித இனத்தை பெருக்க முயற்சிகள் செய்துவருகிறோம்.
ஆனால் விண்ணுக்கு மனிதர்கள் செல்வதற்கு முன்னால் விலங்குகள் தானே அனுப்பப்பட்டன? பூமியை விட்டு வெளியேறினால் சுவாசிக்க காற்று இல்லாமல் மூச்சு திணறி இறந்துவிடுவோம்.
அதற்கு முன் சோதனைக்கட்ட முயற்சியாகவே விலங்குகள் பயன்படுத்தப்பட்டன.
அப்படி மனிதனே தயங்கிய, பயந்த இந்த சாகச பயணத்தை மேற்கொண்டு இச்சோதனை முயற்சியில் சாதனை படைத்த விலங்குகள் என்னென்ன? இந்த பதிவில்...
ரஷ்ய விண்கலமான ஸ்புட்னிக் 2வில், நவம்பர் 3 1957ல் பயணித்தது லைகா என்கிற பெண் நாய். இது பாலூட்டி இனத்தை சேர்ந்த உயிரினங்கள் விண்ணுக்கு சென்றால் என்ன ஆகும் என்பதை தெரிந்துகொள்ள எடுக்கப்பட்ட முயற்சி.
லைகா தான் பூமியின் சுற்றுப்பாதைக்கு சென்ற முதல் உயிரினம். துரதிர்ஷ்டவசமாக விண்ணிலேயே லைகாவின் உயிர் பிரிந்தது.
அவளது மரணத்துக்கு பிறகு அவளின் நினைவாக மாஸ்கோ விண்வெளி அருங்காட்சியகத்தில் உருவ பொம்மை ஒன்று வைக்கப்பட்டது.
முதன் முதலாக தெரிந்தே விண்ணுக்கு அனுப்பப்பட்ட உயிரினம் தான் இந்த ஈக்கள். பிப்ரவரி 20, 1947 அன்று இந்த ஈக்களை ஏற்றிச் சென்ற ராக்கெட் சுமார் 67 மைல் வரை பயணித்து பின்னர் நியூ மெக்சிகோவில் உள்ள ஏவுதளத்திற்கு திரும்பியது
விண்ணுக்கு அனுப்பப்பட்ட விலங்குகளில் அதிக பங்கு வகிப்பது குரங்குகள் தான் எனலாம். சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 32 குரங்குகளில் ஆல்பர் 2வும் ஒன்று. ஜூன் 14 1949ல் முதல் பாலூட்டி இன பயணியாக விண்ணுக்கு சென்றது ஆல்பர்ட்.
ஆனால் பாராசூட் பழுது காரணமாக ஆல்பர்ட் உயிரிழந்தான்.
விண்ணுக்கு சென்ற முதல் மனித குரங்கு இந்த ஹாம் என்கிற சிம்பான்சி. ஜனவரி 31, 1961ல் ஹாம் மேற்கொண்ட தனது 16.5 நிமிட பயணத்தில் முதல் 6.6 நிமிடங்களுக்கு எடையின்மையை உணர்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த பயணத்தினை வெற்றிகரமாக முடித்த ஹாம், அதன் பிறகு பல ஸ்பேஸ் மிஷன்களுக்கு விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
ஃபெலிசெட் விண்ணுக்கு சென்ற முதல் மற்றும் ஒரே பூனையாகும். 1963 இல் ஒரு துணைப் பயணத்தின் போது ஃபெலிசெட் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. விஞ்ஞானிகள் அதன் நரம்பியல் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக ஃபெலிசெட்டின் மூளையில் மின்முனைகளுடன் பொருத்தினர்.
விண்ணுக்கு அனுப்பப்பட்ட விலங்குகளில் ஆமைகளும் அடங்கும். ஆச்சரியமாக இருக்கிறதா?
செப்டம்பர் 18, 1968ல் இரண்டு ரஷ்ய ஆமைகள் நிலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. நிலவுக்கு சென்று உயிருடன் பூமிக்கு திரும்பிய முதல் தரையில் வாழும் உயிரினம் இந்த ஆமைகள்
என்னது ஸ்பேசுக்கு மீன் அனுப்பப்பட்டதா?
நாசாவால் ஸ்கைலேப் 3ல் இரண்டு மம்மிச்சா மீன்கள் செலுத்தப்பட்டன. 1973 ஆம் ஆண்டு பயணத்தின் போது ஒரு பிளாஸ்டிக் பையில் இந்த மீன்கள் நீந்த கற்றுக்கொண்டு ஜீரோ கிராவிட்டியில் நீந்தியது!
இவற்றை தவிர, தவளைகள், எலிகள், புழுக்கள், கரப்பான்கள் கூட விண்ணுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust