நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த வியாழனன்று, இரு சிறிய விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இறந்திருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணைகள் கூறுகின்றன.
ஒரு இரட்டை என்ஜின் செஸ்னா 340 விமானமும், ஒரு ஒற்றை என்ஜின் செஸ்னா 152 விமானமும் மோதிக்கொண்டன. செஸ்னா 340யில் இருவரும், செஸ்னா 152வில் ஒரு விமானியும் பயணித்திருக்கின்றனர்.
இவ்விரு விமானமும், ஒரே சமயத்தில் தரையிறங்க முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வாட்சன்வில்லி நகர நேரப்படி, விபத்து மதியம் 3 மணியளவில் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, மைதானத்திலிருந்த யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என ஃபெடெரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்தது. விசாரணையின்போது இந்த விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கவும் புறப்படவும் முறையான கட்டுப்பாட்டுக் கோபுரம் இல்லாததால் சரியான தகவல் தொடர்பு கிடைக்காததே விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் மோதியபோது தரையில் இருந்து சுமார் 61 மீட்டர் உயரத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த விபத்தில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளாதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்பது குறித்து உடனடியான தகவல் இல்லை எனவும் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust