Sugar
SugarTwitter

Spirit Animal: வேலை செய்யாமலிருக்க தூங்குவதுபோல நடிக்கும் குதிரை- வைரல் புகைப்படம்

வேலையிலிருந்து தப்பிப்பதற்காகத் தூங்குவது போல பாவனை செய்து, ரைடர்ஸ் சென்ற பிறகு கண்களை திறக்கும் 'சுகர்' என்ற குதிரையின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Published on

சிறு வயதில் ஸ்கூலுக்கு செல்லாமல் தப்பிக்க நாம் வீட்டில் ஆயிரம் காரணம் சொல்லுவோம். வயிற்று வலி, தலைவலி, கால் வலி என்று. வீட்டில் இருப்பவர்களும் அதை நம்பி நம்மை ஸ்கூலுக்கு அனுப்பமாட்டார்கள். பள்ளிக்கு செல்லவேண்டிய நேரம் முடிந்தவுடன் நமக்கு வயிறு வலி தலைவலி எல்லாம் பறந்து போய்விடும் . அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறது சர்கஸில் இருக்கும் குதிரை ஒன்று.

Horse
Horse Pexels
Sugar
வயலின் வாசித்த பெண்; மெய் மறந்து உருகிய குழந்தை - வைரல் வீடியோ

சுகர் என்ற பெயர்கொண்ட குதிரை ஒன்று, வேலை செய்வதிலிருந்து தப்பிக்க படுத்து தூங்குவது போல நடித்து வருகிறது. அந்த குதிரையை சவாரிக்கு அழைத்து செல்ல ரைடர்ஸ் அதனிடம் நெருங்கினாலே கண்களை மூடிகொள்கிறது. எவ்வளவு முறை எழுப்ப பார்த்தாலும், ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போலவே இருந்துவிட்டு, ரைடர்ஸ் அதனை விட்டு விலகியதும் எல்லோரும் சென்றுவிட்டனரா என்று உறுதி செய்துகொண்டு பிறகு தான் கண்களை திறக்கிறதாம் இந்த குதிரை.

தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியுமா?

சுகர் படுத்து தூங்குவது போல பாவ்லா செய்வதை புகைப்படம் எடுத்த ஜிம் ரோஸ் என்ற நபர் தன் டிவிட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்ததும், இணையதளத்தில் அது வைரலாகி வருகிறது. சுகரை 'Spirit Animal', 'Smart Horse' என்று புகழ்ந்து வருகின்றனர்.

ஒருவர் "நல்ல குதிரை. இது என் அலுவலகத்திலிருந்தால் நன்றாக இருக்கும்" என்றார். இன்னொருவரோ, "நான் ஒருவேளை குதிரையாக இருந்தால் இப்படிதான் இருப்பேன்" என்று பதிவிட்டிருந்தார்.

மிருக நடவடிக்கை வல்லுநர்களோ, அதிக தூக்க கலக்கத்தில் இருக்கும்போது விலங்குகளிடம் இந்த கீழே படுத்துறங்கும் பழக்கம் இருப்பது உண்மை தான் என்கிறார்கள். எது எப்படியோ, இந்த குதிரையைப் போல நாமும் இருக்க முடிந்தால் எப்படியிருக்கும்?

Sugar
கின்னஸ் சாதனை படைத்த நாய் - என்ன காரணம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com