ஃபேஷன் என்ற வார்த்தைக்கு வரையறையே இல்லை. பெல்பாட்டம் முதல் ஸ்கின்னி ஜீன்ஸ் வரை ஒரு காலகட்டத்தில், உடைகளின் நாகரீகம் மாறியுள்ளதே தவிர, இந்த உடைதான் அணியவேண்டும், அதையும் இப்படித்தான் அணியவேண்டும் என்று விதிகள் இல்லை.
ஒரு விதமாக ஒரு உடையை நாம் அணிந்து வருகையில், அதை வழக்கத்திற்கு மாறாக மாற்றி உடுத்தினால் அது புதிய ஃபேஷனாகி விடுகிறது.
உடைகள் மட்டுமன்றி, ஃபேஷன் டிசைனர்கள் இன்னும் வித்தியாசமாக யோசித்து, நாம் அன்றாடம் பார்க்கும், உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்தியெல்லாம் புதிய ஆடைகளை வடிவமைக்கின்றனர். இதை Fashion Influencers ஃபேஷன் ஷோக்களில் அணிந்து அந்த புதிய டிசைன்களை டிஸ்பிளே செய்வார்கள்.
இந்த ஃபேஷன் ஷோ வீடியோக்களை இணையத்தில் நாம் நிறைய பார்த்திருப்போம். அவற்றை ரசிக்கவும் செய்திருக்கிறோம், சில சமயத்தில் அவை நகைச்சுவை பொருளாகவும் இருந்துள்ளது.
அந்த வகையில், சமீபகாலமாக ஆடை வடிவமைப்பாளர்கள் எப்படிப்பட்ட ஆடைகளை தயாரிக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக ஒருவர் நடத்திய ஃபேஷன் ஷோ இணையத்தை கலக்கி வருகிறது. இதை ஃபேஷன் ஷோ ஸ்பூஃப் எனலாம்.
இந்த வீடியோவில் வரும் நபர், ஃபிஜி நாட்டை சேர்ந்தவர். இவர் நடக்க பயன்படுத்தும் வாக்கரை கழுத்தில் மாட்டிக்கொண்டு நடந்து வருகிறார். ஸ்கிர்ட் போல தகரம், மரத்தினால் ஆன ஏணி, தோளின் மேல், உட்காரும் பலகை, இரும்பு கேட், கட்டிலில் இருக்கும் பிடி என வித விதமான பொருட்களை ஆடைகள் போல அணிந்து நடந்து வருகிறார். ஒரு கட்டத்தில் இவர் ஒரு பெண்ணையும் தூக்கிக்கொண்டு நடந்து வருவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதை "Most fashion shows these days" என தலைப்பிட்டு Dr.அஜயிதா என்ற டிவிட்டர் பயனர் பகிர்ந்திருந்தார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது
இவரை Showstopper என்று ஒரு பயனர் பாராட்ட, இவ்வளவு பொருட்களை இவர் எங்கிருந்து எடுத்து வருகிறார் என்ற கேள்வியும் இருந்து வருகிறது நெட்டிசன்களுக்கு!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust