இணையும் இரான் - செளதி அரேபியா:  உலக சக்தியாக உருவெடுக்கும் சீனா - அமெரிக்கா நிலை என்ன?

மத்திய கிழக்கில் இரான் ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக செளதி சந்தேகிக்கிறது. செளதிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு இரான் உதவுவதாக செளதி ஆட்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
Saudi Arabia Crown Prince Mohammed bin Salman
Saudi Arabia Crown Prince Mohammed bin SalmanNewsSense
Published on

ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ராஜாங்க உறவுகளை புதுப்பிக்க உள்ளது இரானும், செளதி அரேபியாவும்.  சீனாவில் இரண்டு நாட்டு அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து எதிர்பாராத இந்த அறிவிப்பு வந்துள்ளன.


இது ஏதோ மற்றொரு செய்தி என நாம் கடந்துவிட முடியாது. சர்வதேச அளவில் நிகழவிருக்கும்  சில முக்கிய நகர்வுகளின் முன்னோட்டம் இது. இரண்டு நாடுகளும் அந்த பிராந்தியத்தில் முக்கிய சக்தியாக திகழ்கின்றன.

இரான் செளதி இடையேயான இந்த நெருக்கம் குறித்து புரிந்து கொள்ள, கொஞ்சம் வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். 

ஷியா - சன்னி மோதல்  

இஸ்லாமின் பிறப்பிடமாக கருதப்படுகிறது சன்னி மக்கள் அதிகளவில் வாழும் செளதி அரேபியா. இஸ்லாமிய உலகில் செளதிக்கென்று ஒரு முக்கிய இடம் உண்டு, அதுமட்டுமல்ல, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது செளதி. இதன் காரணமாக அங்கு வளம் கொழிக்கிறது.

மத்திய கிழக்கில் இரான் ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக செளதி சந்தேகிக்கிறது. செளதிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு இரான் உதவுவதாக செளதி ஆட்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஷியா பிரிவினர் அதிகளவில் வாழும் நாடும் இரான். பல நூற்றாண்டுகளாக ஷியா, சன்னிக்கள் இடையே மோதல் இருப்பது குறிப்படத்தக்கது.

ஏமனுக்கு எதிராக உள்நாட்டில் கிளர்ச்சி செய்யும் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் உதவுகிறது என்பது செளதியின் குற்றச்சாட்டு. ஏமன் அரசை செளதி ஆதரிக்கிறது.குறிப்பாக செளதியின் நட்பு நாடு அமெரிக்கா.

Saudi Arabia Crown Prince Mohammed bin Salman
சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு: வணிகமும், வரலாறும் - ஒரு விரிவான பார்வை
Saudi Arabia Crown Prince Mohammed bin Salman
செளதி மன்னர் தெரியும், உலகை ஆளும், ஆண்ட இந்த 9 அரசர்கள் குறித்து தெரியுமா?

இரான் வரலாறு

1979 ஆம் ஆண்டு உள்நாட்டு புரட்சிக்கு பின் இரான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இஸ்லாமிய குடியரசாக மாறிய இரானின் ஆட்சி பொறுப்பை ஏற்றார் அயத்துல்லா  கொமேனி. இவரே அந்நாட்டின் அதி உயர் தலைவர்.

இரான் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் ஷியா முஸ்லிம்கள். அந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது இரான். குறிப்பாக இராக் அதிபர் சதாம் மறைவிற்கு பிறகு இரான் மிகப்பெரிய சர்வதேச அரசியல் சக்தியாக வளர்ந்து இருக்கிறது.

ஐஎஸ்-க்கு எதிரான சிரியாவின் போரில் சிரியா அரசுக்கு ஆதரவாக நின்றது இரான். லெபனானுக்கு எதிராக செளதி செயல்பட்டது என்பது இரானின் குற்றச்சாட்டாக இருந்தது. அமெரிக்காவுக்கும் இரானுக்கும் ஆதியில் இருந்தே ஆகாது.

மோசமான உறவு

2016ஆம் ஆண்டு ஷியா மதத்தலைவர் உள்ளிட்ட 46 பேர் செளதியில் தூக்கிலடப்பட்டார். இதன் பிறகு இரு நாட்டு நட்பில் விரிசல் அதிகமானது. இரானில் இருந்த செளதி தூதரகம் முற்றுகையிடப்பட்டது. இதனை அடுத்து இரு நாடுகள் இடையேயான ராஜாங்க உறவுகள் முறிந்தன.

இரண்டு நாடுகள் இடையே அப்போதிருந்து பதற்றம் நிலவி வந்தது. 2019 ஆண்டு செளதி எண்ணெய் நிறுவனங்கள் தாக்கப்பட்டது. இதற்கு இரானை குற்றஞ்சாட்டியது செளதி. ஆனால், இரான் இதனை மறுத்தது.

இரு நாடுகளும் அமைதி காண வேண்டும் என ஐ.நாவும் உலக நாடுகளும் வலியுறுத்தின. இரண்டு நாடுகளும் போரிட்டால் சர்வதேச அளவில் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக நாடுகள் அஞ்சின.

Saudi Arabia Crown Prince Mohammed bin Salman
செளதி அரேபியா சீனா நெருக்கம் அஞ்சும் அமெரிக்கா : என்ன நடக்கிறது அங்கே?

துளிர்விடும் நட்பு

இப்படியான சூழலில் இரு நாடுகளையும் மீண்டும் ஒன்று சேர்க்க சீனா களம் இறங்கியது. சீனாவில் நடந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் தூதரகங்களை திறக்க ஒப்புக் கொண்டுள்ளன.

அதுமட்டுமல்ல, இரான் அதிபர் இம்ராஹிமை தங்கள் நாட்டிற்கு மாரியாதை நிமித்தமாக அழைத்துள்ளது செளதி அரேபியா. இந்த இரு நாட்டு உறவை கவனமாக வரவேற்றுள்ளது அமெரிக்கா. இந்த முன்னெடுப்பை எடுத்ததற்காக சீனாவுக்கு நன்றி சொல்லி உள்ளது ஐ.நா.

 இப்போது எழும் கேள்வு என்னவென்றால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தம் செல்வாக்கை இழக்கிறதா அமெரிக்கா என்பதுதான். கடந்த சில ஆண்டுகளாக சீனாவிடம் செளதி அதிகம் இணக்கம் காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

Saudi Arabia Crown Prince Mohammed bin Salman
செளதி அரேபியா கதை - 1 : அடர் வனம் பாலைவனம் ஆக மாறிய வரலாறு!
Saudi Arabia Crown Prince Mohammed bin Salman
இந்தியாவில் நடுவானில் மோதிக்கொண்ட செளதி விமானம் : 1996-இல் நடந்தது என்ன? | பாகம் 2

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com