பிரிட்டன்: "உங்களை யார் தேர்ந்தெடுத்தது?"- வலுக்கும் அரச குடும்பத்துக்கு எதிரான குரல்கள்!

"என் அரசனில்லை" என்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருக்கின்றனர். இது மன்னர் 3ம் சார்லஸ் பதவியேற்புக்கு எதிரான குரலாக பார்க்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தது கடுமையான எதிர்வினைகளை எழுப்பி வருகிறது.
royal family
royal familytwitter
Published on

பிரிட்டிஷை நீண்ட நாட்கள் ஆண்டவரான மகாராணி எலிசபெத் சமீபத்தில் மரணமடைந்தார். இவரது இழப்புக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் இங்கிலாந்து மன்னர்களுக்கு எதிரான குரல்கள் அங்கு வலுத்து வருகிறது. பிரிட்டிஷ் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த ஒரு பக்கம் மக்கள் குவிந்திருந்தாலும் மற்றொரு பக்கம் சாலைகளில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அரச குடும்பத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

கையில் "என் அரசனில்லை" என்ற பதாகைகளை அவர்கள் ஏந்தியிருக்கின்றனர். இது மன்னர் 3ம் சார்லஸ் பதவியேற்புக்கு எதிரான குரலாக பார்க்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தது கடுமையான எதிர்வினைகளை எழுப்பி வருகிறது.

குடிமையியல் உரிமைகள் அமைப்பான லிபெர்ட்டி கருத்து சுதந்திரத்துக்கு எதிராக காவல்துறையை பயன்படுத்துவது மிகவும் மோசமான ஒன்று எனக் கருத்து தெரிவித்திருக்கிறது.

சமூக வலைத்தளங்களிலும் அரச குடும்பத்துக்கு எதிரான குரல்கள் எழுந்திருக்கிறது. #NotNyKing ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஆக்ஸ்போர்டை சேர்ந்த சைமன் ஹில் என்ற நபர் "யார் அவர்களை தேர்ந்தெடுத்தது?" என்று கேள்வி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்டதால் இந்த விவகாரம் இங்கிலாந்து முழுவதும் வெடித்தது.

royal family
Queen Elizabeth II : ராணியிடம் இருந்து வந்த கடைசி வாழ்த்து கடிதம் : என்ன இருந்தது?

மற்றொரு 22 வயது நபர், இளவரசர் ஆண்ட்ரிவுக்கு எதிராக பேசியதால் கைது செய்யப்பட்டார். போலீஸாரின் நடவடிக்கை இங்கிலாந்து மக்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

"குடியரசு பிரச்சாரம்" செய்துவரும் ஆர்வலர்கள் அரச குடும்பம் மிகவும் பழமையானது என்றும் அது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் கூறிவருகின்றனர்.

royal family
Queen Elizabeth : இறுதி சடங்கிற்கு எத்தனை கோடி செலவு? யார் யாருக்கு அனுமதி? விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com