Queen Elizabeth II
Queen Elizabeth II Twitter

Queen Elizabeth II : ராணியிடம் இருந்து வந்த கடைசி வாழ்த்து கடிதம் : என்ன இருந்தது?

அந்த கடிதம் வந்ததும் தான் கண்ணீர் விட்டதாகவும், "முதலில் அதை தன்னால் நம்ப முடியவில்லை" என்றும் மூதாட்டி கூறினார்.
Published on

பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 8 ஆந்தேதி காலமானார். பிரிட்டன் வரலாற்றில் 70 ஆண்டுகள் ஆட்சி செய்து அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத் தான்.

மகாராணி எலிசபெத்தின் மறைவிற்கு இங்கிலாந்து மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பொது மக்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார்

queen elizabeth
queen elizabethTwitter

இதற்கிடையில் இங்கிலாந்து ராணியிடம் இருந்து வந்த கடைசி வாழ்த்து கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

100வது பிறந்தநாளைக் கொண்டாடும் Gwendoline Hoare என்ற மூதாட்டிக்கு ராணி 2-ம் எலிசபெத் தனது இறப்புக்கு முன்னதாக அனுப்பிய வாழ்த்து செய்தி அடங்கிய கடிதம் வந்துள்ளது. அதில் "உங்களுக்கு என் வாழ்த்துகளை அனுப்புகிறேன்" என ராணி குறிப்பிட்டுள்ளார்.

Queen Elizabeth II
எலிசபெத் மகாராணி - இளவரசர் பிலிப்பின் தசாப்தங்கள் கடந்த காதல் கதை!

மறைந்த ராணியிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றதில் "மிகவும் மகிழ்ச்சியாக" இருப்பதாக Gwendoline Hoare கூறினார்.

மேலும் அந்த கடிதம் வந்ததும் தான் கண்ணீர் விட்டதாகவும், "முதலில் அதை தன்னால் நம்ப முடியவில்லை" என்றும் மூதாட்டி கூறினார்.

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது!

Queen Elizabeth II
மரணத்தின் விளிம்பில் சார்லஸ்? எலிசபெத் மறைவை கணித்தவரின் பகீர் தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com