விந்தணுக்களில் ஆபரணங்கள் தயாரிக்கும் பெண் - மக்களிடம் பிரபலமானது எப்படி?

அதுமட்டுமில்லாமல் தாய்ப்பால், உயிரிழந்தவர்களின் சாம்பல் ஆகியவற்றைக் கொண்டு நகை செய்து விற்பனை செய்து வருகிறார். மோதிரங்கள், செயின்கள், வளையல்கள் என அவர் கஸ்டமைஸ் செய்து கொடுக்கும் நகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
Jewellery made of sperm
Jewellery made of spermTwitter
Published on

பொதுவாகப் பெண்கள் தாங்கள் உடைகளை விட அதற்கென பயன்படுத்தும் ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தேடித் தேடி வாங்குவார்கள்.

சிலர் உடைகளுக்கு பொருத்தமாக பேக், செருப்பு அணிவார்கள். தற்போது வளர்ந்து வரும் நவீன உலகினால், எப்படி வாடிக்கையாளர்களுக்கு வேண்டுமோ அப்படி கஸ்டமைஸ் செய்து கொடுக்கிறார்கள்.

முதலில் நெருக்கமானவர்களின் பெயர்கள், அதன் பின்னர் புகைப்படங்களுடன் கூடிய ஆபரணங்கள் என வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமைஸ் செய்து கொடுக்கிறார்கள்.

Jewellery made of sperm
Chewing gum ஐ வைத்து வித்தியாசமான முறையில் பணம் சம்பாதிக்கும் பெண் - எப்படி?

ஆனால் கனடாவைச் சேர்ந்த Amanda Booth என்ற பெண் ஒரு படிமேல் சென்று , விந்தணுக்களை கொண்டு ஆபரணங்கள் தயாரித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தாய்ப்பால், உயிரிழந்தவர்களின் சாம்பல் ஆகியவற்றைக் கொண்டு நகை செய்து விற்பனை செய்து வருகிறார். மோதிரங்கள், செயின்கள், வளையல்கள் என அவர் கஸ்டமைஸ் செய்து கொடுக்கும் நகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம், நமது மனதிற்கு நெருக்கமானவர்களால் வாங்கி தரப்படும் நகைகள், அவர்களுக்கு சொந்தமான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதால் தான்.

Jewellery made of sperm
ஷூ லேஸ் காதணிகளை அறிமுகப்படுத்திய பிரபல நிறுவனம் - என்ன விலை தெரியுமா?

மனதிற்கு பிடித்தமானவர்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதற்காகவே வித்தியாசமான முறையில் நகைகளை வடிவமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அமாண்டா.

தயாரிப்பது தொடர்பான வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்டதன் மூலம் அவை பிரபலமடைந்து அமாண்டா வடிவமைக்கும் நகைகளுக்கு தற்போது ஏராளமான வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல் நகை செய்வதற்கு ஏராளமான ஆர்டர்களும் குவிந்து வருகிறது.

மேலும் நெருக்கமானவர்கள் அல்லது செல்லப்பிராணிகளின் தகனம் செய்யப்பட்ட சாம்பல், ரோமங்கள் மற்றும் முடி ஆகியவற்றைக் கொண்டு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நகை வடிவமைத்து வருகிறார்.

Jewellery made of sperm
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ள 10 பைக்குகள் இவை தான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com