Casper Cat : 4 ஆண்டுகள் தினமும் 17 கி.மீ பஸ் ட்ராவல் - ஒரு பூனையின் பயணக் கதை!

காஸ்பர் பூனை தினமும் சரியாக 10 மணிக்கு 3ம் எண் பேருந்தைப் பிடித்து 17 கிலோமீட்டர் பயணம் செய்து மீண்டும் தன் வீட்டுக்கு திரும்புவது ஆரம்பத்தில் எல்லாருக்குமே விசித்திரமாகப்பட்டது.
Casper Cat : 4 ஆண்டுகள் தினமும் 17கி.மீ பஸ் ட்ராவல் - ஒரு பூனையின் பயணக் கதை!
Casper Cat : 4 ஆண்டுகள் தினமும் 17கி.மீ பஸ் ட்ராவல் - ஒரு பூனையின் பயணக் கதை!Twitter
Published on

21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் மிகவும் பிரபலமான பூனை காஸ்பர் தி காட்.

இங்கிலாந்தின் பிளைமவுத் நகரைச் சேர்ந்த இந்த பூனை தினமும் 3ம் எண் பேருந்தில் ஏறி யாருக்கும் தொந்தரவு இல்லாமல் பின் இருக்கையில் அமர்ந்துகொள்ளும்.

சாலையையும் கடந்து செல்லும் கடைகளையும் மனிதர்களையும் வேடிக்கைப் பார்த்தபடி ஊர் முழுவதையும் சுற்றி பேருந்து மீண்டும் தனது நிறுத்தத்துக்கு வரும் வரை பயணிக்கும்.

இந்த பயணத்தில் காற்று வாங்குவதும் சக பயணிகளின் கால்களுக்கு பின்னால் நடப்பதும் காஸ்பருக்கும் மிகவும் பிடித்த செயல்களாம்.

பேருந்தில் பயணிக்கும் பயணிகள் கூட பல நேரங்களில் தாமதமாக வந்தாலும் காஸ்பர் ஒருபோதும் நேரம் தவறுவதில்லையாம்.

சரியாக 10 மணிக்கு தன்னுடைய 17 கிலோ மீட்டர் பயணத்தை தொடங்கிவிடும்.

காஸ்பரை அந்த பேருந்தில் பயணிக்கும் அனைவருக்கும் தெரியும். சில நேரங்களில் தனது வீடு இருக்கும் நிறுத்தத்தில் காஸ்பர் இறங்க பயணிகள் உதவியிருக்கின்றனர்.

காஸ்பர் பேருந்து பயணிகளைக் கடந்து அந்த ஊர் முழுவதும் பிரபலமடைந்தது.

4 ஆண்டுகள் தொடர்ந்து பயணித்ததால் காஸ்பர் பிபிசி பத்திரிக்கையில் செய்தியாக வந்ததும் உலகப் புகழ் பெற்றது.

Casper Cat : 4 ஆண்டுகள் தினமும் 17கி.மீ பஸ் ட்ராவல் - ஒரு பூனையின் பயணக் கதை!
பூனை வளர்ப்பவரா நீங்கள்? அது குறித்த இந்த 5 ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

மக்கள் காஸ்பர் மீது மிகவும் அன்பு செலுத்தினர். அதனுடன் விளையாடுவது கொஞ்சுவதுமாக தங்களது பயணத்தைக் கழித்தனர்.

காஸ்பரின் உரிமையாளரான சூசனைப் பின் தொடர்ந்து முதல் நாள் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது காஸ்பர்.

அந்த பயணமும் மனிதர்களும் பிடித்திருந்ததால் தினமும் அந்த நேரத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.

காஸ்பரை ஒரு விலங்குகள் காப்பகத்தில் இருந்து பெற்ற போது அதற்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும் என்று அந்த காப்பக ஊழியர் கூறியதாக சூசன் தெரிவித்துள்ளார்.

Casper Cat : 4 ஆண்டுகள் தினமும் 17கி.மீ பஸ் ட்ராவல் - ஒரு பூனையின் பயணக் கதை!
அமெரிக்கா : ஒரு நாள் மேயராக பதவி வகித்த பூனை - எப்படி சாத்தியம் ?

4 ஆண்டுகள் தொடர்ந்து பயணித்த காஸ்பரை எல்லாருக்கும் தெரியும். எல்லாரும் அதன் பாதுகாப்பை உறுதி செய்பவர்களாக இருந்தாலும் ஒரு நாள் ஒரு இருசக்கர வாகனம் காஸ்பர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் காயமடைந்த காஸ்பர் இறந்தது. காஸ்பரின் மறைவு மொத்த ஊருக்குமே சோகமான ஒன்றாக அமைந்தது.

காஸ்பரின் கதையை Casper the Commuting Cat என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார் அதன் உரிமையாளர் சூசன்.

விலங்குகளும் இந்த சமூகத்தின் அங்கம் தான் என்பதை காஸ்பரின் கதையை போல சில நிகழ்வுகள் அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்திச் செல்கிறது.

Casper Cat : 4 ஆண்டுகள் தினமும் 17கி.மீ பஸ் ட்ராவல் - ஒரு பூனையின் பயணக் கதை!
இங்கிலாந்தில் ஒரு 'அரசியல் பூனை' - Larry The Cat பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com