10 நிமிடங்களில் 130 குண்டுகள்; முதலாம் உலக போரில் சென்னையை தாக்கிய ஜெர்மனி - என்ன நடந்தது?

சென்னை உயர்நீதிமன்ற வளாகம், துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகளின் கிளப், பொது மருத்துவமனை, வெப்பேரி, நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலை, பூந்தமல்லி ஹை ரோடு, ராயபுரத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை, காசா மேஜர் சாலை, ஜார்ஜ் டவுன் ஆகிய இடங்களில் குண்டுகள் விழுந்தன.
10 நிமிடங்களில் 130 குண்டுகள்; முதலாம் உலக போரில் சென்னையை தாக்கிய ஜெர்மனி - என்ன நடந்தது?
10 நிமிடங்களில் 130 குண்டுகள்; முதலாம் உலக போரில் சென்னையை தாக்கிய ஜெர்மனி - என்ன நடந்தது?Twitter
Published on

உலக வரலாற்றில் இரண்டு போர்களிலும் இந்தியா பங்கெடுக்கவில்லை என நமக்குத் தெரியும். ஆனால் முதலாம் உலகப் போரின்போது, 10 நிமிடங்கள் மட்டும் சென்னை மீது தாக்குதல் நடந்தது.


அது சென்னை மாநகர் மெட்ராஸ் என அழைக்கப்பட்ட காலம்,
1914 செப்டம்பர் 22ம் தேதி, இரவு 10 மணி அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மெட்ராஸை உருகுலைத்தது எனலாம். வெறும் பத்தே நிமிடங்களில் 130 குண்டுகள் சென்னையை தாக்கின.
எல்லா குண்டுகளும் எம்டன் என்ற ஒரு கப்பலில் இருந்து தான் வந்தன. முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் இப்படி ஒரு தாக்குதல் மெட்ராஸில் யாரும் எதிர்பாராத ஒன்று.

இந்த தாக்குதல் நடத்தப்பட என்ன காரணம்? தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது? பின்விளைவுகள் என்ன? எம்டன் கப்பலுக்கு என்ன நடந்தது? என விரிவாக காணலாம்.

வான் முல்லர்

முதலாம் உலகப் போர், உலகப்போர் எனக் கூறப்பட்டாலும் அது ஐரோப்பாவுக்கு உள்ளாகவே தான் நடந்தது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா என்று நேச நாடுகளும் ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி அகிய அச்சு நாடுகளும் எதிரெதிரே போரிட்டன.

இந்த நாடுகளின் எல்லைகள் பக்கத்திலிருப்பதனால் காலனி ஆதிக்கத்தில் ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிக தூரத்திலிருக்கும் மெட்ராஸ் மீது தாக்குதல் நடக்கும் என யாரும் நினைக்கவில்லை.

ஜெர்மன் கப்பல்படையில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது எம்டன் கப்பல். இதற்கு காரணம் அதன் கேப்டன் வான் முல்லர். இவர் தனக்கான இலக்கை தானே நிர்ணயித்துக்கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.

வான் முல்லர்
வான் முல்லர்



நேசநாடுகளின் 40க்கும் மேற்பட்ட கப்பல்களை நாசம் செய்துள்ளது எம்டன் கப்பல். சீன கடலில் நிலைபெற்றிருந்தபோது வான் முல்லர் சென்னையைத் தாக்க முடிவு செய்துள்ளார்.

இந்திய வீரர்கள் 15 லட்சம் பேர் முதலாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக சண்டையிட்டனர். 1,7 லட்சம் குதிரைகள் பல ஒட்டகங்கள் இங்கிலாந்துக்கு உதவி புரிய அனுப்பப்பட்டன. இதெல்லாம் இந்திய பகுதியை குறிவைக்க காரணமாக இருந்திருக்கின்றன.

சென்னையைத் தாக்குவதன் மூலம் உலகின் எந்த எல்லையில் இருந்தும் ஜெர்மனியால் உங்களை தாக்க முடியும் என பிரிட்டிஷுக்கு கூற நினைத்தார் வான் முல்லர். ஆனால் இந்த தாக்குதலே அவரது முடிவுக்கும் காரணமாக இருக்கும் என அவர் நினைக்கவில்லை.

நிலைகுலைந்த மெட்ராஸ்

1758 பிரஞ்சு தாக்குதலுக்கு பிறகு வேறெந்த தாக்குதலையும் கண்டிராத அமைதிப் பூங்காவாக இருந்தது சென்னை. மெட்ராஸ் மக்கள் கார்திகை தீபத்தைக் கொண்டாட வீடெங்கும் விளக்கேற்றி வைத்திருந்தனர். பிரிட்டீஷ் இராணுவ கிளப்பில் கேளிக்கைகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருந்தன.

சென்னையை நோக்கி வந்த எம்டன் கப்பல், 2 மைல் தூரத்தில் நின்று தனது பீரங்கிகளால் குறிவைத்து குண்டுகளைப் பொழியத்தொடங்கியது.

madras
madras



வெறும் 10 நிமிடங்களுக்குள் 130 குண்டுகள் பொழியப்பட்டன. பீரங்கியில் இருந்து வந்த குண்டுகள் சில வெடிக்காத நிலையில் கண்டெடுக்ப்படன.

சென்னை உயர்நீதிமன்ற வளாகம், துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகளின் கிளப், பொது மருத்துவமனை, வெப்பேரி, நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலை, பூந்தமல்லி ஹை ரோடு, ராயபுரத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை, காசா மேஜர் சாலை, ஜார்ஜ் டவுன் ஆகிய இடங்களில் குண்டுகள் விழுந்தன.

பிரிட்டிஷ் அரசுக்குச் சொந்தமான பர்மா ஆயில் நிறுவனத்தில் 4 டேங்குகளில் இருந்த 3.5 லட்சம் கேலன் கச்சா எண்ணெய் தீப்பிடித்துக் கொண்டது. அதில் இருந்து தீ ஜூவாலைகள் வெளிப்பட்டன.

10 நிமிடங்களில் 130 குண்டுகள்; முதலாம் உலக போரில் சென்னையை தாக்கிய ஜெர்மனி - என்ன நடந்தது?
ஈமு போர் : ஆஸ்திரேலிய இராணுவத்தை எதிர்கொண்ட பறவைகள்; வென்றது யார்? வியக்க வைக்கும் வரலாறு!

நம்பிக்கையிழந்த மக்கள்

இந்த தாக்குதலில் 3 பேர் இறந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னையில் குண்டு விழுந்தது கேள்விப்பட்ட உடன் ஊட்டியில் வெக்கஷனுக்கு சென்றிருந்த ஆளுநர் திரும்பி சென்னை வந்தார்.
சென்னையில் பாதிப்புகள் பற்றிக் கேட்டுவிட்டு 3 நாட்களில் மீண்டும் ஊட்டிக்கே சென்றுவிட்டார்.

இதனால் ஆளுநரே சென்னையில் இல்லை. சென்னை பாதுகாப்பாக இல்லை என வதந்தி பரவத் தொடங்கியது. மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னையில் இருந்து வெளியேறினர்.

இதனால் மெட்ராஸில் அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏறியது. உனவுப் பொருட்களுக்கு பற்றாகுறை வந்தது. மாகாண அரசு சென்னையில் இருப்பது ஆபத்தானது இல்லை என துண்டுச் சீட்டு பிரச்சாரம் செய்யும் நிலை வந்தது.

10 நிமிடங்களில் 130 குண்டுகள்; முதலாம் உலக போரில் சென்னையை தாக்கிய ஜெர்மனி - என்ன நடந்தது?
ஈரான் : பாலைவனம், தீவிரவாதம், போர் - நூற்றாண்டுகளாக நிம்மதியின்றி தவிக்கும் நாட்டின் கதை

மூழ்கிய எம்டன்

எம்டன் கப்பல் சென்னையைத் தாக்கியது பிரிட்டிஷ் அரசை கோபப்படுத்தியது. எம்டனை வேட்டையாட வேண்டும் என பிரிட்டிஷ் படைகள் உறுதிபூண்டன.

சென்னையில் தாக்குதல் நடத்திய 50 நாட்களில் 1814ம் ஆண்டு நவம்பர் 9ம்தேதி பிரிட்டிஷ் படையின் 3 கப்பல்கள் கொக்கோஸ் தீவு அருகே எம்டனை சுற்றி வளைத்தன.

இறுதிவரை போராடிய எம்டன் இறுதியாக கடலின் ஆழத்தில் சமாதியடைந்தது. அதிலிருந்தது உயிருடன் தப்பிய வீரர்கள் பிரிட்டீஷ் அரசிடம் சரணடைந்தனர்.

10 நிமிடங்களில் 130 குண்டுகள்; முதலாம் உலக போரில் சென்னையை தாக்கிய ஜெர்மனி - என்ன நடந்தது?
உலகின் மிக சிறிய போர்: 38 நிமிடத்தில் நூற்றுக்கணக்கான உயிரிழப்பு - ஒரு விசித்திர வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com