ஈரான் : பாலைவனம், தீவிரவாதம், போர் - நூற்றாண்டுகளாக நிம்மதியின்றி தவிக்கும் நாட்டின் கதை

1980 களின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளால், இன்றுவரை இரான் நாடால் ஒரு வளர்ந்த நாடாக பெயர் எடுக்க முடியவில்லை. அப்படி இரான் நாட்டுக்கு என்ன தான் வரலாறு இருக்கிறது?
ஈரான்
ஈரான்Istock

இரான். ஒரு மலைப்பாங்கான, வறண்ட, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்ந்த நாடு. இன்றும் இரானில் பாரசீகர்கள், அசார்பாய்ஜானைச் சேர்ந்தவர்கள், குர்து, லூர், கிலக்ஸ், பாலூசிஸ்தான், தூறுக மேனிஸ்தான். என பல தரப்பினர் வாழ்நது வருகிறார்கள். பெர்ஷியா என்றழைக்கப்பட்ட இந்த நாட்டுக்கும் இந்தியாவைப் போல ஒரு வளமான வரலாறு உண்டு.

வடக்கில் அசார்பாய்ஜான், ஆர்மேனியா, துருக்மேனிஸ்தான், கேப்சியன் கடல், கிழக்கில் பாகிஸ்தான் & ஆப்கானிஸ்தான், தெற்கில் பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா மேற்கில் துருக்கி, இராக்குக்கு மத்தியில்அமைந்திருக்கிறது. இரான் நாட்டின் எல்லையில் சுமார் 4780 கிலோமீட்டர் கடலால் சூழப்பட்டிருக்கிறது என்கிறது பிரிட்டாணியா வலைதளம்.

டெஹ்ரானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நாட்டின் பெரும்பாலான நிலப்பகுதிகள் பாலைவனம் தான். இருப்பினும் கட்டடக் கலை, தோட்டங்கள், வணிக உறவு போன்ற விஷயங்களுக்கும், வாரலாற்றுக்கும் இரானில் பஞ்சமில்லை. 1980 களின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகளால், இன்றுவரை இரான் நாடால் ஒரு வளர்ந்த நாடாக பெயர் எடுக்க முடியவில்லை. அப்படி இரான் நாட்டுக்கு என்ன தான் வரலாறு இருக்கிறது?

எப்படிப் பார்த்தாலும் குறைந்தபட்சம் கிமு 550 ஆம் ஆண்டிலிருந்து இரான் நாட்டின் வரலாற்றைத் தொடங்கலாம். அந்தக் காலகட்டத்தில் அசாமினேட் சாமிராஜ்ஜியம் (Achaemenid dynasty) இரானை ஆட்சி செய்து வந்தது. முதலாம் டேரியஸ் தலைமையிலான ஆட்சி சீரும் சிறப்புமாக ஏகன் கடல் முதல் லிபியா வரை, இண்டஸ் பள்ளத்தாக்கு வரை பறந்து விரிந்து கிடந்தது.

அரேபியர்களின் படையெடுப்பு காரணமாக கிபி 636 ஆம் ஆண்டு, இரான் நாட்டுக்குள் சசானித் சாம்ராஜ்ஜியத்தின் (Sassanid dynasty) ஆட்சி முடிவுக்கு வந்தது. இஸ்லாமிய ஆட்சி ஈரானின் அரியணையில் ஏறியது. அதுநாள் வரை இரான் நாட்டுக்கென இருந்த தனி அடையாளங்கள், கலை & கலாச்சாரங்கள் எல்லாம் இந்த அரேபியா படையெடுப்புப்புப் பின் மெல்ல காணாமல் போகத் தொடங்கின.

9 ஆம் நூற்றாண்டு வாக்கில் நவீன காலத்து பாரசீக மொழி உருவானது. ஆனால் அம்மொழியின் வரி வடிவம் அரேபியா எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டது. அதுவே இரானிய கலாச்சாரத்தின் மறுமலர்ச்சியாகவும் கூறப்படுகிறது.

1220 ஆம் ஆண்டு வாக்கில் மங்கோலிய அரசர் செங்கீஸ் கான் பாரசீகத்தை கைப்பற்றி, அவரது பேரன் ஹுலகு ஆட்சி செய்தார். 1501 ஆம் ஆண்டு ஷியா கீசில்பஷ் (Qizilbash) என்கிற போர் செய்யக்கூடிய மலைவாழ் மக்களின் உதவியோடு, முதலாம் ஷா இஸ்மாயில், இஸ்லாமிய ஷஃபாவித் சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.

இவர் காலகட்டத்தில் தான், இரான் நாட்டில் ஷியா இஸ்லாம் அரச மதமாக மாறியதேன பிபிசி வலைதளைக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1571 - 1629 காலகட்டத்தில் சஃபாவீத் சாம்ராஜ்ஜியத்தை முதலாம் ஷா அப்பாஸ் ஆட்சி செய்து வந்தார்.

இவர் கீசில்பஷ் மலைவாழ் இனத்துக்கு கொடுக்கப்பட்டு வந்த முக்கியத்துவத்தைக் குறைத்து, ராணுவத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். மேலும், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளோடு பல ராஜாங்க ரீதியிலான உறவுகளையும் நிறுவினார்.

மொஹம்மத் கான் கஜார்
மொஹம்மத் கான் கஜார்

1736 ஆம் ஆண்டு சஃபாவித்களின் சாம்ராஜ்ஜியம் ஒரு முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, 1794 ஆம் ஆண்டு வாக்கில் மொஹம்மத் கான் கஜார் என்பவர் தலைமையில் கஜார் வம்சத்தினார் இரானின் ஆட்சிக் கடிவாளத்தைப் பிடித்தனர். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக அப்போது இரானில் நிலவி வந்த அமைதியற்ற சூழல் மொஹம்மத் கானால் ஒரு முடிவுக்கு வந்தது. மறுபக்கம் இரான் சமூகத்தில் மதகுருமார்களின் ஆதிக்கமும், அவர்களுக்கு இரான் நாட்டின் அரசியலில் நிலவி வந்த செல்வாக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

1828 ஆம் ஆண்டு, இரண்டாம் ரஷ்ய - பாரசீகப் போரால் இரானுக்கு காகசஸ் பகுதியில் தனக்கு இருந்த அதிகாரத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

1907 ஆம் ஆண்டு இரான் நாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதால், அதுநாள்வரை இரான் நாட்டில் அரசர்களுக்கு இருந்த அளவற்ற அதிகாரம் குறைக்கப்பட்டது அல்லது ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தப்பட்டது.

ஐஸ் கிரீம் விளம்பரத்தில் நடித்த பெண்ணை தடை செய்த இரான் அரசாங்கம்

பலாவி சாம்ராஜ்ஜியம்:

1921 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இரான் நாட்டின் தளபதி ரேசா கான் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 1926 ஆம் ஆண்டு, ரேசா கான், ரேசா ஷா பலாவி என்கிற பட்டத்தகவோடு முடிசூட்டிக் கொண்டார். 1935 ஆம் ஆண்டுதான் இன்று நாம் இரான் என்றழைக்கும் பெயர், அந்த நாட்டிற்கு சூட்டப்பட்டது.

அதன் பின் ஏற்பட்ட இரண்டாம் உலகப் போரில், இரான், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாட்டுத் தரப்பை ஆதரித்தது. இது ரஷ்ய தரப்பை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. ஆங்கிலேயர்களும், ரஷ்யர்களும் இரான் நாட்டில் குடியேறத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, ரேசா கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது மகன் மொஹம்மத் ரேசா பலாவி அரசராக அமர்த்தப்பட்டார்.

ஈரான்
ஈரான் நாடு குறித்த ஆச்சர்யமான இந்த 8 உண்மைகள் தெரியுமா?

1951 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாத வாக்கில், இரான் நாட்டில் உள்ள கச்சா எண்ணெய்த் துறையை தேசியமயமாக்க, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆனால் எதார்த்தத்தில் இரான் நாட்டின் கச்சா எண்ணெய்த் துறையை கணிசமாக ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. இரானை வழிக்குக் கொண்டுவர பிரிட்டன், இரான் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி இரான் பொருளாதாரத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தது. மறுபக்கம், அரச குடும்பத்துக்கும், பிரதமர் மொஹம்மத் மொசாதேக் அவர்களுக்கும் இடையில் பதவிப் போர் தொடங்கியது.

1953 ஆம் ஆண்டு, பிரதமர் மொசாதேக் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த சம்பவத்துக்கும், பிரிட்டன் & அமெரிக்க உளவு அமைப்புகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெனரல் ஃபஸலொல்லா சஹிதி பிரதமராக பதவியில் அமர்த்தப்பட்டார். மொசாதேக் காலத்தில் வெளிவாட்டுக்குத் தப்பிச் சென்று இருந்த மொஹம்மத் ரேசா பலாவி மீண்டும் இரான் வந்தடைந்தார்.

Shah
Shah

நவீனமயமாக்கல்:

1963 ஜனவரி மாதவாக்கில் வெள்ளைப் புரட்சித் திட்டத்தைத் தொடங்கினார் ஷா. இது நில சீர்திருத்தங்கள், சமூக & பொருளாதார நவீனமயமாக்களை உள்ளடக்கியதாக இருந்தது. மறுபக்கம் 1960கள் காலத்தில் தன் ரகசிய காவல் படையான சவாக்கை நம்பியே பல காரியங்களைச் செய்து வந்தார் பலாவி. இந்தப் பிரச்சனை முற்றிப் போய், 1978 செப்டம்பர் மாதத்தில், இரானில் இருந்த பல மாத குருமார்களை தனிமைப்படுத்தியது ஷாவின் காவல்துறை. ஷாவின் சர்வாதிகார ஆட்சி காரணமாக நாடே வன்முறையில் திக்குமுக்காடியாது. எங்கு பார்த்தாலும் கலவரம், மக்கள் போராட்டம் என மீண்டும் இரானில் அமைதியற்ற சூழல் நிலவியது.

1979 ஜனவரி மாதம் ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் இரான் நாட்டைவிட்டு வெளியேறினர். 1979 பிப்ரவரியில் சுமார் 14 ஆண்டுகளாக இரான் நாட்டிலிருவது வெளியேறி இராக் & பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்த ஆயதுல்லா ருஹொல்லா காமனேனி மீண்டும் இரான் வந்தடைந்தார். 1979 ஏப்ரலில் இஸ்லாமிய இரான் குடியரசு உருவாக்கப்பட்டது.

ஈரான்
ஈரான்: இளம்பெண் கொலை? ஹிஜாபிற்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் - விரிவான தகவல்கள்

1980 ஜனவரியில் அபோல்ஹசன் பணி சாதர் (Abolhasan Bani-Sadr) இஸ்லாமிய இரான் குடியரசின் முதல் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். மறுபக்கம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற அரசர் ஷா, புற்றுநோய் காரணமாக எகிப்து நாட்டில் காலமானார்.

ஈரான் : உச்சத்தில் வறுமை, பாலியல் தொழில் செய்யும் பெண்கள் - கண்ணீர் சிந்த வைக்கும் நிலைமை

இராக் - இரான் போர்

அதே 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரான் - இராக் இடையிலான போர் வெடித்தது. சுமார் 8 ஆண்டுகள் நடந்த இப்போர், ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால் 1988 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த 8 ஆண்டுகளுக்கு இடையில், இரான் அமெரிக்கர்களை பணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தது, அவர்களை மீட்க அமெரிக்க தரப்பில் ரகசியமாக ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டது (Iran - Contra Affairs) போன்ற பல பிரச்சனைகள் எழுந்தன.

இரான் நாட்டின் அதிஉயர் தலைவராக வலம் வந்த ஆயதுல்லா காமானெனி, 1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி காலமானார்.

ஈரான்
ஈரான்: இஸ்லாமிய புரட்சிக்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை என்ன?- பேசும் படங்கள்

ஈரான் இன்றைய நிலை

இரான் இராக் போரைத் தொடர்ந்து, அமெரிக்கா, இரானின் சொத்து பத்துகளை முடக்கியது, இராக் குவைத் நாட்டை ஆக்கிரமித்த போது கூட இரான் மெளனம் காத்தது. 1990 களில் இரான் - இராக் நாடுகளுக்கு இடையில் மீண்டும் ராஜ்ஜிய அளவிலான பேச்சு வார்த்தைகள் தொடங்ககியது, இரான் தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி அமெரிக்கா இரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது, 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாணவர்கள் கலவரம் என 2000 ஆம் ஆண்டு வரை உருண்டோடினா.

ஈரான்
ஈரான்: ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை - நாடு திரும்பக் கூடாது என மிரட்டல்

இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட இரனில் இப்போதும் அமைதி நிலவுவதாகத் தெரியவில்லை. அரசியல் நிலையற்றதன்மை, சர்வதேச அரங்கில் பல்வேறு குற்றச்சாட்டுகள் & பிரச்சனைகள், பொருளாதாரத் தடைகள் என பல்வேறு சீராமங்களுக்கு இடையில்தான் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறது இரான்.

இது போக இரான் சர்வதேசஅளவில் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகக் கூறப்படுவதும், அந்நாட்டை சர்வதேச சமூகதிகதி சமூகத்திடமிருந்து பிரித்துவைத்திருக்கிறது. எப்போதெல்லாம், இரான் நாட்டுக்குள்ளேயே புதுமைகளும், புதுக்கருத்துகளும் எழுகிறதோ, அப்போதே அதைக் கிள்ளி ஏறிய ஒரு தரப்பினர் தயாராக இருக்கிறார்கள் என்கிறது பிரிட்டானிகா வலைதளம்.

ஈரான்
ஈரான் ஜாஃபர் பனாஹி : அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்த கலைஞன் - ஜாமீனில் விடுதலை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com