சீனா மீண்டும் அணுஆயுத சோதனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான இடத்தை சீனா ரகசியமாக உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கு போட்டியான வல்லரசாக உலக அரங்கில் உருவாகி வருகிறது சீனா. மேலும் இந்தியாவுக்கும் அவ்வப்போது சீனா அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஊடகங்கள் சீனா மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதாக எச்சரிக்கின்றன. சீனாவின் சின்ஜியாங்கில் இருந்து தக்லமாகன் மற்றும் கும்டாக் பாலைவனத்துக்கு இடையே இந்த லோப்நூர் பகுதியில் எடுக்கப்பட்ட சேட்டிலைட் போட்டோக்கள் இதனை உறுதி செய்துள்ளன.
லோப்நூர் பகுதியில்தான் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா தனது முதல் அணுகுண்டை சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது அங்கு அணுஆயுத சோதனை நடத்த வசதியாக 60 அடி ஆழத்தில் பல இடங்களில் துளைகள் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனாவின் நடவடிக்கைகளை நீண்டநாட்களாக கண்காணித்து வருகிறது அமெரிக்கா. லோப்நூர் பகுதியில் பல்வேறு கட்டுமானங்களும், ஆழமான துளைகள் இருப்பதும் உறுதியாகி உள்ளது. இதுமட்டுமின்றி புதிய சாலைகளும் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் ஒரு புதிய விமானத் தளம் கட்டப்படுவதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
அணு ஆயுதங்கள் மிகவும் ஆபத்தானவை. இந்த மாதிரியான சோதனைகளை உலக நாடுகள் போட்டிப்போட்டு முன்னெடுக்கின்றன. ஆனால் இது உலகின் முடிவுக்கு ஆரபமாக இருக்கும் என வல்லுநர்கள் நீண்ட காலமாக எச்சரிக்கின்றனர்.
புதிய சோதனைகள் மூலம் அணு ஆயுதங்களை சீனா நவீனப்படுத்துவதாகவும் கருத்துக்கள் எழுகின்றன. இது உலக மக்களுக்கு அச்சமூட்டுவதாக மாறியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust