சீனா: கல்லூரி மாணவர்களை விந்தணு தானமளிக்க அழைக்கும் விந்து வங்கிகள் - என்ன காரணம்?

கல்லூரி மாணவர்கள் மற்றும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் ஆண்கள், தங்களது விந்தணுக்களை தானம் செய்யவேண்டும் என சீனாவின் விந்தணு வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
சீனா: கல்லூரி மாணவர்களை விந்தணு தானமளிக்க அழைக்கும் சீன விந்தணு வங்கிகள் - என்ன காரணம்?
சீனா: கல்லூரி மாணவர்களை விந்தணு தானமளிக்க அழைக்கும் சீன விந்தணு வங்கிகள் - என்ன காரணம்?canva

மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் இதனை சமாளிக்க, கல்லூரி மாணவர்களிடம் விந்தணுக்களை தானம் செய்யுமாறு சீன விந்தணு வங்கிகள் கேட்டுவருகின்றன.

சீனாவில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் தொகை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருக்கிறது. 1960 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக சீனாவின் மக்கள் தொகை கடந்த 2022ல் 850,000ஆக இருக்கிறது. இதனை சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் (NBS) ஜனவரி மாதம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது.

இது தற்சமயத்தில் இந்தியாவின் மக்கள் தொகையை விடக் குறைவு. அதிக மக்கள் தொகையுள்ள உலக நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது.

newborn baby
newborn babyTwitter

சீனாவில் முதலில் தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும், பிறகு இரண்டு குழந்தைகள் பெற்றுகொள்ளலாம், மூன்று குழந்தைகள் பெறலாம், திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என, மக்கள் தொகை பிரச்னை வந்தபோதெல்லாம் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன.

நாட்டில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததனால், பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதை கண்ட சீன அரசு, மெதுவாக குழந்தைப்பேறில் சட்ட தளர்வுகளை அமல்படுத்த தொடங்கியது.

இளைஞர்களும் குடும்ப பாரத்தை ஏற்க தயாராக இல்லை எனக் கூறியே திருமணம் செய்துகொள்ள, குழந்தை பெற்றுகொள்ள விருப்பம் இல்லை என தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த எதிர்மறை விளைவுகளை சமாளிக்க கல்லூரி மாணவர்கள் மற்றும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் ஆண்கள், தங்களது விந்தணுக்களை தானம் செய்யவேண்டும் என சீனாவின் விந்தணு வங்கிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சீனாவின் ட்விட்டர் போன்ற தளமான வீபோவில் இந்த செய்தி குறித்து தகவல் வெளியானதும், இது பேசுபொருளானது.

சீனா: கல்லூரி மாணவர்களை விந்தணு தானமளிக்க அழைக்கும் சீன விந்தணு வங்கிகள் - என்ன காரணம்?
800 கோடியை தொட்ட உலக மக்கள் தொகை : சீனாவை முந்துகிறதா இந்தியா? - ஐநா சொல்வது என்ன?

தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள யுன்னான் விந்தணு வங்கி தான் முதன் முதலில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி இந்த கோரிக்கையை விடுத்தது.

விந்தணு தானம் செய்யும் வழிமுறைகள், தானம் செய்ய பதிவு செய்யவேண்டிய வழிமுறைகள், இதனால் தானமளிப்போருக்கு என்ன லாபம் போன்ற தகவல்களையும் அந்த வங்கி பகிர்ந்திருந்தது.

தொடர்ந்து மற்ற விந்தணு வங்கிகளும் இணைந்துக்கொண்டன.

சீனா: கல்லூரி மாணவர்களை விந்தணு தானமளிக்க அழைக்கும் சீன விந்தணு வங்கிகள் - என்ன காரணம்?
சீனா: கொரோனாவால் எகிறும் மரணங்கள்; சூடுபிடிக்கும் சவப்பெட்டி வியாபாரம் - என்ன நடக்கிறது?

யார் விந்தணு தானம் செய்ய தகுதியானவர்கள்?

யுன்னான் விந்தணு வங்கியின்படி,

  • 20 முதல் 40 வயதிற்கு உட்பட்டோர், 165 செ.மீ உயரம் உள்ளவர்கள், மரபியல் நோயல்லாதவர்கள் விந்தணு தானம் செய்யலாம்.

  • தானமளிப்பவர் ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும் அல்லது படித்துக்கொண்டிருக்கவேண்டும்

  • தானம் கொடுப்பவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தேர்வானால், 8-12 முறை தானம் செய்யலாம்.

  • ஒவ்வொரு முறைக்கும் 4500 சீன யுவான் கொடுக்கப்படும் (664 டாலர்கள்)

சீனா: கல்லூரி மாணவர்களை விந்தணு தானமளிக்க அழைக்கும் சீன விந்தணு வங்கிகள் - என்ன காரணம்?
தூக்கத்தில் தானாக விந்து வெளியேறுவதை நிறுத்துவது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com