Russia: வாக்னர் தலைவருக்கு ஸ்கெட்ச் போடும் அதிபர் புதின் - CIA இயக்குநர் சொல்வதென்ன?

ரஷ்யாவில் வாக்னர் குழு கலவரத்தை ஏற்படுத்துவது தொடர்பாக சி ஐ ஏ அமைப்பு முன்பே அறிந்திருந்ததாகவும் வில்லியம் பர்ன்ஸ்ம் கூறியுள்ளார். இப்போது ரஷ்ய மேட்டுக்குடியினர் விளாதிமிர் புதினின் திறனை சந்தேகிக்கத் தொடங்கியுள்ளனர்.
Russia: வாக்னர் தலைவருக்கு ஸ்கெட்ச் போடும் அதிபர் புதின் - CIA இயக்குநர் சொல்வதென்ன?
Russia: வாக்னர் தலைவருக்கு ஸ்கெட்ச் போடும் அதிபர் புதின் - CIA இயக்குநர் சொல்வதென்ன?Twitter
Published on

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், வாக்னர் போர் குழுத் தலைவர் யுவ்ஜெனி பிரிகோசினைச் சமாளிக்க தற்போது காலம் கடத்துவதாக சிஐஏ உளவு அமைப்பின் இயக்குநர் கூறியுள்ளார்.

வாக்னர் என்கிற கூலிப் படைக் குழுவை யுவ்ஜெனி பிரிகோசின் (Yevgeny Prighozin) என்பவர் தலைவராக இருந்து வழிநடத்தி வருவதும், அக்கூலிப் படைக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் இடையில், சுமார் ஒரு மாத காலத்துக்கு முன் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, ஒரு சிறு கலவரம் அரங்கேறியதையும் உலகம் உற்றுப் பார்த்தது.

இந்தக் கலவரம், விளாதிமிர் புதினின் அதிகார அமைப்புகளில் இருந்த பலவீனத்தை வெளிப்படுத்தி உள்ளதாக அமெரிக்காவின் உளவுத் துறை அமைப்பான சி ஐ ஏவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் கூறியுள்ளார்.

மேலும், ரஷ்ய அதிபர் புதின், யுவ்ஜெனி பிரிகோசினுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் ஆஸ்பென் பாதுகாப்பு அமைப்பிடம் கூறியுள்ளார் வில்லியம் பர்ன்ஸ்.

 சி ஐ ஏவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ்
சி ஐ ஏவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ்

தற்போது யுவ்ஜெனி பிரிகோசினை சமாளிக்க, அதிபர் விளாதிமிர் புதின் நேரத்தைக் கடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். யுவ்ஜெனி பிரிகோசினை பழிவாங்க புதின் சரியான தருணத்துக்காக காத்திருப்பார் என்றும் அவர் கூறினார். அந்தப் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து அவர் தப்பித்தால் நான் மிகுந்த ஆச்சர்யத்துக்கு உள்ளாவேன் என்றும் கூறியுள்ளார் வில்லியம் பர்ன்ஸ்.

இதை எல்லாம் விட ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்… ரஷ்யாவில் வாக்னர் குழு கலவரத்தை ஏற்படுத்துவது தொடர்பாக சி ஐ ஏ அமைப்பு முன்பே அறிந்திருந்ததாகவும் வில்லியம் பர்ன்ஸ் கூறியுள்ளார்.

putin
putintwitter

யுவ்ஜெனி பிரிகோசினின் உணவில் விஷம் வைக்கப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த மாதத் தொடக்கத்தில் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

விளாதிமிர் புதின் கடந்த 23 ஆண்டுகளாக ரஷ்ய மற்றும் உலக அரசியலின் அதிகாரத்தில் இருக்கிறார். இந்தக் கலவரம் அவருடைய அதிகாரத்தை நோக்கி தொடுக்கப்பட்ட தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.

அதே போல உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க சொல்லப்பட்ட காரணங்களும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன. இது முழுக்க முழுக்க பொய்கள் மீது கட்டப்பட்ட கோட்டை என யுவ்ஜெனி பிரிகோசின் கூறியதாகவும் வில்லியம் பர்ன்ஸ் கூறினார்.

யுவ்ஜெனி பிரிகோசின், தொடக்கத்தில் விளாதிமிர் புதினின் சமையல் கலைஞராக இருந்தார். அதன் பின் ரஷ்ய ராணுவத்தின் சமையல் கலைஞராக இருந்தார்.

யுவ்ஜெனி பிரிகோசின்
யுவ்ஜெனி பிரிகோசின்Twitter

அதன் பிறகு தான் வாக்னர் என்கிற கூலிப்படைக் குழுவை அமைத்து செயல்படத் தொடங்கினார். எனவே யுவ்ஜெனி பிரிகோசினை பலரும் விளாதிமிர் புதினின் சமையல் கலைஞர் என்று தான் அழைப்பர்.

இப்போது தன் முன்னாள் சமையல் கலைஞரோடு, முதலாளி சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார். இது ரஷ்ய மேட்டுக்குடிகள் மத்தியில் விளாதிமிர் புதினின் திறனை சந்தேகத்துக்கு உட்படுத்தியுள்ளது.

Russia: வாக்னர் தலைவருக்கு ஸ்கெட்ச் போடும் அதிபர் புதின் - CIA இயக்குநர் சொல்வதென்ன?
Belarus : உக்ரைன் போரில் ரஷ்யாவை நேரடியாக ஆதரிக்கும் நாடு - பெலாரஸ் பற்றி தெரியுமா?

கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா, உக்ரைன் மீது முழு வீச்சில் போர் தொடுத்து வருகிறது. அவ்வப்போது வெற்றி இரு தரப்பினரின் பக்கமும் மாறி மாறிக் கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், உக்ரைனோ பல நாட்டு ஆயுத உதவிகளோடு முன்னேற்றம் கண்டு வருவதாக பல்வேறு சர்வதேச ஊடகச் செய்திகளில் பார்க்க முடிகிறது.

Russia: வாக்னர் தலைவருக்கு ஸ்கெட்ச் போடும் அதிபர் புதின் - CIA இயக்குநர் சொல்வதென்ன?
Wagner: உலகையே அச்சுறுத்தும் தனியார் இராணுவம் - கொடூர குற்றங்களில் ஈடுபடும் இவர்கள் யார்?

இதே நிலை நீடித்தால், அதாவது ரஷ்யா போரில் பின்தங்கத் தொடங்கினால் அல்லது உக்ரைன் பெரிய வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினால், அது யுவ்ஜெனி பிரிகோசினின் உக்ரைன் போர் குறித்த விமர்சனக் கருத்துகளுக்கு வலுச் சேர்ப்பதாக அமையும்.

Russia: வாக்னர் தலைவருக்கு ஸ்கெட்ச் போடும் அதிபர் புதின் - CIA இயக்குநர் சொல்வதென்ன?
ஐரோப்பா முழுவதும் தலையெடுக்கும் தீவிர வலதுசாரிகள், ஆபத்தில் ஜனநாயகம்: நமக்கு என்ன பாடம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com