Belarus : உக்ரைன் போரில் ரஷ்யாவை நேரடியாக ஆதரிக்கும் நாடு - பெலாரஸ் பற்றி தெரியுமா?

உக்ரைன் போரைப் பொறுத்தவரையில் பெலாரஸ் இராணுவம் மட்டும் தான் போர் களத்தில் இறங்கவில்லை. புதினுக்கு தேவைப்பட்டால் அதையுமே செய்ய வைப்பார். புதினின் கைப்பாவையாக செயல்படுகிறதா பெலாரஸ்?
Belarus : உக்ரைன் போரில் ரஷ்யாவை நேரடியாக ஆதரிக்கும் நாடு - பெலாரஸ் பற்றி தெரியுமா?
Belarus : உக்ரைன் போரில் ரஷ்யாவை நேரடியாக ஆதரிக்கும் நாடு - பெலாரஸ் பற்றி தெரியுமா?Twitter
Published on

ரஷ்யாவில் கலகம் செய்வதாகக் கூறி அரசுக்கு எதிராக கிளம்பிய வாக்னரை தங்கள் நாட்டில் சேர்த்துக்கொண்டது பெலாரஸ். இதனால் புதின் அரசு பாதுகாக்கப்பட்டது.

பெலாரஸ் அதிபரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு வாக்னர் படையினர் மீது வழக்குகளை தள்ளுபடி செய்தார் புதின். மேலும் வாக்னர் படையினரும் விரும்பினால் பெலாரஸுக்கு செல்லலாம் எனவும் கூறியுள்ளார்.

வாக்னர் விவகாரத்தில் அலக்ஸாண்டர் லுகாஷென்கோ வாக்னர் தலைவர் பிரிகோஜின் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு நடுநிலையாக இருந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

உக்ரைன் போரில் தங்கள் எல்லை வழியாகவும் தாக்குதல் நடத்த பெலாரஸ் ரஷ்யாவை அனுமதித்திருக்கிறது. மேலும் ரஷ்யாவை அணு ஆயுதங்களை தங்கள் பிரதேசத்தில் வைக்கவும் உதவியுள்ளது. 

ரஷ்யாவுடன் இப்படி ஒட்டுறவாடும் பெலாரஸ் நாடு பற்றி விரிவாக பார்க்கலாம்.

பெலாரஸ்

கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸ், ரஷ்யாவின் அண்டை நாடு. நான்கு பக்கம் நிலத்தால் சூழப்பட்டு லிதுவேனியா, லாட்வியா, போலந்து உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது.

1991ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த போது உருவான குடியரசுகளில் இதுவும் ஒன்று. இன்று 90 லட்சம் மக்கள் வாழும் இந்த நாடு ஐரோப்பியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.

பெலாரஸ் நாட்டை கடைசி சர்வாதிகாரம் என அழைத்து வந்தனர். பெலாரஸ் அரசு குடிமையியல் உரிமைகளை பறிப்பதற்கும் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குவதற்கும் அறியப்பட்டு வந்தது.

அலக்ஸாண்டர் லுகாஷென்கோ 1994 முதல் பெலாரஸின் தலைவராக இருந்து வருகிறார். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் இவரை அந்த நாட்டில் அதிபராக ஏற்றுக்கொள்ளவில்லை. 

தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக இந்த நாடுகள் தெரிவித்து வருகின்றன. 

2020ம் ஆண்டு தேர்தல் முடிந்த பிறகு இவருக்கு எதிராக கலவரங்கள் தொடங்கின. ஆனால் பாதுகாப்பு படையினர் மூலம் கொடூரமான முறையில் கலவரங்கள் அடக்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் ரஷ்யா லுகாஷென்கோவுக்கு ஆதரவாக செயல்பட்டது. அவரது பாதுகாப்பு படையினர் பலத்தை அதிகரிக்க 1.5 பில்லியன் டாலர்கள் கடன் வழங்கியது.

பெலாரஸ் நாட்டின் தலைவர் தனது அதிகாரத்தைத் தக்கவைக்கவும் பாதுக்காப்பிற்காகவும் புதினையே நம்பிருக்கிறார்.

உக்ரைன் விவகாரம்

2021ம் ஆண்டு பெலாரஸ் ரஷ்யாவின் இராணுவப் படைகளை தங்கள் எல்லைக்குள் அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு நீண்டநாளாக அனுமதி மறுத்துவந்த அலெக்ஸாண்டரை புதின் 2021ல் ஒத்துக்கொள்ள வைத்தார்.

2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் இராணுவம் இணைந்து கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டனர். பிப்ரவரியில் பெலாரஸில் இருந்து 30000 படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்தன. 

உக்ரைன் தலைநகரான கீவை கைப்பற்ற பெலாரஸ் வழியாக நுழைவது தான் எளிதான வழி என்பது குறிப்பிடத்தக்கது. 

Belarus : உக்ரைன் போரில் ரஷ்யாவை நேரடியாக ஆதரிக்கும் நாடு - பெலாரஸ் பற்றி தெரியுமா?
உக்ரைன் : அத்துமீறிய ரஷ்யா; அடங்க மறுக்கும் செலென்ஸ்கி - போரின் நடுங்க வைக்கும் நிகழ்வுகள்

ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியப்பிறகு பெலாரஸ் அணு ஆயுதம் இல்லாத நாடு மற்றும் நடுநிலை நாடு என்பதில் இருந்து மாறியது. இதனால் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் பெலாரஸ் மீது தடைகளை விதித்தன.

உக்ரைன் போரைப் பொறுத்தவரையில்  பெலாரஸ் இராணுவம் மட்டும் தான் போர் களத்தில் இறங்கவில்லை. புதினுக்கு தேவைப்பட்டால் அதையுமே செய்ய வைப்பார்.

Belarus : உக்ரைன் போரில் ரஷ்யாவை நேரடியாக ஆதரிக்கும் நாடு - பெலாரஸ் பற்றி தெரியுமா?
Russia: மாஸ்கோ நோக்கி படையெடுக்கும் வாக்னர் படை - தப்பி ஓடினாரா புதின்? என்ன நடக்கிறது?

புதின் பெலாரஸில் நிறுத்தி வைத்துள்ள அணு ஆயுதங்கள் மிகவும் பரபரப்பான பேச்சு பொருளாக இருக்கின்றன. ஏனென்றால் உக்ரைன் மீது தாக்குதல் நிகழ்த்த அணு ஆயுதங்களை பெலாரஸில் இருந்து இயக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளை அச்சுறுத்துவதற்காக புதின் இதனை செய்வதால கூறப்படுகிறது.

Belarus : உக்ரைன் போரில் ரஷ்யாவை நேரடியாக ஆதரிக்கும் நாடு - பெலாரஸ் பற்றி தெரியுமா?
NATO-வில் இணைந்தது பின்லாந்து: "எதிர்வினைகளை சந்திக்க வேண்டும்" - மிரட்டும் ரஷ்யா!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com