கத்தார் முதல் ஓமன் வரை: இயற்கையாக காடுகளே இல்லாத உலகின் 4 நாடுகள்!

அங்கிருக்கும் ‘காடு’ எனப்படும் பகுதி, மனிதனால் உருவாக்கப்பட்டது, அப்படி இல்லையெனில் ‘காடுகள்’ என்ற சொல்லிற்குள் அடங்க முடியாத அளவுக்கு குறைவான மரங்களோ, அல்லது தாவரங்களோ தான் இருக்குமாம்.
கத்தார் முதல் ஓமன் வரை: இயற்கையாக காடுகளே இல்லாத உலகின் 4 நாடுகள்!
கத்தார் முதல் ஓமன் வரை: இயற்கையாக காடுகளே இல்லாத உலகின் 4 நாடுகள்!ட்விட்டர்
Published on

மனித இனம் செழிப்பாக இருக்க அதன் இயற்கை வளங்கள் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக காடுகள். விலங்கு, பறவை இனங்கள், தாவரங்களை பாதுகாக்க காடுகள் உதவுகிறது. சுற்றுச்சூழலை மாசுக் கட்டுப்பாட்டிலிருந்து பாதுகாக்கிறது. மழை வர வழிவகுக்கிறது.

ஆனால் ஒரு இடத்தில் காடு என்ற ஒன்றே இல்லையென்றால்? உலக வங்கியின் கணக்கெடுப்பின்படி கீழே குறிப்பிட்டுள்ள நாடுகளில் காடுகள் இல்லை. அங்கிருக்கும் ‘காடு’ எனப்படும் பகுதி, மனிதனால் உருவாக்கப்பட்டது, அப்படி இல்லையெனில் ‘காடுகள்’ என்ற சொல்லிற்குள் அடங்க முடியாத அளவுக்கு குறைவான மரங்களோ, அல்லது தாவரங்களோ தான் இருக்குமாம். அப்படி இயற்கையாகவே காடுகள் இல்லாத நாடுகள் குறித்து இங்கே படிக்கலாம்.

என்னென்ன நாடுகள்?

கிரீன்லாந்து

இந்நாட்டின் பெயர் தான் கிரீன்லாந்து. ஆனால் இது பனிக்கட்டிகளாலும், பனியாலும் சூழப்பட்ட குளிர்பிரதேசம். இங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட காடுகள் இருக்கின்றன. ஆனால், அங்கு வாழும் உயிரினங்கள் குறைவே. இருக்கும் தாவரங்களும் தரைமட்டத்திற்கு தான் வளர்ந்திருக்கும்.

ஓமன்

ஓமன் நாட்டில் இயற்கையான காட்டு வளம் இல்லை. சுமார் 2000 மரங்கள் மனிதனால் நடப்பட்டு உருவாக்கப்பட்ட காடாகும். பாலைவன தேசமான இங்கு இயற்கையாக காடுகள் இருக்கும் என எதிர்பார்க்கமுடியாது அல்லவா?

கத்தார் முதல் ஓமன் வரை: இயற்கையாக காடுகளே இல்லாத உலகின் 4 நாடுகள்!
இந்தியாவின் Hidden Spots : நடுகாட்டில் இருக்கும் வீடுகள் த்ரில்லர் அனுபவத்தை தருமா?

கத்தார்

கத்தாரும் ஓமனை போல ஒரு பாலைவன தேசம் தானே? உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான இந்த கத்தாரில் அடர்வன பகுதிகள் இல்லை. அவர்களிடம் இருக்கும் வளங்களை வைத்து ஒரு செயற்கை காட்டை அவர்களே உருவாக்கிக்கொண்டுள்ளனர்.

கத்தார் முதல் ஓமன் வரை: இயற்கையாக காடுகளே இல்லாத உலகின் 4 நாடுகள்!
இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் - சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்!

சான் மரினோ

ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையம் இங்கு 75 மரங்கள் கொண்ட சிறிய காடு ஒன்றை உருவாக்கியது. மலைதேசமான இங்கு இருக்கும் நிலங்கள் விவசாயம் செய்ய உகந்ததாக இருக்கிறது. எனினும் காடுகள் இல்லை. சான் மரினோ முற்றிலும் இத்தாலியால் சூழப்பட்டுள்ள பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கத்தார் முதல் ஓமன் வரை: இயற்கையாக காடுகளே இல்லாத உலகின் 4 நாடுகள்!
இந்தியாவில் அதிக காடுகள் உள்ள மாநிலங்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com