ஹெலிகாப்டரில் பண மழை தூவிய influencer - இணையத்தில் வீடியோ வைரல்!

சுமார் 4000 பேர் இந்த இடத்திற்கு வந்து பணத்தை சேகரித்து சென்றனர். ஒருவேளை மக்கள் சேகரித்த இந்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்க விரும்பினாலும், அதற்கும் வழிவகை செய்திருந்தார் காஸ்மா. அந்த பில்லில் இருக்கும் QR கோடினை ஸ்கேன் செய்தால், பணம் நன்கொடையாக சென்றுவிடும்.
ஹெலிகாப்டரில் பண மழை தூவிய influencer - இணையத்தில் வீடியோ வைரல்
ஹெலிகாப்டரில் பண மழை தூவிய influencer - இணையத்தில் வீடியோ வைரல்Instagram
Published on

ஹெலிகாப்டரில் இருந்து 1 மில்லியன் டாலர் பணத்தை செக் குடியரசை சேர்ந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவர் பறக்கவிட்டிருக்கிறார்.

கீழே இருந்த மக்கள் முட்டி மோதிக்கொண்டு அந்த பணத்தை எடுக்க முயற்சிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

செக் குடியரசில் தொலைகாட்சி பிரபலமாகவும், இன்ஃப்ளூயன்சராகவும் இருப்பவர் கமில் பார்டோஷெக். காச்மா என்று அறியப்படுகிறார்.

லைசா நாட் லாபெம் என்ற இடத்தில் ஹெலிகாப்டரில் வந்த காஸ்மா, 1 மில்லியன் டாலர் பணத்தை கீழே வீசினார்.

அவரது படமான, Onemanshow: The Movie-யில், அவர் ரகசியமான கோட் (Code) ஒன்றை சொன்னதாகவும், அதனை கண்டுபிடிக்கும் நபருக்கு 1 மில்லியன் டாலர் பணம் பரிசாக தருவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், அவரது ரசிகர்கள் யாருமே அந்த கோடினை கண்டுபிடிக்கவில்லை.

இதனால் இந்த காண்டெஸ்ட்டில் பங்கேற்ற அனைவருக்கும் பணத்தை பிரித்து தர முடிவுசெய்தார். எங்கே எப்போது பணம் தரப்படும் என்ற தகவல்களை அவரது ரசிகர்களிடம் பகிர்ந்தார்.

அதன்படி, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவது போல பணத்தை தூவினார் காஸ்மா. இந்த 1 மில்லியன் டாலரும், QR Code பொருந்திய பில்களாக இருந்தன.

ஹெலிகாப்டரில் பண மழை தூவிய influencer - இணையத்தில் வீடியோ வைரல்
சந்திரயான் 3: விமர்சித்த பிபிசி செய்தியாளர்- ஆனந்த் மஹிந்திரா பதில்! வைரலாகும் பழைய வீடியோ

“உலகின் முதல் நிஜமான பண மழை” என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சுமார் 4000 பேர் இந்த இடத்திற்கு வந்து பணத்தை சேகரித்து சென்றனர். ஒருவேளை மக்கள் சேகரித்த இந்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்க விரும்பினாலும், அதற்கும் வழிவகை செய்திருந்தார் காஸ்மா. அந்த பில்லில் இருக்கும் QR கோடினை ஸ்கேன் செய்தால், பணம் நன்கொடையாக சென்றுவிடும்.

காஸ்மா பணத்தை பகிர்வதாக இணையத்தில் தெரிவித்து, இவ்வளவு பெரிய தொகையை என்ன செய்யலாம் என கேட்டபோது, அவரை பின்தொடர்பவர்களில் பெரும்பாலானோர், ஆதர்வற்றவர்களுக்கு வழங்கலாம் என பரிந்துரைத்தனர்.

இளைஞரது இந்த செயல் சற்றே விமர்சிக்கப்பட்டாலும், அவரது நோக்கம் பாராட்டப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டரில் பண மழை தூவிய influencer - இணையத்தில் வீடியோ வைரல்
IPhone 15: ரூ.1.5 லட்சம் சில்லறையாக கொடுத்து ஐபோன் வாங்கிய பிச்சைக்காரர் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com