உலகிலேயே விலை உயர்ந்த கார் பதிவெண்: ரூ.122 கோடிக்கு ஏலம் போன நம்பர் பிளேட் - என்ன காரணம்?

கார் நம்பர் பிளேட் மற்றும் பிரத்யேக மொபைல் எண்கள் என ஏலம் விடப்பட்டத்தில் மொத்தம் 97.92 மில்லியன் திர்ஹாம்கள் கிடைத்துள்ளன.
Dubai 'P7' car number plate sold for record Rs 122.6 crore at 'Most Noble Numbers' auction
Dubai 'P7' car number plate sold for record Rs 122.6 crore at 'Most Noble Numbers' auctionTwitter
Published on

துபாயில் நடந்த அறக்கட்டளை ஏலத்தில் P7 என்ற கார் பதிவெண் 122 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. உலகின் விலை உயர்ந்த கார் பதிவெண்ணாக கின்னஸ் சாதனை படைத்தது P7.

துபாயின் 'மோஸ்ட் நோபல் நம்பர்ஸ்' ஏலத்தில் கார் நம்பர் பிளேட் P7 55 மில்லியன் திர்ஹாம்களுக்கு (சுமார் ரூ. 122 கோடி) விற்கப்பட்டது. 15 மில்லியன் திர்ஹாமிற்கு தொடங்கிய ஏலம் சில நொடிகளில் 30 மில்லியன் திர்ஹாம்களுக்கு மேல் உயர்ந்தது.

ஒரு கட்டத்தில் 35 மில்லியன் திர்ஹாம்களை எட்டியது ஏலம். இதனால் சிறிது நேரம் ஏலம் நிறுத்தப்பட்டது.

மீண்டும் ஏலம் 55 மில்லியன் திர்ஹாம்களை எட்டியது. ஒவ்வொரு ஏலத்திற்கும் சுற்றி இருந்த கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பினர்.

துபாயின் ஜுமேராவில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல விஐபி நம்பர் பிளேட்டுகள் மற்றும் தொலைபேசி எண்களும் ஏலம் விடப்பட்டன.

ஏலத்தில் இருந்து சுமார் 100 மில்லியன் திர்ஹாம்கள் (₹221 கோடி) திரட்டப்பட்டன. இது ரம்ஜானின் போது மக்களுக்கு உணவளிக்க வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கார் நம்பர் பிளேட் மற்றும் பிரத்யேக மொபைல் எண்கள் என ஏலம் விடப்பட்டத்தில் மொத்தம் 97.92 மில்லியன் திர்ஹாம்கள் கிடைத்துள்ளன.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்களான எடிசலாட் ஆகியவை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

நடந்த ஏலத்தில் 'P 7' கார் நம்பர் பிளேட் பட்டியலில் முதலிடம் பிடித்தது. 2008 ஆம் ஆண்டில் அபுதாபியின் நம்பர் 1 பிளேட்டை 52.22 மில்லியன் திர்ஹாம்களுக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dubai 'P7' car number plate sold for record Rs 122.6 crore at 'Most Noble Numbers' auction
இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த 7 நம்பர் பிளேட்கள் இதுதானாம்! காரை விட விலை அதிகமா?

இந்த ஏலத்தில் கிடைக்கும் பணம் அனைத்தும் உலகளாவிய பசியை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட 'ஒரு பில்லியன் உணவு' பிரச்சாரத்திற்கு ஒப்படைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜானின் தாராள மனப்பான்மைக்கு ஏற்ப, துபாயின் துணைத் தலைவரும் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அவர்களால் ஒரு பில்லியன் உணவு உதவித்தொகை தொடங்கப்பட்டது.

Dubai 'P7' car number plate sold for record Rs 122.6 crore at 'Most Noble Numbers' auction
வைரலான 27 கோடி ரூபாய் நம்பர் பிளேட் - உலகின் விலையுர்ந்த நம்பர் பிளேட்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com