உலகின் முதல் மிதக்கும் 3 அடுக்கு மசூதி; நீருக்கடியில் தொழுகை - எங்கே தெரியுமா?

மசூதி மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. பிரார்த்தனை மண்டபம் தண்ணீருக்கு அடியில் அமைந்துள்ளது. இது 50 முதல் 75 வழிபாடுகளுக்கு இடமளிக்கும். பார்வையாளர்கள் மசூதிக்குள் நுழைந்து பிரார்த்தனை செய்யலாம்.
உலகின் முதல் மிதக்கும் 3 அடுக்கு மசூதி; நீருக்கடியில் தொழுகை - எங்கே தெரியுமா?
உலகின் முதல் மிதக்கும் 3 அடுக்கு மசூதி; நீருக்கடியில் தொழுகை - எங்கே தெரியுமா?Twitter
Published on

உலகிற்கு எண்ணெய் வளத்தை வழங்கும் நாடுகளின் பட்டியலில் துபாய் முன்னணியில் உள்ளது என்பது பலரும் அறிந்ததே! அதுபோல, உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலைக்கு பஞ்சமில்லை.

இன்னொரு அதிசயத்தை நிகழ்த்தவுள்ளது துபாய் அரசாங்கம். மூன்று அடுக்கு மிதக்கும் மசூதியைக் கட்ட திட்டமிட்டு உலகின் கவனத்தை துபாய் தன் பக்கம் ஈர்த்துள்ளது. உலக வரலாற்றில் தண்ணீருக்கு அடியில் மசூதி கட்டப்படுவது இதுவே முதல் முறை.

சுமார் 55 மில்லியன் திர்ஹாம்கள் மதிப்பீட்டில் துபாய் அரசால் கட்டப்படவுள்ள இந்த மசூதி உலக அதிசயங்கள் பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மசூதியின் சிறப்பம்சம்

இந்த அற்புதமான மசூதி இரண்டு பகுதிகள் இருக்குமாறு கட்டப்படவுள்ளது. ஒரு பகுதி தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும், மற்ற பாதி நீரின் கீழ் பகுதியில் மூழ்கிருக்கும்.

இந்த நீரில் மூழ்கிய பகுதி தான் அமைதியான பிரார்த்தனைக்கான இடமாகும். கை கழுவும் வசதிகள், கழிப்பறைகள் என கடலுக்கு அடியில் பிரார்த்தனைக்காக வருபவர்களுக்கு வசதிகள் செய்யப்படவுள்ளது.

உலகின் முதல் மிதக்கும் 3 அடுக்கு மசூதி; நீருக்கடியில் தொழுகை - எங்கே தெரியுமா?
தங்க ஏடிஎம் டு உலகின் உயரமான கட்டிடம்: துபாய் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

சுற்றுலா தளமாக கருதப்படுகிறது

துபாய்க்கு அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் சுற்றுலா முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாக இந்த மசூதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மசூதி மூன்று தளங்களைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. பிரார்த்தனை மண்டபம் தண்ணீருக்கு அடியில் அமைக்கப்படவுள்ளது, தொழுகையும் அங்கே தான் இருக்கும். இது 50 முதல் 75 வழிபாடுகளுக்கு இடமளிக்கும்.

அனைத்து மதத்தினரும் மசூதிக்குச் செல்ல வரவேற்கப்படுவார்கள். பார்வையாளர்கள் மசூதிக்குள் நுழைந்து பிரார்த்தனை செய்யலாம்.

ஆனால் பார்வையாளர்கள் இஸ்லாமிய பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப உடை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இந்த மசூதி கட்டுமானம் அக்டோபர் 2023 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மசூதி கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முதல் மிதக்கும் 3 அடுக்கு மசூதி; நீருக்கடியில் தொழுகை - எங்கே தெரியுமா?
துபாய் டு சிங்கப்பூர்: இந்த நாடுகளில் எல்லாம் ’மினி இந்தியா’ இருக்கிறதாம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com