உலகின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக உருவாகி வரும் துபாய் உலகளாவிய பயணிகளை ஈர்த்து வருகிறது. குறிப்பாக பணக்காரர்களுக்கான பொழுதுபோக்கு தளமாக மாறிவருகிறது துபாய்.
இதற்காக துபாயில் பல கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிற புர்ஜ் கலிஃபா, புர்ஜ் அல் அரப், துபாய் அக்வாரியம் மற்றும் ஆழ்கடல் சரணாலயம், குலோபல் வில்லேஜ், (Global Village) பாம் ஜுமேரியா (Palm Jumeirah), துபாய் மால், அக்வாவெஞ்சர் வாட்டர் பார்க், மிராக்கள் கார்டன் போன்ற சுற்றுலாத் தளங்கள் துபாய்க்கு பயணிகளை ஈர்த்து வருகிறது.
துபாயின் பசுமை நகரம் அல்லது நியோம் நகரம், மிரர் லைன் போன்ற பில்லியன் டாலர் புராஜக்ட்களின் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் 5 பில்லியன் டாலர் மதிப்பில் 'துபாய் மூன் கட்டடம்' உருவாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றனர்.
இந்த கட்டடம் அதீத சொகுசு வசதிகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தளம் நிலவின் மேற்பரப்பில் இருப்பது போன்ற உணர்வினைக் கொடுக்கும். துபாயில் உள்ள கனடா சார்ந்த கட்டடக்கலை நிறுவனமான மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் நிலவு வடிவில் இந்த ரெசார்ட்டை கட்டவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.
விண்வெளி சுற்றுலாவுக்கு ஒரு புறம் உலகம் தயாராகிக்கொண்டிருக்க பூமியிலேயே நிலவை உருவாக்கத் திட்டமிடுகிறது துபாய். சுமார் 735 அடி உயரமான இந்த கட்டடத்தை 48 மாதங்களில் கட்ட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
விருந்தோம்பல், பொழுதுபோக்கு இடங்கள், கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி சுற்றுலா போன்ற துறைகளில் `மூன் துபாய்' திட்டம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது வெற்றிகரமான நவீன கால சுற்றுலா திட்டம் என்றும், இந்த பிராண்ட் விழிப்புணர்வு மூலம் துபாய்க்கான வருடாந்திர சுற்றுலா வருகைகள் இரட்டிப்பாகும் என்றும் மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸின் நிறுவனர் சாண்ட்ரா ஜி மேத்யூஸ் கூறியிருக்கிறார்.
இந்த அதீத சொகுசு `மூன் துபாய்' கட்டடம் சுமார் 5 பில்லியன் டாலர் பட்ஜெட் செலவில் தயாரிக்கப்படவுள்ளது. இதனால் வருடத்திற்கு 1.8 பில்லியன் டாலர் வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கட்டப்படும் குடியிருப்புகள் ஸ்கை வில்லாஸ் என்று குறிப்பிடப்படுகின்றன. மொத்தமாக 144 வீடுகள் கட்டப்படும். அவற்றை சொந்தமாக்கிக் கொள்பவர்கள் மூன் ரெசார்ட் கிளப்க்கு தனிப்பட்ட உறுப்பினர் என்ற உரிமத்தைப் பெறுவார்கள். இந்த மூன் துபாய் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust