அரபு அமீரகம் : துபாய் -ல் கம்பெனி தொடங்க விருப்பமா? இந்தியா -விலிருந்தே தொடங்குவது எப்படி?

அபுதாபி மற்றும் துபாயின் பொருளாதாரத் துறை உங்களுக்கு ஒரு மெய்நிகர் நிறுவன உரிமத்தை (virtual company licence) வழங்குகிறார்கள். இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒரு நிறுவனமும் துபாய் & அபுதாபி நகரத்தில் தங்கள் நிறுவனத்தை அல்லது வியாபாரத்தைத் தொடங்க முடியும்.
UAE
UAETwitter

இன்றைய டெக்னாலஜி உலகில் எதுவும் சாத்தியம் தான். ஒருவருக்குப் பணம் அனுப்புவது தொடங்கி, பல்லாயிரம் மைல் தொலைவில் உள்ள ஒருவரைப் பார்த்துப் பேசுவது வரை எல்லாவற்றையும் தொழில்நுட்பங்கள் உதவியுடன் இருந்த இடத்திலிருந்தே செய்ய முடிகிறது.

அப்படி இன்று நம் ஊரில், நம் வீட்டிலிருந்த படியே இணையத்தைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரங்களான துபாய் மற்றும் அபுதாயில் தொழில் தொடங்க முடியும்.

அதற்கு நீங்கள் துபாய்க்கோ, அபுதாபிக்கோ நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுதான் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்.

அபுதாபி மற்றும் துபாயின் பொருளாதாரத் துறை உங்களுக்கு ஒரு மெய்நிகர் நிறுவன உரிமத்தை (virtual company licence) வழங்குகிறார்கள். இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒரு நிறுவனமும் துபாய் & அபுதாபி நகரத்தில் தங்கள் நிறுவனத்தை அல்லது வியாபாரத்தைத் தொடங்க முடியும். ஆனால் அந்த உரிமத்தைப் பெற சில விதிமுறைகள் இருக்கின்றன.

முதலில் அபுதாபியில் இந்த உரிமத்தைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த உரிமம் வழங்கப்படும். இதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

அதற்கு முதலில் ‘UAE Pass’ அக்கவுண்டைத் தொடங்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரக அரசின் ஒரு செயலிதான் யூ ஏ இ பாஸ். இதில் அந்நாட்டு அரசின் 5,000க்கும் மேற்பட்ட சேவைகளை இணையத்திலேயே பெறலாம். அந்நாட்டில் வசிக்காதவர்கள் கூட இந்த செயலியில் ஒரு கணக்கைத் தொடங்கலாம்.

UAE Pass
UAE PassTwitter

UAE Pass

1. முதலில் ‘UAE Pass’ செயலியை பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து கொள்ளுங்கள்.

2. அமீரகத்தில் அடையாள ஐடி எண் உள்ளதா என்று கேட்கும். அதில் ‘No, I don’t have an Emirates ID’ என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள்.

3. அடுத்து உங்கள் தனிநபர் விவரங்கள் கேட்கப்படும். உங்கள் பெயர், நாடு, பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்கள் கேட்கப்படும்.

4. அதன்பின் உங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு சரிபார்க்கும் கோட் வரும். அதைப் பதிவுசெய்து முன்னேறுங்கள்.

5. ‘UAE Pass’ செயலிக்கென பிரத்தியேக கடவுச் சொல்லைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அமீரக அரசு சேவையைப் பயன்படுத்தும் போதெல்லாம் இந்த கடவுச் சொல்லைப் பயன்படுத்தலாம்.

6. ஃபேஷியல் ரெகக்னிஷன் வசதியையும் கூடுதலாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘UAE Pass’ கணக்கை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் மெய்நிகர் நிறுவன உரிமத்தைப் பெற முடியும்.

Dubai Economy
Dubai EconomyTwitter

Virtual Licence-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

1. www.adbc.gov.ae/citizenaccess/CustomPage/InfoDeskAll.aspx என்கிற அபுதாபி வணிக மையத்தின் இணைப்பைச் சொடுக்கவும்.

2. 'UAE Pass’-ஐப் பயன்படுத்தி இந்த இணைப்புக்குள் செல்லலாம். 'UAE Pass' செயலியில், சரிபார்க்கச் சொல்லி ஒரு நோடிபிகேஷன் வரும். அச்செயலியில் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உங்கள் அடையாளத்தை உறுதி செய்யுங்கள். அதன் பிறகு அபுதாபி வணிக மைய வலைதளத்தின் முகப்புப் பக்கம் வரும்.

3. முகப்புப் பக்கத்தில் ‘Commercial licence’ என்கிற ஆப்ஷனைச் சொடுக்கி, 'Abu Dhabi Virtual licence’-ஐத் தேர்வு செய்யவும்.

4. நிறுவனத்தின் பெயரைப் பூர்த்தி செய்து, உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதோடு தொடர்பு விவரங்களையும் நிரப்புங்கள்.

5. என்ன மாதிரியான வியாபாரத்தைச் செய்கிறீர்கள் என்பதையும் பூர்த்தி செய்யவும். அமீரக அரசு வலைதளத்தின் படி, அபுதாபியில் 13 துறை சார் வியாபாரங்களுக்கு மட்டுமே மெய்நிகர் உரிமம் வழங்கப்படுகிறது. அதில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

6. இதோடு உங்கள் பாஸ்போர்டையும் பதிவேற்றம் செய்யுங்கள்.

7. ஒருமுறை எல்லா தரவுகளையும் விவரங்களையும் சரிபர்த்துவிட்டு விண்ணப்பத்தை சமர்பியுங்கள்.

Bussiness
BussinessPixabay

பணம் செலுத்துங்கள்

விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின், அலைப்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சலுக்கும் பணம் செலுத்துவது தொடர்பாக ஒரு செய்தி வரும். ஐக்கிய அரபு அமீரகத்தின் படி மெய் நிகர் உரிமத்துக்கு Dh1,000 (1,000 திர்ஹாம்) செலுத்த வேண்டும். அதோடு தேர்வு செய்திக்கும் துறை மற்றும் நிறுவன அமைப்பை (LLP, Sole Proprietorship...) பொறுத்துக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பணம் செலுத்திய பிறகு மெய் நிகர் உரிமம் வழங்கப்படும்.

UAE
நீங்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறீர்களா? - இதனை நீங்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்

துபாய் மெய் நிகர் நிறுவன உரிமம் (Dubai Virtual Company Licence)

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்காதவர்கள், இந்தியா உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாட்டில் வசிக்கும் வரி செலுத்துவோர், ஒரு இடத்தைச் சார்ந்து இருக்காத புதுமையான விஷயங்களைச் செய்யும், தொழில்நுட்பம் மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கீழ் காணும் இணைப்பில், மெய் நிகர் நிறுவனத்துக்கான உரிமத்துக்கான விண்ணப்பத்தைக் காணலாம். இணைப்பு: https://vcl.dubaided.gov.ae/anonymous/createapplication

UAE
LULU யூசுஃப் அலி : அரபு நாடுகளில் கொடிக்கட்டி பறக்கும் ஓர் இந்தியரின் வெற்றி கதை

விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனத்தின் பெயர், உங்கள் பெயர், பிறந்த தேதி, நாடு, முகவரி... போன்ற விவரங்களை நிரப்பவும். அதோடு தொழிலையும் தேர்வு செய்யவும்.

*கணினி புரோகிராமிங், கன்சல்டன்சி தொடர்பான சேவைகள்

*வடிவமைப்பு தொடர்பான பணிகள்

*அச்சு மற்றும் விளம்பரம் தொடர்பான சேவைப் பணிகள்... ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றன.

இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து, உங்கள் பாஸ்போர்ட், முகவரிச் சான்று, குறிப்பிட்ட நாட்டில் வாழ்வதற்கான ஆதாரங்கள், வெள்ளை நிற பின்புலத்தில் ஒரு புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கவும்.

UAE
குவைத் : இந்நாட்டில் பணியாற்ற விரும்புகிறீர்களா? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, உங்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணுக்குத் தகவல் வரும். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், பணம் செலுத்துமாறு செய்தி வரும்.

வர்த்தகப் பெயரைப் பதிவு செய்து கொள்ள Dh200

ஓராண்டுக் காலத்துக்கான மெய் நிகர் உரிமத்துக்கு Dh680

விண்ணப்பத்தை அடையாளம் கண்டு சரிபார்க்க Dh300

இது போக ஒவ்வொரு ஆண்டும் உரிமத்தைப் புதுப்பிக்க Dh680 செலுத்த வேண்டி இருக்கும். பணம் செலுத்திய பிறகு துபாய் மெய் நிகர் நிறுவன உரிமம் வழங்கப்படும்.

UAE
துபாய் ஆட்சியாளரை உலுக்கிய குடும்ப வழக்கு: 5000 கோடி விவாகரத்து தொகை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com