ஈரான் : ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைக்கு நடந்த கதி - விரிவான தகவல்கள்

ஹிஜாப் அணியாமல் வந்த எல்னாஸின் நடவடிக்கையை சில ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய எழுச்சியின் அடையாளமாக பார்த்தார்கள்.
Elnaz Rekabi
Elnaz Rekabi Twitter
Published on

சர்வதேசப் போட்டியில் கலந்து கொண்ட ஈரானிய வீராங்கனையான எல்னாஸ் ரெகாபியின் வீடு ஈரான் அரசால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றதற்காக இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மாஷா அமீனி என்கிற 22 வயது இளம்பெண், தன் தலை முடியை ஹிஜாப் அணிந்து மூடவில்லை என்கிற காரணத்தால் கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்டு, மர்மமான முறையில் இறந்து போனார்.

இது பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி மக்கள் போராட்டமாக வெடித்தது.

Hijab issue
Hijab issueTwitter

இந்த மக்கள் போராட்டத்தில் இதுவரை சுமார் 326 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 43 குழந்தைகள் மற்றும் 25 பெண்கள் அடக்கம் என்கிறது ஈரான் மனித உரிமைகள் குழு.

தி ஹியூமன் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட் நியூஸ் ஏஜென்சி என்கிற மனித உரிமைகள் அமைப்போ, இதுவரை 344 போராட்டக்காரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதில் 52 பேர் குழந்தைகள் என்றும் கூறுகிறது.

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனையும், நீண்ட கால சிறை தண்டனையும் வழங்க இரான் அரசு தரப்பு திட்டமிட்டு கொண்டிருக்கலாம் என சில மனித உரிமை ஆர்வலர்கள் குழுக்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ஈரானிய வீராங்கனையான எல்னாஸ் ரெகாபி ஹிஜாப் இல்லாமல் போட்டியில் பங்கேற்றதற்காக அவரது வீட்டை அதிகாரிகள் சூறையாடியுள்ளனர்.

33 வயதான எல்னாஸ் ரெகாபி என்ற பெண் ஹிஜாப் இல்லாமல் கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடந்த தடையேறுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார்.

இந்த விளையாட்டின் போது எல்னாஸ் தனது தலைமுடியை போனிடெயிலாக போட்டு இருந்தார்.

இதன் பின்னர் போட்டி முடிந்து ஈரானுக்கு திரும்பியதும், போது தெஹ்ரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் “ எல்னாஸ் தி ஹீரோ “ என்று கோஷமிட்டு மக்கள் அவரை வரவேற்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைராக பரவியது.

ஹிஜாப் அணியாமல் வந்த எல்னாஸின் நடவடிக்கையை சில ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய எழுச்சியின் அடையாளமாக பார்த்தார்கள்.

இதற்கிடையில் எல்னாஸ் தனது இன்ஸ்டாகிராமில் தற்செயலாகவே ஹிஜாப் இல்லாமல் விளையாடினேன், இதில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்றார்.

ஆனால் அரசின் அழுத்தம் காரணமாக இவர் அவ்வாறு பதிவிட்டிருக்கலாம் என்று பலரும் விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் ஈரானிய ஊடகத்தின் காட்சிகளின் அடிப்படையில், எல்னாஸ் வீடு இடிக்கப்பட்டது. அவரது பதக்கங்கள் தூக்கி வீசப்பட்டன.

ஆனால் அதிகாரிகள், வீடு உரிய அனுமதியில்லாமல் அப்பகுதியில் கட்டப்பட்டிருப்பதாக இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கத்துள்ளனர்.

Elnaz Rekabi
ஹிஜாப் அணிய மறுத்த பத்திரிக்கையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்

சிஎனஎன் ஊடகம் எல்னாஸின் விடு அரசின் ஆணையின் கீழ் தான் இடிக்கப்பட்டதா என உறுதியாக தெரியவில்லை என கூறியிருக்கிறது.

Tasnim என்ற ஈரானிய செய்தி நிறுவனம் எல்னாஸ் வீடு இடிக்கப்பட்டது உண்மை தான். ஆனால் அவரின் குடும்பத்தினர் வீடு கட்டுவதற்காக சரியான அனுமதி பெறவில்லை என்றும் அவர் அந்த போட்டியில் கலந்து கொள்ளும் முன்பே அந்த வீடு இடிப்பு சம்பவம் நடந்ததாக கூறியிருக்கிறது.

இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டதையடுத்து பலரும் எல்னாஸுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசி வருகின்றனர்.

Elnaz Rekabi
ஈரான் : ஹிஜாபுக்கு எதிராக போராடும் 15,000 பேருக்கு மரண தண்டனையா?- உண்மை என்ன? | Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com