உக்ரைன் போரை முடித்து வைக்க எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. செலன்ஸ்கி ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

எலான் மஸ்கின் இந்த யோசனையால் போரில் உறுதியுடன் போராடி கொண்டிருக்கும் உக்ரைன் மக்கள் பலரும் தியாகத்தை கொச்சைப்டுத்துவதாக உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எலான் மஸ்க் - செலன்ஸ்கி
எலான் மஸ்க் - செலன்ஸ்கிTwitter

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி உக்ரைன் - ரஷ்யா இடையே போர் இப்போது வரை நடைபெற்று வருகிறது.

உக்ரைனை விரைவில் முழுவதுமாக ஆக்கிரமிக்கும் முனைப்பில் இருக்கிறார் புதின்.

ரஷ்யாவுடன் இறுதி வரை போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி.

இதற்கிடையில் போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட எலான் மஸ்க் ட்விட்டரில் ஆலோசனை வழங்கியுள்ளார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்Twitter

உலகின் முன்னணி தொழிலதிபரும் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓவுமான எலான் மஸ்க் ட்விட்டரில் வழங்கிய யோசனையில்,இந்த போரில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட 4 பிராந்தியங்களில் ஐநா சபை கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அதன் முடிவுகளின் படி இரண்டு நாடுகளின் தரப்பும் அமைதியை ஏற்க வேண்டும் என்றார்.

எலான் மஸ்க் - செலன்ஸ்கி
உக்ரைனின் 15% பகுதிகளை இணைத்துக் கொண்ட ரஷ்யா- அமெரிக்காவின் ரியாக்‌ஷன் என்ன?

மேலும் க்ரைமியா மற்றும் டான்பாஸ் மக்கள் ரஷ்யா அல்லது உக்ரைன் ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் எனவும் ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனை உக்ரைன் நாட்டு மக்கள், அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி ஆகியோரிடம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கோபத்துடன் உங்களுக்கு எந்த எலான் மஸ்கை பிடிக்கும்.

ரஷ்யா ஆதரவு எலான் மஸ்கா அல்லது உக்ரைன் ஆதரவு எலான் மஸ்கா என ட்விட்டரில் போட்டி வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

எலான் மஸ்கின் இந்த யோசனையால் போரில் உறுதியுடன் போராடி கொண்டிருக்கும் உக்ரைன் மக்கள் பலரும் தியாகத்தை கொச்சைப்டுத்துவதாக உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எலான் மஸ்க் - செலன்ஸ்கி
ரஷ்யா: நாட்டை விட்டு வெளியேறும் ஆண்கள்; துரத்தும் அதிபர்- என்ன நடக்கிறது அங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com