Work From Pub : வீட்டில் இல்லை, பாரில் இருந்த படி வேலை! - எப்படி செயல்படுகிறது இந்த முறை?

நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோமை பெரும் தொல்லையென கருதிவரும் இந்த சூழலில் வொர்க் ஃப்ரம் பப் என்ற புதிய முறை இங்கிலாந்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது ஒரு பாரிலேயே உங்கள் மடிக்கணினியுடன் சென்று நாள் முழுவதும் வேலை செய்யலாம்!
Work From Pub : வீட்டில் இல்லை, பாரில் இருந்த படி வேலை! - எப்படி செயல்படுகிறது இந்த முறை?
Work From Pub : வீட்டில் இல்லை, பாரில் இருந்த படி வேலை! - எப்படி செயல்படுகிறது இந்த முறை?Twitter
Published on

சமீபத்தில் பெரு நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோமை விடுத்து அலுவலகத்துக்கு வர அழைப்புவிடுப்பதைப் பார்த்து வருகிறோம்.

குறைந்தது வாரத்துக்கு 3 நாட்களாவது அலுவலகத்துக்கு வருமாறு சில நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன.

நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோமை பெரும் தொல்லையென கருதிவரும் இந்த சூழலில் வொர்க் ஃப்ரம் பப் என்ற புதிய முறை இங்கிலாந்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது ஒரு பாரிலேயே உங்கள் மடிக்கணினியுடன் சென்று நாள் முழுவதும் வேலை செய்யலாம்!

பொதுவாகவே ஸ்டார் பக்ஸ் போன்ற பெரிய காபி ஷாப்கள் தங்களது வளாகத்தில் அமர்ந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன. அதிக நேரம் அங்கு செலவிடும் போது, அதிக வியாபாரமாகும் என்பது தான் கணக்கு.

இதன் நீட்சியாகவே வொர்க் ஃப்ரம் பப் முறை இருக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்தால் வீட்டு வேலைகளை எளிதாக செய்ய முடியும், பயண செலவு மற்றும் நேரம் மிச்சமாகும், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும். ஆனால், இந்த நன்மைகள் எதுவுமே இல்லாத வொர்க் ஃப்ரம் பப் முறை ரிலாக்சேஷன் அடிப்படையிலேயே செயல்படுகிறது.

Work From Pub : வீட்டில் இல்லை, பாரில் இருந்த படி வேலை! - எப்படி செயல்படுகிறது இந்த முறை?
இளைஞர்களை மது அருந்த ஊக்குவிக்கும் ஜப்பான் அரசு - என்ன காரணம்?

தங்கள் பப்புக்கு வரும் ஏதோ ஒரு கார்பரேட் நிறுவனத்தின் ஊழியரை நன்றாக கவனித்துக்கொள்வதில் பார்கள் கவனம் செலுத்துகின்றன.

சில பார்கள் இதனை முக்கிய வியாபார உத்தியாக கொண்டிருக்கின்றன. Young's pubs, Fuller's Brewery, B&K - Microbrewery and British Pub போன்ற Pub-கள், `வொர்க் ஃப்ரம் பப்' என்பதை அதிக அளவில் விளம்பரப்படுத்தியும், விரிவுபடுத்தியும் வருகின்றன.

Work From Pub : வீட்டில் இல்லை, பாரில் இருந்த படி வேலை! - எப்படி செயல்படுகிறது இந்த முறை?
இந்த உலகில் இன்னும் எவ்வளவு தங்கம் மிச்சம் இருக்கிறது தெரியுமா?

இதில் Fuller's Brewery, தங்களின் 380 Pub-களில் ஒரு நாளைக்கு வெறும் 10 பவுண்டுக்கு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.900-க்கு மதிய உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்குகிறது. மேலும் B&K - Microbrewery and British Pub, அதே 10 பவுண்டுக்கு `workspace'-ஐ வழங்குகிறது. இந்த workspace-ல் WiFi, power sockets, ப்ரின்டிங் மற்றும் அன்லிமிடெட் சூடான மற்றும் குளிர்ச்சியான பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

இப்படி பல வசதிகளை அளிப்பதன் மூலம் பப்களை பாதி ஆபிஸ்களாக மாற்றியிருக்கின்றனர்.

Work From Pub : வீட்டில் இல்லை, பாரில் இருந்த படி வேலை! - எப்படி செயல்படுகிறது இந்த முறை?
Open Relationship : மேற்குலகின் பாலியல் மோகம் - இந்தியாவுக்கும் பரவுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com