Open Relationship : மேற்குலகின் பாலியல் மோகம் - இந்தியாவுக்கும் பரவுமா?

அமெரிக்காவில் வெகு சிலர் பலதார மண உறவை ஆதரிக்கின்றனர் என்றாலும் ஓபன் ரிலேஷன்ஷிப் என்பது அதிலிருந்து மாறுபட்டது.
Open Relationship : மேற்குலகின் பாலியல் மோகம் - இந்தியாவுக்கும் பரவுமா?
Open Relationship : மேற்குலகின் பாலியல் மோகம் - இந்தியாவுக்கும் பரவுமா?Twitter

திருமண உறவுகளை நம் ஊரில் புனிதமாக பார்க்கக் கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். விவாகரத்து முதல் லிவ் இன் ரிலேஷன்ஷிப் வரை பல உறவு முறைகள் மேற்கிலிருந்து வந்தவை.

இப்போது EMA - Extra Marital Affairs முதலான பல உறவு முறை விஷயங்கள் நம் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல டாபூக்களை உடைத்து வருகிறது இளைய சமுதாயம்.

சமூக வலைத்தளங்களும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களும் மேற்கின் பழக்கவழக்கங்களை நமக்கு கடத்தப்படுவதை இன்னும் விரைவாக்கி வரும் சூழலில் இப்போது அங்கு விவாதிக்கப்பட்டு வரும் Open Relationship பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது குறிப்பிடத்தக்கது.

விவாதம் எனும் போதிலேயே இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதனை நாம் கவனிக்க வேண்டும்.

Open Relationship என்பது என்ன?

கிட்டத்தட்ட தசாப்தகாலமாக அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த விவாதம் நடைபெற்று வருகிறது. என்றாலும் இப்போது மக்களுக்கு இதன் மீதான மோகம் அதிகரித்திருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

Open Relationship அதிகரிப்புக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய உளவியல் பாதிப்புகளும் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் வெகு சிலர் பலதார மண உறவை ஆதரிக்கின்றனர் என்றாலும் ஓபன் ரிலேஷன்ஷிப் என்பது அதிலிருந்து மாறுபட்டது.

Jealous
JealousCanva

'கேட்காதே சொல்லாதே'

மண வாழ்க்கை அல்லது எமோஷனல் கன்னெக்ட் ஒருவரிடம் மட்டுமே இருந்தாலும் பாலியல் தேவைக்காக மற்றொருவரை நாடுவது ஓபன் ரிலேஷன்ஷிப் என சிலர் வரையறுக்கின்றனர்.

சிலர் இதனை Friends with Benefits முறை ரிலேஷன்ஷிப்பாகவும், சிலர் டேடிங் பார்ட்னர் வைத்துக்கொள்வதாகவும், சிலர் ஏதாவது ஒருமுறை தனது துணையை மற்றவருடன் உறவுகொள்ள அனுபதிப்பதாகவும் கருதுகின்றனர்.

மக்களது பாலியல் கற்பனைகள் அதிகரிப்பு இந்த ஓபன் ரிலேஷன்ஷிப்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பாலியல் ரீதியில் தனது துணையைத் தாண்டிய ஒருவருடன் பழகுவது பாலியல் அனுபவங்களை வழங்குவதாக சிலர் கூறுகின்றனர்.

Open Relationship : மேற்குலகின் பாலியல் மோகம் - இந்தியாவுக்கும் பரவுமா?
உடலுறவு : ‘ஃபிங்கரிங்’ செய்வது என்றால் என்ன? | Nalam 360

பல தம்பதிகள் இந்த விவகாரத்தில் கேட்காதே சொல்லாதே பாணியைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் யாரும் தங்களது பாலியல் துணையைப் பற்றிய விவரங்களை, பாலியல் அனுபவங்களை துணையுடன் பகிர்ந்துகொள்வதில்லை.

ஓபன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் சிலர் தங்களை பை-செக்சுவல் ( இரு பால் உறவுமுறை ) அல்லது பான் செக்சுவல் உறவுமுறை கொண்டவராக வெளிப்படுத்துகின்றனர்.

Dating app
Dating appcanva

டேட்டிங் ஆப்களின் பங்கு

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கு நாடுகளில் டேட்டிங் ஆப்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆப்களின் தரவுகள் ஓபன் ரிலேஷன்ஷிப் மீதான மக்களின் ஆர்வத்தினை எடுத்துக் கூறுகின்றன.

'OkCupid' ஒரு பாரம்பரிய டேடிங் ஆப். கடந்த 2021ம் ஆண்டு இந்த ஆப்பில் பலதார உறவுமுறையானது 7% அதிகரித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஓபன் ரிலேஷன்ஷிப் குறித்து 'OkCupid' தளம் பிரிட்டனைச் சேர்ந்த 1 மில்லியன் மக்களிடம் கருத்து கேட்டதில் 31% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற டேட்டிங் ஆப்களிலும் ஓபன் ரிலேஷன்ஷிப் வேகமாக அதிகரித்து வருகிறது.

இப்போதைய இளையர்களிடம் இருக்கும் எதையும் கேள்வி கேட்கும் தன்மை ஓபன் ரிலேஷன்ஷிப்புக்கு எதிரான கலாச்சார கட்டுப்பாடுகள் மீதும் பாய்ந்திருக்கிறது.

Open Relationship : மேற்குலகின் பாலியல் மோகம் - இந்தியாவுக்கும் பரவுமா?
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

விளைவுகள் என்ன?

பலதார உறவுமுறையும் சரி, ஓபன் ரிலேஷன்ஷிப்பும் சரி எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் இந்த வகையான உறவுமுறை சமூகத்திலும் எதிர்மறையான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதனால் ஓபன் ரிலேஷன்ஷிப் பற்றிய பாலியல் கற்பனைகள் கட்டுப்படுத்தப்பட முடியாது என்றாலும் இளைஞர்கள் ஈடுபதுவது குறைக்கப்படுகிறது. மத நம்பிக்கையும் இது போன்ற உறவுகளை கட்டுப்படுத்துவதாக இருக்கிறது.

கனடாவில் 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 4% பேர் ஓபன் ரிலேஷன்ஷிபில் ஈடுபடுகின்றனர். இது கொரோனா தோற்றுக்கு பின்னர் எந்த அளவு அதிகரித்திருக்கிறது என்பது தெரியவில்லை.

Open Relationship : மேற்குலகின் பாலியல் மோகம் - இந்தியாவுக்கும் பரவுமா?
உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்?

இளைஞர்களிடம் ஓபன் ரிலேஷன்ஷிப் குறித்த ஆர்வம் அதிகரித்திருந்தாலும் உலகம் எங்கும் பரவ வாய்ப்புகள் மிகக் குறைவு என்கிறார் கின்சி இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளரும் செக்ஸ் மற்றும் சைக்காலஜி பாட்காஸ்டின் தொகுப்பாளருமான டாக்டர் ஜஸ்டின் லெஹ்மில்லர்.

அதே நேரத்தில் 'OkCupid' செயலியின் உலகளாவிய தகவல் தொடர்பு செயலர் மைக்கெல் கேய், உறவுகளில் தங்களுக்கு என்ன தேவை என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாக கூறிகிறார். மற்றவற்களைப் பற்றிய கவலைகள் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கும் அவர் பார்வையில் ஓபன் ரிலேஷன்ஷிப் இன்னும் பெருகலாம்.

மாறுபட்ட கருத்துகள் நிலவுவதனால் ஓபன் ரிலேஷன்ஷிப் இந்தியாவுக்கு அறிமுகமாகுமா என்பது கேள்விகுறிதான். இந்தியாவின் கலாச்சார விழுமியங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Open Relationship : மேற்குலகின் பாலியல் மோகம் - இந்தியாவுக்கும் பரவுமா?
பாலியல் சுற்றுலா : ஏழை நாடுகளைச் சுரண்டும் மேற்குலக நாடுகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com