நம் காலத்துக்கு பல்லாண்டு முன்பு வாழ்ந்த டைனோசர்கள் பற்றித் தெரிந்துகொள்வது நமக்கு எப்போதுமே ஆர்வமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் அழிந்து போன அந்த உயிரினத்திடம் மனிதர்கள் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.
டைனோசர்கள் பற்றிய சமீபத்திய கண்டுப்பிடிப்புகளில் ஒன்று முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் 125 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் ஏஜென்சியின் பொறியாளர்கள் குழு (அரசாங்க அமைப்பு) வைட் தீவில் உள்ள யாவர்லேண்ட் கடற்பகுதியில் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது இந்த புதைபடிவங்களை கண்டுபிடித்துள்ளனர்.
125 மில்லியன் ஆண்டுகள் பழமையான கால்தடங்கள் 7 மீட்டர் நீளம் கொண்ட ஒரு தாவரவகை டைனோசரான மாண்டெலிசரஸுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.
கடற்கரையோர ஓட்டலுக்கு அருகில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தில் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் டைனோசர் தீவு அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளரான மார்ட்டின் மண்ட், ஐல் ஆஃப் வைட்டை ( தீவு) டைனோசர் இருப்பிடமாகக் குறிப்பிட்டார்.
இந்த தீவில் 35 வகையான டைனோசர் எச்சங்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். காலடித் தடங்களுக்கு சொந்தமான குறிப்பிட்ட டைனோசர் இனங்களைத் திட்டவட்டமாகத் தீர்மானிக்க முடியாவிட்டாலும், வைட் தீவில் ஒரு மாண்டெலிசரஸ் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 1917 ஆம் ஆண்டு ஐல் ஆஃப் வைட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மாண்டெலிசரஸ் எலும்புக்கூடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மிகவும் விரிவான டைனோசர் எலும்புக்கூடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust