4 ஆண்டுகள் காட்டுக்குள் மறைவு; சுகாதாரமற்ற வாழ்க்கை - முன்னாள் ஈழ போராளியின் அவலநிலை

மீட்கப்பட்ட அந்த நபர், மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பாளைக்கு உட்பட்ட தாந்தாமலை காட்டுப்பகுதியில் வாழ்ந்துவந்திருக்கிறார். அந்த காட்டுப்பாதை வழியாக செல்பவர்கள் இவரை பாலா என அழைத்திருக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளாக குளிக்காமல் காட்டில் வாழ்ந்த முன்னாள் போராளி - மீட்கப்பட்ட கதை என்ன?
நான்கு ஆண்டுகளாக குளிக்காமல் காட்டில் வாழ்ந்த முன்னாள் போராளி - மீட்கப்பட்ட கதை என்ன?ட்விட்டர்
Published on

மனநலம் பாதிக்கப்பட்டு, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, மனிதர்களை கண்டாலே ஓடி ஒளிந்து, நான்கு வருடங்களாக தனிமையில் காட்டுக்குள் வாழ்ந்துக் கொண்டிருந்த முன்னாள் விடுதலை புலிகளின் போராளி ஒருவர் மீட்க்கப்பட்டுள்ளார்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் துணை தலைவரான என். நகுலேஸ் முன்னாள் போராளியை மீட்ட கதையினை பிபிசி ஊடகத்திற்கு அளித்திருந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

மீட்கப்பட்ட அந்த நபர், மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பாளைக்கு உட்பட்ட தாந்தாமலை காட்டுப் பகுதியில் வாழ்ந்ய்திருக்கிறார். அந்த காட்டுப்பாதை வழியாக செல்பவர்கள் இவரை பாலா என அழைத்துள்ளர்.

தாந்தாமலை பகுதியில் றெட்பாணா என்கிற கிராமத்துக்கு அருகில் இருக்கும் காட்டுப்பகுதியில் இவர் தனக்கென கொட்டகை ஒன்றை அமைத்துக்கொண்டு, காட்டில் கிடைத்த பழங்களை உண்டு வாழ்ந்திருக்கிறார். ஒரு சில சமயங்களில் அருகே இருந்த கிராமத்து மக்கள் இவருக்கு உணவு பொருட்களை அளித்துவந்துள்ளனர்.

தனிமையில் வாழ்ந்த பாலா, எந்த வித கட்டுப்பாடுமின்றி, வரையறைகளும் இன்றி இருந்திருக்கிறார்.

நான்கு ஆண்டுகளாக குளிக்காமல் காட்டில் வாழ்ந்த முன்னாள் போராளி - மீட்கப்பட்ட கதை என்ன?
சீனா: ரூ.1800 திருடிவிட்டு 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த நபர் - இப்போது வெளியேவர காரணமென்ன?

வழங்கப்படும் உணவுபொருட்களை சுகாதரமற்ற நிலையில் இவர் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். ஒரு முறை ஒரு பாத்திரத்தில் சமைத்தால், அந்த பாத்திரத்தை அவர் கழுவுவது இல்லை. மீண்டும் அதே பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவாராம்.

இப்படியாக இந்த நான்கு ஆண்டுகளில் குளிக்காமல், முடிவெட்டாமல், தேவையான உறக்கமின்றி இருந்துவந்துள்ளார். தொடக்கத்தில் மனிதர்களுடன் பேசி பழகி வந்த பாலா, மெல்ல தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளார். மனிதர்களை கண்டால் ஓடி ஒளிந்துகொள்ளத்தொடங்கினார் எனக் கூறப்படுகிறது.

இவர் இருந்த பகுதியில் காட்டு விலங்குகள், முக்கியமாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருக்குமாம்.

பாலாவை பற்றி தகவல் அறிந்த ஜனநாயக போராளிகள் கட்சியினர் அவரை மீட்க முடிவு செய்து, அவர் இருந்த காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். இவர்களை கண்டதும் கூட பாலா ஒளிந்துக்கொண்டார்.

மீட்பாளர்கள் வெகு நேரம் வரை அவருக்காக காத்திருந்து, “நீங்கள் எங்களுடன் இருந்தவர்” என்றுக் கூறி பல முறை அவருக்கு புரியவைக்க முடிவுசெய்துள்ளனர். எனினும் அவர் வெளிவரவில்லை.

மீண்டும் மீண்டும் முயற்சித்து அவரை நெருங்கினர். அருகில் சென்றபோதும் பாலா, “நீங்கள் வரவேண்டாம்” என்று அவர்களை தடுத்துள்ளார். எனினும், பணம் ஏதேனும் தருவதானால் தந்துவிட்டு பிஸ்கெட் சாப்பிட்டு செல்லுங்கள் என்று அன்போடு உபசரித்திருக்கிறார்.

நான்கு ஆண்டுகளாக குளிக்காமல் காட்டில் வாழ்ந்த முன்னாள் போராளி - மீட்கப்பட்ட கதை என்ன?
Marina Chapman: 10 வருடங்களாக குரங்குகளோடு காட்டில் வளர்ந்த பெண் - மனதை உலுக்கும் கதை!

மூன்று நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தான் பாலாவை இவர்களால் அணுகமுடிந்தது.

”பாலா வா” என்று அருகில் அழைத்து, அவரது போராட்டங்களை பற்றியும், அவர் யார் என்பது குறித்தும் அவர்களுக்கு விவரித்துள்ளனர்.

“நீ ஒரு முன்னாள் போராளி. உன் பிரச்னை என்னவென்று கூறு, நாங்கள் உதவுகிறோம்” என்றிருக்கின்றனர் மீட்பாளர்கள்.

ஆனால் தான் நன்றாக இருப்பதாகவும், எந்த பிரச்னையும் இல்லை, முடியை எல்லாம் வெட்ட முடியாது என்றிருக்கிறார் பாலா. ஒரு வழியாக அவரிடம் பேசி மனதை மாற்றி ஊருக்குள் அழைத்துவந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் மூலமாக ஏறாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். சுகாதார அதிகாரிகளுக்கும் தகவலளிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார் பாலா. அவரது உட்ல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நான்கு ஆண்டுகளாக குளிக்காமல் காட்டில் வாழ்ந்த முன்னாள் போராளி - மீட்கப்பட்ட கதை என்ன?
9/11 தாக்குதல்: கைதிகளாக 20 ஆண்டுகள் சிறையில் இருந்த இஸ்லாமியர்கள், நிரபராதிகள் என விடுதலை

மற்றொரு புறம், சில சமூக ஊடகங்கள் பாலாவைப் பற்றி தவறான தகவல்களை பகிர்ந்து பணம் பறிக்க முயற்சிப்பதாக ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான செயல்கள் போராளிகளின் தியாகத்தை அவமதிப்பதாக இருக்கின்றன எனவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். பாலாவுக்கு உதவ யாரேனும் முன்வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

நான்கு ஆண்டுகளாக குளிக்காமல் காட்டில் வாழ்ந்த முன்னாள் போராளி - மீட்கப்பட்ட கதை என்ன?
”நாடோடி, நவீன குகைமனிதன்” 16 ஆண்டுகளாக வீட்டைவிட்டு குகையில் வாழ்ந்த நபர் - எதற்காக?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com